உலகம்

ரஷ்யாவுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்திய உக்ரைன்.. கடும் கோவத்தில் ரஷ்யா.. அடுத்து நடக்கப்போவது என்ன ?

உக்ரைன் தன்னார்வ படைகள் ரஷ்யாவுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியதாக ரஷ்யா குற்றம்சாட்டியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரஷ்யாவுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்திய உக்ரைன்.. கடும் கோவத்தில் ரஷ்யா.. அடுத்து நடக்கப்போவது என்ன ?
LIBKOS
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

ரஷ்யா - உக்ரைன் இடையேயான போர் தற்போது ஒரு வருடத்தை தாண்டியும் தற்போது உக்கிரமான நடந்து வருகிறது. வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி என மும்முனை தாக்குதலை நடத்துவதால் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. உக்ரைன் நாட்டின் ஏராளமான இராணுவ இலக்குகளை ரஷ்யப் படைகள் தாக்கி அழித்துள்ளன.

அதேபோல் உக்ரைன் தங்களைத் தற்காத்துக்கொள்ள, ரஷ்யப் படைகளுக்குப் பதிலடி கொடுத்து வருகிறது. எனினும் உக்ரைனின் மேற்கு பகுதியில் பெரும்பாலான பகுதிகள் ரஷ்ய கட்டுப்பாட்டின் கீழ் வந்துள்ளன. போர் தொடங்கியதிலிருந்து அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவாக ஆயுதங்களை வழங்கி வருகின்றன.

ரஷ்யாவுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்திய உக்ரைன்.. கடும் கோவத்தில் ரஷ்யா.. அடுத்து நடக்கப்போவது என்ன ?

இதுதவிர உக்ரைனுக்கு ஆதரவாக ரஷ்யா மீது பொருளாதாரத் தடையும் விதித்துள்ளனர். இத்தனையும் மீறி ரஷ்யா தொடர்ந்து போரைத் தொடர்ந்து வருகிறது. அதேபோல உக்ரைனும் பின்வாங்காமல் தொடர்ந்து ரஷ்யாவை எதிர்த்துப் போரிட்டு வருகிறது. , உக்ரைனுக்கு ஆதரவாக ஐரோப்பிய நாடுகள் வலுவான அதிநவீன லெப்பா்ட்-2 பீரங்கிகளை உக்ரைனுக்கு வழங்கிய நிலையில், இது மோதலை அடுத்த கட்டத்துக்கு எடுத்துசென்றுள்ளது.

இந்த நிலையில், தற்போது உக்ரைன் தன்னார்வ படைகள் ரஷ்யாவுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியதாக ரஷ்யா குற்றம்சாட்டியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உக்ரைன் எல்லையில் உள்ள ரஷ்யா மாகாணமான பேல்கராடுவில் திடீரென உக்ரைன் ஆதரவு படையினர் நுழைந்து தாக்குதல் நடத்தியதாகவும் பின்னர் அந்த படைகள் விரட்டியடிக்கப்பட்டதாகவும் ரஷ்யா அறிவித்துள்ளது.

ரஷ்யாவுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்திய உக்ரைன்.. கடும் கோவத்தில் ரஷ்யா.. அடுத்து நடக்கப்போவது என்ன ?

மேலும், இந்த தாக்குதலில் 8 ரஷ்யா குடிமக்கள் கொல்லப்பட்டதாகவும், தாக்குதல் நடத்திய 70 உக்ரைன் ஆதரவுப் படையினர் கொல்லப்பட்டு மீதம் இருந்தவர்கள் உக்ரைனுக்குள் விரட்டி அடிக்கப்பட்டனர் என்றும் ரஷ்யாவின் செய்தித் தொடர்பாளர் டிமித்ரி பெஸ்கோவ் தெரிவித்துள்ளார்.

அதேநேரம் இந்த தாக்குதலை நாங்கள் நடத்தவில்லை என்று உக்ரைன் மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும், ரஷ்யாவை சேர்ந்த புரட்சி குழுக்கள்தான் இந்த தாக்குதலை நடத்தியதாகவும் உக்ரைன் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என ரஷ்யா அறிவித்துள்ள நிலையில், அது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories