உலகம்

நாடு முழுவதும் துண்டிக்கப்பட்ட மின்விநியோகம்.. ஸ்தம்பித்த பொருளாதாரம்.. முழுவதுமாக முடங்கிய பாகிஸ்தான் !

பாகிஸ்தானில் திடீர் என இன்று காலை முதல் மின்சார விநியோகம் பாதிக்கப்பட்டு நாடு முழுவதும் மின்வினியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் துண்டிக்கப்பட்ட மின்விநியோகம்.. ஸ்தம்பித்த பொருளாதாரம்.. முழுவதுமாக முடங்கிய பாகிஸ்தான் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

கொரோனா பெரும் தொற்று காரணமாக உலக அளவில் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது. அதில் இருந்து உலகம் மீண்டு வந்த நிலையில், உக்ரைன் -ரஷ்யா போர் ஆரம்பமாகி மீண்டும் உலகளாவிய பொருளாதார நெருக்கடியை அதிகரித்தது.

அதிலும், பாகிஸ்தான் போன்ற நாடுகள் இந்த பொருளாதார நெருக்கடியில் அதிகமாக பாதிக்கப்பட்டது. அந்த நாட்டில் அடிப்படை உணவுக்கே தற்போது பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் கோதுமைக்காக பொதுமக்கள் ஒருவரை ஒருவரை அடித்துக்கொள்ளும் மோசமான நிலை ஏற்பட்டுள்ளது.

நாடு முழுவதும் துண்டிக்கப்பட்ட மின்விநியோகம்.. ஸ்தம்பித்த பொருளாதாரம்.. முழுவதுமாக முடங்கிய பாகிஸ்தான் !

நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பு குறைத்த நிலையில் கிட்டத்தட்ட இலங்கைக்கு நேர்ந்த நிலையைதான் தற்போது பாகிஸ்தான் சந்தித்து வருகிறது. போதிய வரி வருவாய் இல்லாத நிலையில், மக்களின் அடிப்படை தேவைகளை பாகிஸ்தான் அரசால் நிறைவேற்றமுடியவில்லை.

பாகிஸ்தானின் தற்போதைய அந்நிய செலாவணி கையிருப்பின் மூலம் 2 வாரங்கள் மட்டுமே அந்நாட்டால் உணவு தானியங்களையும் கச்சா எண்ணெய்யையும் இறக்குமதி செய்ய முடியும் எனக் கூறப்படுகிறது. இதனால் வெகுசீக்கிரத்தில் பாகிஸ்தான் திவாலாகிவிடும் என சர்வதேச பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

நாடு முழுவதும் துண்டிக்கப்பட்ட மின்விநியோகம்.. ஸ்தம்பித்த பொருளாதாரம்.. முழுவதுமாக முடங்கிய பாகிஸ்தான் !

இந்த நிலையில் , அந்த நாட்டில் திடீர் என இன்று காலை முதல் மின்சார விநியோகம் பாதிக்கப்பட்டு நாடு முழுவதும் மின்வினியோடம் துண்டிக்கப்பட்டது. இதற்கு காரணமாக மின்னழுத்தத்தில் ஏற்பட்ட சீரற்ற தன்மையே என முதற்கட்ட அறிக்கை வெளிவந்துள்ளது நிலையில், இந்த பாதிப்பை சரிசெய்ய சுமார் 12 மணி நேரத்துக்கும் அதிகமாக ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக சுமார் 24 மணி நேரத்துக்கு ஒட்டுமொத்த பாகிஸ்தானும் முடங்கி பல கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது. தொழிற்சாலைகள், மருத்துவ மனைகள் போன்ற முக்கிய இடங்களுக்கும் மின்சார விநியோகம் தடைபட்டுள்ளது. ஏற்கனவே பாகிஸ்தான் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது மின்சார விநியோகம் முடக்கப்பட்டுள்ளது அந்நாட்டை மேலும் கடும் பாதிப்பில் தள்ளியுள்ளது.

banner

Related Stories

Related Stories