உலகம்

தொடர்ந்து குறையும் மக்கள் தொகை.. மூன்றில் ஒன்றாக உயர்ந்த முதியவர் எண்ணிக்கை.. ஜப்பான் அரசு அதிரடி முடிவு!

கிழக்கு ஆசிய நாடான ஜப்பான் மற்றும் தென் கொரியாவும், மக்கள் தொகை குறைந்து வருவதால் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது.

தொடர்ந்து குறையும் மக்கள் தொகை.. மூன்றில் ஒன்றாக உயர்ந்த முதியவர் எண்ணிக்கை.. ஜப்பான் அரசு அதிரடி முடிவு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

ஒருகாலத்தில் மக்கள் தொகை பெருக்கம் பெரும் உலகளாவிய அபாயமாக கருதப்பட்டது. மக்கள் தொகை அதிகரித்தால் நாட்டில் பொருளாதார வளர்ச்சி குறையும் என்றும், நாட்டில் உணவு பற்றாக்குறை ஏற்படும் என்றும் கூறப்பட்டது. இதனால் மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்த பல்வேறு நாடுகளின் அரசுகள் பல்வேறு திட்டங்களை கொண்டுவந்தன.

இந்தியாவிலும் 80களில் மக்கள் தொகை கட்டுப்பாடு தீவிரமாக அமல்படுத்தப்பட்டது. 'நாம் இருவர் நமக்கு ஒருவர்' போன்ற விளம்பரங்களும், குடும்ப கட்டுப்பாடு திட்டமும் கொண்டுவரப்பட்டது. அதே போல சீனாவிலும் மக்கள் தொகை கட்டுப்பாடுகள் தீவிரமாக அமல்படுத்தப்பட்டது.

தொடர்ந்து குறையும் மக்கள் தொகை.. மூன்றில் ஒன்றாக உயர்ந்த முதியவர் எண்ணிக்கை.. ஜப்பான் அரசு அதிரடி முடிவு!

இதுபோல மேற்கத்திய நாடுகளிலும் இந்த திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு அங்கு மக்கள் தொகை பெருக்கம் கட்டுப்படுத்தப்பட்டது. ஆனால், நாளடைவில் அதீத மக்கள் தொகை கட்டுப்பாடும் தீவிர எதிர்விளைவுகளை ஏற்படுத்தும் என்றும், மக்கள் தொகை பெருக்கத்தை விட மக்கள் தொகை குறைவது பெரும் ஆபத்து என்றும் கண்டறியப்பட்டது.

இதனால் மக்கள் தொகை பெருக்கத்தை பெரிதும் குறைத்த மேற்கத்திய நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றன. இளைஞர்கள் குறைந்து முதியவர்கள் அதிகரித்த காரணத்தால், மேற்கத்திய நாடுகள் தற்போது தீவிர பிரச்சனைகளில் சிக்கியுள்ளன.

தொடர்ந்து குறையும் மக்கள் தொகை.. மூன்றில் ஒன்றாக உயர்ந்த முதியவர் எண்ணிக்கை.. ஜப்பான் அரசு அதிரடி முடிவு!

மேற்கத்திய நாடுகளை போல கிழக்கு ஆசிய நாடான ஜப்பான் மற்றும் தென் கொரியாவும், மக்கள் தொகை குறைந்து வருவதால் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது. அதிலும், ஜப்பானின் குழந்தை பிறப்பு விகிதம், முன்எப்போதும் இல்லாத அளவுக்கு வேகமாக சரிந்து வருகிறது.டந்த ஆண்டு, 15 லட்சத்து 80 ஆயிரம் பேர் உயிரிழந்த நிலையில், குழந்தை பிறப்பு 8 லட்சம் என்ற அளவில் கடுமையாக குறைந்துள்ளது.

இது போன்ற காரணங்களால் கடந்த, 2008-ல் 12 கோடியே 80 லட்சமாக இருந்த மக்கள் தொகை, தற்போது 12 கோடியே 46 லட்சமாக குறைந்துள்ளது. 65 வயதுக்கு மேல் உள்ளவர்களின் எண்ணிக்கை 29 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதனால் மக்கள் தொகையை பெறுக்க அந்நாடு தீவிர முன்னேற்பாடுகளில் இறங்கியுள்ளது. குழந்தை பிறப்பை அதிகரிக்க அதிகம் குழந்தைகளை பெறுபவர்களுக்கு பல்வேறு சலுகைகள் அறிவிக்கும் திட்டங்கள் விரைவில் ஜப்பானின் கொண்டுவரப்படும் என்று கூறப்படுகிறது.

banner

Related Stories

Related Stories