இந்தியா

30 குழந்தைகள் வன்கொடுமை.. வெட்டப்பட்ட அந்தரங்க உறுப்பு.. நாட்டை உலுக்கிய சம்பவத்தில் நீதிமன்றம் தீர்ப்பு!

30 குழந்தைகள் வன்கொடுமை.. வெட்டப்பட்ட அந்தரங்க உறுப்பு.. நாட்டை உலுக்கிய சம்பவத்தில் நீதிமன்றம் தீர்ப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் ரவீந்தர் குமார். 6-ம் வகுப்பை பாதியிலிலேயே முடித்த இவர், குடும்ப சூழ்நிலை காரணமாக வேலைக்கு சென்றுள்ளார். இவருக்கு பெடோபிலியா (paedophilia) என்ற டிஸார்டர் இருந்துள்ளது. இந்த டிஸார்டர் உள்ளவர்களுக்கு சிறுவர் - சிறுமிகள் மீது பாலியல் ரீதியான ஆசை இருக்கும். எனவே, ரவீந்தர் குமாருக்கும் சிறுவர் சிறுமிகள் மேல் பாலியல் ஆசை இருந்துள்ளது.

இதனால் ரவீந்தர் குமார் சிறுவர் - சிறுமிகளை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார். மேலும் அந்த குழந்தைகளை கொலையும் செய்து வந்துள்ளார். இப்படியே தொடர்ந்து செய்து வந்த இவர், கடந்த 2015-ம் ஆண்டு போலீசாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டார். அவரிடம் விசாரணை மேற்கொள்ளும்போது தான் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

30 குழந்தைகள் வன்கொடுமை.. வெட்டப்பட்ட அந்தரங்க உறுப்பு.. நாட்டை உலுக்கிய சம்பவத்தில் நீதிமன்றம் தீர்ப்பு!

அதாவது சிறுவயதிலேயே வேலைக்கு சென்ற இவர், தனது ஆசையை கட்டுப்படுத்த முடியாமல் அங்கிருக்கும் சிறுவர் - சிறுமிகளை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இவாறு தான் இருக்கும் இடத்திற்கு அருகிலேயே இப்படி செய்தால், மாட்டி கொள்வோம் என்ற எண்ணத்தில் சுமார் 40 கிலோமீட்டர் நடந்து சென்று குழந்தைகளை தேர்ந்தெடுத்து அவர்களிடம் சாக்லேட், கேக் உள்ளிட்ட தின்பண்டங்களை கொடுத்து தனியாக கூட்டி சென்று மயக்கமடைய செய்து தனது ஆசையை தீர்த்து வந்துள்ளார்.

30 குழந்தைகள் வன்கொடுமை.. வெட்டப்பட்ட அந்தரங்க உறுப்பு.. நாட்டை உலுக்கிய சம்பவத்தில் நீதிமன்றம் தீர்ப்பு!

சில நேரங்களில் சில குழந்தைகள் தன்னை பார்த்து வெளியே கூறி விடுமோ என்ற பயத்தில் அவர்களை கொலையும் செய்துள்ளார். பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் கிராமங்களை சேர்ந்தவர்கள் என்பதால் மானம் போய்விடுமோ என்ற பயத்தில் வெளியில் கூறாமல் இருந்து வந்துள்ளனர். இதனால் பயம் எதுவும் இன்றி, சிறார்களை குறி வைத்து தனக்கு பிடித்த பிள்ளைகளை தேர்ந்தெடுத்து பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார்.

30 குழந்தைகள் வன்கொடுமை.. வெட்டப்பட்ட அந்தரங்க உறுப்பு.. நாட்டை உலுக்கிய சம்பவத்தில் நீதிமன்றம் தீர்ப்பு!

அதுமட்டுமின்றி கடந்த 2011-ம் ஆண்டு டெல்லியிலுள்ள கஞ்சவாலா, முண்ட்கா ஆகிய இடங்களில் இரண்டு குற்றங்களைச் செய்ததும், 2012-ம் ஆண்டு அலிகாரில் நடந்த திருமண விழாவின்போது தன் அத்தையைப் பார்க்கச் சென்றபோது உறவினருக்குத் தெரிந்த இரண்டு 14 வயது சிறுவர்களைக் குறிவைத்துத் தாக்கி பாலியல் வன்கொடுமை செய்ததும் தெரியவந்தது.

30 குழந்தைகள் வன்கொடுமை.. வெட்டப்பட்ட அந்தரங்க உறுப்பு.. நாட்டை உலுக்கிய சம்பவத்தில் நீதிமன்றம் தீர்ப்பு!

அதோடு 2008 முதல் 2015-ம் ஆண்டு வரை சுமார் 30 குழந்தைகளைக் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார் ரவீந்தர் குமார். இந்த சூழலில் அவர் கைது செய்யப்படும் சில மாதங்களுக்கு முன்னதாக சிறுமி ஒருவரது சடலம் போலீசாருக்கு கிடைத்தது. அதனை விசாரிக்கும்போது சந்தேகம் வலுத்தது. தொடர்ந்து சில நாட்களிலேயே 14 வயது சிறுவன் ஒருவரது உடல் அந்தரங்க உறுப்பு வெட்டப்பட்ட நிலையில், சாக்கடைக்குள் இருந்து மீட்கப்பட்டது.

30 குழந்தைகள் வன்கொடுமை.. வெட்டப்பட்ட அந்தரங்க உறுப்பு.. நாட்டை உலுக்கிய சம்பவத்தில் நீதிமன்றம் தீர்ப்பு!

அந்த வழக்கு குறித்தும் விசாரிக்கையில், அந்த பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளில் ரவீந்தர் குமார் இருந்துள்ளார். இதைத்தொடர்ந்து விசாரிக்கும்போது ரவீந்தர் குமார் வசமாக சிக்கியுள்ளார். இதையடுத்து டெல்லியின் ரோகிணிக்கு அருகிலுள்ள சுக்பீர் நகர் பேருந்து நிலையத்திலிருந்து ரவீந்தர் குமார் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.

பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இது குறித்த வழக்கு சுமார் 8 ஆண்டுக்களாக நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இவரை நீதிமன்றம் ஒரு வழக்கில் குற்றவாளி என்றும் தீர்ப்பளித்திருக்கிறது. இந்த வழக்கில் ரவீந்தருக்கு மரண தண்டனை கிடைக்கும் என்று பொதுமக்கள் கருத்து தெரிவித்து வந்தனர்.

30 குழந்தைகள் வன்கொடுமை.. வெட்டப்பட்ட அந்தரங்க உறுப்பு.. நாட்டை உலுக்கிய சம்பவத்தில் நீதிமன்றம் தீர்ப்பு!

இந்த நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு நேற்று வெளியானது. அதில் குற்றவாளி ரவீந்தர் குமாருக்கு ஆயுள் தண்டனை விதித்து டெல்லி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த தீர்ப்பால் மக்கள் பெரும் அதிருப்தியில் உள்ளனர்.

banner

Related Stories

Related Stories