உலகம்

அமெரிக்காவில் பறந்த உளவு பலூன் விவகாரம்.. : பகீர் கிளப்பிய அமெரிக்க ராணுவம் - உண்மையை போட்டுடைத்த சீனா!

அமெரிக்காவில் பலூன் பறந்த விவகாரத்தில் சீனா விளக்கம் அளித்துள்ளது. ஆனால் சீனா அளித்த விளக்கத்தை அமெரிக்க ராணுவம் ஏற்காததால் இருநாடுகளிடையே மோதல் அதிகரித்துள்ளது.

அமெரிக்காவில் பறந்த உளவு பலூன் விவகாரம்.. : பகீர் கிளப்பிய அமெரிக்க ராணுவம் - உண்மையை போட்டுடைத்த சீனா!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

அமெரிக்கா உலக நாடுகளில் பெரும்பாலான நாடுகளை தனது கட்டுக்குள் வைத்திருக்கும் ஒரு வல்லரசு நாடு. வலதுசாரி ஜனநாயக நாடாக தன்னை பிரகடனப்படுத்தும் அமெரிக்கா, தனக்கு கீழ் கட்டுப்பாட்டில் இயங்காத நாடுகளில், ஆட்சியை கலைத்து தனக்கு தலையாட்டும் பொம்மையாக இருக்கும் ஆட்சியை நிறுவுவதே தனது வாடிக்கையாக கொண்டிருக்கும்.

அந்தவகையில், ரஷ்யா - உக்ரைன் போருக்கு, ரஷ்யாவிற்கு எதிராக உக்ரைன் நாட்டை போரிட ஆயுதம் கொடுத்து தூண்டிவிடும் வேலையை அமெரிக்கா செய்ததை உலகமே பார்த்தது. ஈரான், ஆப்கானிஸ்தான், வட கொரியா, கியூபா மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகளுக்கிடையே நடந்த பிரச்னைகள் அனைத்திற்கும் அமெரிக்காவின் தலையீடு இருந்தது என்பது நிதர்சனமான உண்மை.

அமெரிக்காவில் பறந்த உளவு பலூன் விவகாரம்.. : பகீர் கிளப்பிய அமெரிக்க ராணுவம் - உண்மையை போட்டுடைத்த சீனா!

இது ஒருபுறம் இருக்க, அமெரிக்காவுக்கு அவ்வபோது வட கொரியா மற்றும் சீனா ஆகிய இருநாடுகளும் குடைச்சல் கொடுத்து வருவதையும் பார்க்க முடிகிறது. அந்தவகையில், அமெரிக்காவின் அரசியல் நடவடிக்கைக்கு சீனா தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறது.

குறிப்பாக, சமீபத்தில் தைவான் விவகாரத்தில் தேவையில்லாமல் மூக்கை நுழைக்கும் முயற்சியில் அமெரிக்கா இறங்கியுள்ளது. அதன்படி, அமெரிக்காவின் சபாநாயகர் கடந்த ஆண்டு தைவானுக்குச் சென்றிருந்தார். சீனாவின் எச்சரிக்கையும் அடுத்து அமெரிக்கா தைவான் விவகாரத்தில் தலையிடுவதால், அமெரிக்கா சபாநாயகர் தைவான் சென்ற தினத்தில் ஜெட் விமானப் பயிற்சியை மேற்கொண்டு அமெரிக்காவை கலங்கடித்தது சீனா.

அமெரிக்காவில் பறந்த உளவு பலூன் விவகாரம்.. : பகீர் கிளப்பிய அமெரிக்க ராணுவம் - உண்மையை போட்டுடைத்த சீனா!

இதற்கு அமெரிக்கா மற்றும் அதன் ஆதரவு நாடுகள் கடும் கண்டனங்களை தெரிவித்தபோதும், கண்டுக்கொள்ளாத சீனா தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. அதேவேளையில், அமெரிக்காவும் மீண்டும் பிரச்சனையை தொடங்கும் விதமாக, அமெரிக்காவின் வெளியுறவுத்துறைச் செயலாளர் ஆண்டனி பிளங்கனை சீனாவுக்கு சுற்றுப்பயணம் அனுப்பவுள்ளதாகவும் தகவல் கசிந்தது.

இதனால் இரு நாடுகளுக்கும் மோதல் அதிகரிக்குமோ என்ற அச்சம் எழுந்துள்ள நிலையில், அமெரிக்காவின் வான்வெளி பரப்பில் ஒரு பலூன் பறந்த சம்பவம் அந்நாட்டு ராணுவத்தினர் மத்தியில் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகியது. இதனையடுத்து அந்த பலூன் குறித்து ஆய்வு செய்த அமெரிக்க ராணுவம், இந்த பலூன் சீனாவுடையது என்றும் தங்களை உளவு பார்க்க சீனா அனுப்பியுள்ளதாகவும் குற்றம்சாட்டியது.

அமெரிக்காவில் பறந்த உளவு பலூன் விவகாரம்.. : பகீர் கிளப்பிய அமெரிக்க ராணுவம் - உண்மையை போட்டுடைத்த சீனா!

மேலும் இதுதொடர்பாக அமெரிக்காவின் ராணுவ தலைமையகமான பென்டகன் விடுத்த அறிக்கையில், “இது வழி தவறி வந்த பலூன் என நாங்கள் நினைக்கவில்லை. மேலும் முதற்கட்ட ஆய்வில், இது சீனாவின் உளவு பலூன் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற செயல் அமெரிக்காவின் பாதுகாப்பு விதிமீறலாகும். எங்களது தூதரகம் மூலம் சீனாவுக்கு விளக்கும். அடுத்தக்கட்ட நடவடிக்கை விரைவில் எடுக்கப்படும்” எனக் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், அமெரிக்காவின் உளவு பார்க்கும் பலூன் என்ற குற்றச்சாட்டை சீனா மறுத்துள்ளது. மேலும் இந்த பலூன் வானிலையை ஆய்வு செய்ய அனுப்பட்டதாகவும் இதில் உளவு பார்க்கும் விமான கருவிகள் எதுவும் இல்லையென்றும், அதற்கான நோக்கம் எங்களுக்கு கிடையாது என்றும் கூறியுள்ளது.

அமெரிக்காவில் பறந்த உளவு பலூன் விவகாரம்.. : பகீர் கிளப்பிய அமெரிக்க ராணுவம் - உண்மையை போட்டுடைத்த சீனா!

மேலும் இந்த பலூன் காற்றின் வேகம் காரணமாக அமெரிக்காவின் வடமேற்கு பகுதியில் நுழைந்துள்ளது. இதற்கான உரிய விளக்கத்தை அமெரிக்காவிடம் அளிக்கவுள்ளோம் என சீனா கூறியுள்ள நிலையில், பென்டகன் இந்த விளக்கத்தை ஏற்கவில்லை. மேலும் இந்த விவகாரத்தை அமெரிக்கா பெரியதாக்க முயற்சிப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் சீனா வெளியுறவுத்துறை இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், “அமெரிக்காவின் வட மேற்கு பகுதியில் சீன பலூன் பறந்த விவகாரத்தை அமெரிக்கா அரசியல் ஆதாயம் தேட முயல்கின்றனர். இதுதொடர்பாக அமெரிக்க அரசு முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகளை சில ஊடகங்களும் அரசியல்வாதிகளும் சாதமாக பயன்படுத்திக் கொள்கின்றனர்.

சீனா எந்த ஒரு இறையாண்மையுள்ள நாட்டின் எல்லையையும் வான்வெளியையும் ஒருபோதும் மீறவில்லை.” எனத் தெரிவித்துள்ளது. இதனையடுத்து இந்த விவகாரம் உலக நாடுகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories