உலகம்

10 ஆண்டுகள்.. 51 ஆண்கள்.. மனைவிக்கு போதை மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்ய வைத்த கொடூர கணவன் கைது

மனைவிக்கே தெரியாமல் அவரை மற்ற ஆண்களுடன் பாலியல் உறவு கொள்ள வைத்துள்ள கணவரின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

10 ஆண்டுகள்.. 51 ஆண்கள்.. மனைவிக்கு போதை மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்ய வைத்த கொடூர கணவன் கைது
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

பிரான்ஸ் நாட்டை சேர்ந்தவர் டொமினிக். இவருக்கு சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்னரே திருமணமான நிலையில், 3 குழந்தைகளும் உள்ளனர். இந்த சூழலில் இவர் தனது மனைவியை மற்ற ஆண்களுக்கு பாலியல் உறவு கொள்ள அனுமதித்துள்ளார். அதாவது, இவரது பிள்ளைகள் வீட்டில் இல்லாத சமயத்தில் இவர், இவரது மனைவிக்கு இரவு சாப்பாட்டில் லோராசெபம் என்ற மருந்தை கலந்து கொடுத்துள்ளார்.

அதனை சாப்பிட்ட மனைவி மயக்க நிலைக்கு சென்றுள்ளார். இதையடுத்து அவரை தனது வீட்டின் பெட் ரூமுக்கு அழைத்து சென்று வெளியில் இருந்து ஆண்களை வரவழைத்து தனது மனைவியுடன் பாலியல் உறவு கொள்ளை வைத்துள்ளார். இவ்வாறாக கடந்த 2011 முதல் 2020-ம் ஆண்டு வரை செய்து வந்துள்ளார். சுமார் 10 ஆண்டுகளாக தனது மனைவியை அவருக்கே தெரியாமல் இவ்வாறு பயன்படுத்தி வந்துள்ளார்.

10 ஆண்டுகள்.. 51 ஆண்கள்.. மனைவிக்கு போதை மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்ய வைத்த கொடூர கணவன் கைது

25 முதல் 75 வயது வரையுள்ள ஆண்கள் இதில் தொடர்புள்ளவர்களாக இருக்கின்றனர். இவர்களுக்கு சில நிபந்தனைகளும் டொமினிக் விதித்துள்ளார். அதாவது, வீட்டுக்கு சொந்த வாகனத்தில் வரக்கூடாது; வெளியில் இருந்து வருவதால் கை குளிர்ந்து காணப்படும் என்பதால், வெந்நீரில் கைகளை கழுவ வேண்டும்; ஆடைகளை படுக்கையறையில் கழற்றக்கூடாது; புகையிலை போன்ற எதனையும் பயன்படுத்த கூடாது என பலவற்றை விதித்துள்ளார்.

10 ஆண்டுகளாக தனது மனைவிக்கு இவர் செய்து வந்த கொடூரத்தை வீடியோவாகவும் எடுத்துள்ளார். இதுவரை இந்த வழக்கில் ஐடி ஊழியர்கள், லாரி டிரைவர், பெரிய பணக்காரர்கள் என சுமார் 51 பேர் கண்டறியப்பட்டுள்ளனர். அவர்களை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

10 ஆண்டுகள்.. 51 ஆண்கள்.. மனைவிக்கு போதை மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்ய வைத்த கொடூர கணவன் கைது

கடந்த 2020-ம் ஆண்டு அங்கிருக்கும் கடை ஒன்றில் உடை மாற்றும் அறையில் ரகசிய கேமரா வைத்த குற்றச்சாட்டில் டொமினிக்கை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொண்டு, அவரது வீட்டிலும் நடந்த சோதனையில் தான் இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது. இந்த வீடியோக்களை போலீசார் கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.

இருப்பினும் இந்த நிகழ்வு குறித்து குற்ற செயலில் ஈடுபட்ட ஆண்களுக்கு தெரியாது என்றும், அந்த பெண்ணுக்கு விருப்பத்தோடுதான் நாங்கள் பாலியல் உறவு கொண்டதாகவும் போலீசிடம் தெரிவித்துள்ளனர். இருப்பினும் இதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மனைவிக்கே தெரியாமல் அவரை மற்ற ஆண்களுடன் பாலியல் உறவு கொள்ள வைத்துள்ள கணவரின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories