உலகம்

"ஏண்டா எங்களையும் நடுவுல இழுத்து விடுற" - ரஷ்யாவின் மிரட்டலைத் தொடர்ந்து உக்ரைனுக்கு ஜெர்மனி பதில் !

உக்ரைனுக்கு போா் விமானங்கள் வழங்குவது இந்தப் போரில் எங்களையும் இழுத்து வருவதற்கான அபாயத்தை ஏற்படுத்தும் என ஜெர்மனி கூறியுள்ளது.

"ஏண்டா எங்களையும் நடுவுல இழுத்து விடுற" - ரஷ்யாவின் மிரட்டலைத் தொடர்ந்து உக்ரைனுக்கு ஜெர்மனி பதில் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

ரஷ்யா - உக்ரைன் இடையேயான 10 மாத போர் தற்போது உக்கிரமான நடந்து வருகிறது. வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி என மும்முனை தாக்குதலை நடத்துவதால் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. உக்ரைன் நாட்டின் ஏராளமான இராணுவ இலக்குகளை ரஷ்யப் படைகள் தாக்கி அழித்துள்ளன.

அதேபோல் உக்ரைன் தங்களைத் தற்காத்துக்கொள்ள, ரஷ்யப் படைகளுக்குப் பதிலடி கொடுத்து வருகிறது. எனினும் உக்ரைனின் மேற்கு பகுதியில் பெரும்பாலான பகுதிகள் ரஷ்ய கட்டுப்பாட்டின் கீழ் வந்துள்ளன. போர் தொடங்கியதிலிருந்து அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவாக ஆயுதங்களை வழங்கி வருகின்றன.

"ஏண்டா எங்களையும் நடுவுல இழுத்து விடுற" - ரஷ்யாவின் மிரட்டலைத் தொடர்ந்து உக்ரைனுக்கு ஜெர்மனி பதில் !

இதுதவிர உக்ரைனுக்கு ஆதரவாக ரஷ்யா மீது பொருளாதாரத் தடையும் விதித்துள்ளனர். இத்தனையும் மீறி ரஷ்யா தொடர்ந்து போரைத் தொடர்ந்து வருகிறது. அதேபோல உக்ரைனும் பின்வாங்காமல் தொடர்ந்து ரஷ்யாவை எதிர்த்துப் போரிட்டு வருகிறது. இந்த நிலையில், உக்ரைனுக்கு ஆதரவாக ஐரோப்பிய நாடுகள் வலுவான அதிநவீன லெப்பா்ட்-2 பீரங்கிகளை வழங்க முன்வந்துள்ளது இந்த மோதலை அடுத்த கட்டத்துக்கு எடுத்துசென்றுள்ளது.

ஜெர்மனியின் உயரிய தயாரிப்பான லெப்பா்ட்-2 ரக பீரங்கிகள் உலகளவில் சக்தி வாய்ந்த பீரங்கிகளில் ஒன்றாக அறியப்படுகிறது. மேலும், இவ்வகை பீரங்கிகள் ரஷ்யா தயாரிப்பான T -72 ரக பீரங்கிகளுக்கு ஈடுகொடுக்கும் என கூறப்படுவதால் அதனை தங்கள் ராணுவத்தில் சேர்க்க உக்ரைன் அதீத ஆர்வம் காட்டி வருகிறது.இதற்கு முதலில் ஜெர்மனி தயக்கம் காட்டிய நிலையில் அமெரிக்கா தங்கள் பீரங்கிகளை உக்ரைனுக்கு அனுப்ப சம்மதம் தெரிவித்துள்ள நிலையில், தங்கள் லெப்பா்ட்-2 ரக பீரங்கிகளை உக்ரைனுக்கு அனுப்ப தற்போது அதற்கு ஜெர்மனி சம்மதம் தெரிவித்துள்ளது. ஆனால், இந்த விவகாரத்துக்கு ரஷ்யா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

"ஏண்டா எங்களையும் நடுவுல இழுத்து விடுற" - ரஷ்யாவின் மிரட்டலைத் தொடர்ந்து உக்ரைனுக்கு ஜெர்மனி பதில் !

இது குறித்து பேசிய ரஷ்ய அரசின் செய்தித் தொடா்பாளா் டிமித்ரி பெஸ்கோவ் உக்ரைனுக்கு பீரங்கிகள் உள்ளிட்ட அதிநவீன, சக்திவாய்ந்த, கனரக ஆயுதங்களை அனுப்புவது போரில் நேரடியாக ஈடுபடுவதற்கு சமமாகும்.இதற்கு பதிலடி கொடுக்கப்படும்" என பகிரங்கமாக மிரட்டல் விடுத்தார்.

இதனிடையே போரில் ரஷ்யாவை எதிர்கொள்ள ஜெர்மனியின் எஃப்-17 போா் விமானங்களும் தங்களுக்கு வேண்டும் என உக்ரைன் வலியுறுத்தியதாக தகவல் வெளியானது. இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக ஜெர்மனி தற்போது பதிலளித்துள்ளது. செய்தியாளர்களை சந்தித்த ஜெர்மனியின் துணைப் பிரதமா் ராபா்ட் ஹாபேக் "ரஷியாவின் படையெடுப்பை எதிா்கொள்வதற்காக உக்ரைனுக்கு ராணுவ உதவிகள் அளிக்க வேண்டியது அவசியம்தான். எனினும், அந்த நாட்டுக்கு ஜெர்மனியும் பிற ஐரோப்பிய நாடுகளும் போா் விமானங்கள் வழங்குவது வரம்பு மீறிய செயலாக இருக்கும். காரணம், அதுபோன்ற நடவடிக்கை இந்தப் போரில் எங்களையும் இழுத்து வருவதற்கான அபாயம் உள்ளது" எனக் கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories