உலகம்

கிண்டலாக சிரித்தவர்கள் மீது துப்பாக்கிச் சூடு; 7 பேர் பலி: சைக்கோ நண்பர்களால் கதி கலங்கிய பிரேசில்! Video

பிரேசில் நாட்டில் விளையாட்டின் போது நடந்த மோதலில் 7 பேரை இளைஞர்கள் இரண்டு பேர் சுட்டுக்கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கிண்டலாக சிரித்தவர்கள் மீது துப்பாக்கிச் சூடு; 7 பேர் பலி: சைக்கோ நண்பர்களால் கதி கலங்கிய பிரேசில்! Video
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

பிரேசில் நாட்டில் மாட்டோ க்ரோசோவில் சினோப் சிட்டி பகுதி உள்ளது. இந்த பகுதியில் பில்லியர்ட்ஸ் விளையாட்டில் இளைஞர்கள் பணம் கட்டி விளையாடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். அப்போது எட்கர் ரிக்கார்டோ டி ஒலிவேரா மற்றும் எஸேகியாஸ் சௌசா ரிபேரோ என்ற இரண்டு இளைஞர்கள் அங்குச் சென்று விளையாடியதாக கூறப்படுகிறது.

இதில், ஒலிவேரா தொடர்ந்து ஆட்டத்தில் தோல்வி அடைந்துள்ளனர். இதனால் தனது நண்பர் சௌசா ரிபேரோவுடன் மீண்டும் விளையாடியுள்ளார். அப்போதும் இருவரும் தோற்றுள்ளார். இதனால் அங்கிருந்த சிலர் அவர்களை பார்த்து கிண்டல் செய்து சிரித்ததாகக் கூறப்படுகிறது.

கிண்டலாக சிரித்தவர்கள் மீது துப்பாக்கிச் சூடு; 7 பேர் பலி: சைக்கோ நண்பர்களால் கதி கலங்கிய பிரேசில்! Video

இதனால் ஆத்திரமடைந்த ஒலிவேரா தனது வாகனத்தில் மறைத்து வைத்திருந்த பெரிய ரக துப்பாக்கியை கொண்டு வந்து அங்கிருந்தவர்களை நோக்கி சரமாரியாக சுட தொடங்கியுள்ளார். இதில் சௌசா ரிபேரோவும் இணைந்து சுட தொடங்கியுள்ளார்.

இதில் சிரித்தவர்களை மட்டுமல்லாது அங்கிருந்த அனைவரையும் நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியதில், 6 பேர் சம்பவ இடத்திலேயே குண்டுகள் பாய்ந்து உயிரிழந்தனர். மேலும் சிலர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

முன்னதாக துப்பாக்கிச் சூட்டிற்கு பிறகு அங்கிருந்து இரண்டு பேரும் தப்பியோடியுள்ளனர். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த போலிஸார் உயிரிழந்தோர் மற்றும் காயமடைந்தோரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் அங்கிருந்த சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ளது. இதனையடுத்து சிசிடிவி காட்சிகளைக் கொண்டு போலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களை தேடும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் வைலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories