உலகம்

சாபமாக மாறிய Twitter.. மோசமான கின்னஸ் சாதனை படைத்த எலான் மஸ்க்.. இத்தனை கோடி நஷ்டமா ?

எலான் மஸ்க்கின் நிகர சொத்து மதிப்பு நவம்பர் 2021 இல் $320 பில்லியனில் இருந்து ஜனவரி 2023 வரை $137 பில்லியனாகக் குறைந்துள்ளது.

சாபமாக மாறிய Twitter.. மோசமான கின்னஸ் சாதனை படைத்த எலான் மஸ்க்.. இத்தனை கோடி நஷ்டமா ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

உலகின் மிகப் பிரபலமான தொழிலதிபர்களில் ஒருவரான எலான் மஸ்கின் நிறுவனம் தான் டெஸ்லா. அமெரிக்காவின் எலக்ட்ரிக் வாகன நிறுவனமான டெஸ்லா, சர்வதேச அளவில் எலக்ட்ரிக் வாகன பிரிவில் முக்கிய இடம் வகித்து வருகிறது.

பிற நிறுவனங்கள் பெட்ரோலிய வாகனங்கள் உருவாக்குவதில் மும்முரமாக இருந்த நிலையில், மின்சார வாகன உற்பத்தியை தொடங்கி இப்போது அந்த துறையில் பிற நிறுவனங்கள் தொடமுடியாத உச்சத்தில் டெஸ்லா நிறுவனம் இருக்கிறது. அதுமட்டுமின்றி எலான் மஸ்கை உலகபணக்காரர் ஆகியதில் டெஸ்லா நிறுவனத்துக்கு முக்கிய பங்குண்டு.

சாபமாக மாறிய Twitter.. மோசமான கின்னஸ் சாதனை படைத்த எலான் மஸ்க்.. இத்தனை கோடி நஷ்டமா ?

ஆனால், உலகின் பிரபலமான சமூக வலைத்தளமான ட்விட்டரை உலகின் முதல் பணக்காரரான எலான் மஸ்க் முழுமையாகக் கைப்பற்றப் போவதாகக் கூறப்பட்டு வந்த நிலையில், பல்வேறு சர்ச்சைகளுக்கு இடையே ஒருவழியாக ட்விட்டர் நிறுவனத்தின் உரிமையாளராக எலான் மஸ்க் ஆகியுள்ளார்.

அதனைத் தொடர்ந்து ட்விட்டர் நிறுவனத்துக்கு மட்டுமே அதிக முக்கியதத்துவம் கொடுத்துவரும் எலான் மஸ்க், தன்னை உலக பணக்காரராக்கிய டெஸ்லா நிறுவனத்தை பெரிய அளவில் கண்டுகொள்ளவில்லை. மேலும் ட்விட்டர் நிறுவனத்தின் செலவீனங்களை எதிர்கொள்ள பல மடங்கு அதிக தொகை தேவைப்படும் என்பதால் 1 கோடியே 95 லட்சம் டெஸ்லா பங்குகளை எலான் மஸ்க் விற்பனை செய்துள்ளதாகவும் இதன் மதிப்பு சுமார் 32,000 கோடி ரூபாய் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

சாபமாக மாறிய Twitter.. மோசமான கின்னஸ் சாதனை படைத்த எலான் மஸ்க்.. இத்தனை கோடி நஷ்டமா ?

இந்த தகவல் வெளியானதில் இருந்து டெஸ்லா நிறுவனத்தின் பங்கு விலை பெரிய அளவில் சரிவை சந்தித்து வருகிறது. மேலும்,கொரோனா பாதிப்பு போன்றவரையும் எலான் மஸ்க்கின் வளர்ச்சியில் பாதிப்பை ஏற்படுத்திவருகிறது. இந்த நிலையில், எலான் மஸ்க்கின் நிகர சொத்து மதிப்பு நவம்பர் 2021 இல் $320 பில்லியனில் இருந்து ஜனவரி 2023 வரை $137 பில்லியனாகக் குறைந்துள்ளது.

இது வரை எந்த பணக்காரரும் குறிகிய காலத்தில் இந்த அளவு சரிவை சந்தித்திராத நிலையில், இது உலக சாதனையாக பார்க்கப்படுகிறது. மேலும் இது கின்னஸ் சாதனையாகவும் பார்க்கப்படுகிறது. இது குறித்து கருத்து பதிவிட்டுள்ள கின்னஸ் நிறுவனம் "மஸ்கின் மொத்த இழப்பு 2000 இல் ஜப்பானிய தொழில்நுட்ப முதலீட்டாளர் மசயோஷி சன் என்பவருடைய (58.6 பில்லியன் அமெரிக்க டாலர்கள் இழப்பு) முந்தைய சாதனையை விட அதிகமாக உள்ளது" எனக் கூறியுள்ளது.

banner

Related Stories

Related Stories