உலகம்

‘வேண்டுமென்றே கொரோனாவை பெற்ற சீன பாடகி..’ - அவர் அளித்த விளக்கத்தை கேட்டு ஆடிபோன ரசிகர்கள் !

தனக்கு கொரோனா வர வேண்டும் என்று வேண்டுமென்றே தொற்றை பெற்றுக்கொண்டதாக சீன பாடகி ஒருவர் பதிவிட்டுள்ளது அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

‘வேண்டுமென்றே கொரோனாவை பெற்ற சீன பாடகி..’ - அவர் அளித்த விளக்கத்தை கேட்டு ஆடிபோன ரசிகர்கள் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

கடந்த 2020-ம் ஆண்டு நாட்டையே உலுக்கிய ஒன்றுதான் கொரோனா பெருந்தொற்று. இந்த தொற்றின் காரணாமாக உலகம் முழுவதும் நாள்தோறும் பல லட்ச மக்கள் உயிரிழந்தனர். இந்த பெருந்தொற்று காரணமாக முழு லாக்டவுன், மாஸ்க், தடுப்பூசி என அதிக கட்டுப்பாடுகள் இருந்தது.

பல மாதங்களுக்கு பின்னர், தொற்று குறைந்ததால் மெல்ல மெல்ல தளர்வுகள் விதித்து, மாஸ்க் அணிய கூட அவசியமில்லை என்ற நிலை வந்தது. இந்த நிலையில் தற்போது வேதாளம் முருங்கை மரம் ஏறுகிறது என்று சொல்வது போல் மீண்டும் கொரோனாவின் புதிய வேரியண்ட் BF 7 ஒமைக்ரான் உருவாகியுள்ளது.

‘வேண்டுமென்றே கொரோனாவை பெற்ற சீன பாடகி..’ - அவர் அளித்த விளக்கத்தை கேட்டு ஆடிபோன ரசிகர்கள் !

இது சீனா, ஜப்பான், தென்கொரியா, தைவான் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவலாக காணப்படுகிறது. இதனால் நாள்தோறும் அந்த நாடுகள் மக்களுக்கு சோதனை மேற்கொள்கின்றனர். அதில் சீன அரசாங்கத்தின் உயர்மட்ட சுகாதார ஆணையத்தின் மதிப்பீடுகளின்படி, ஒரே நாளில் சீனாவில் கிட்டத்தட்ட 3.7 கோடி பேர் பாதிக்கப்பட்டிருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த தொற்று காரணமாக பல நாடுகள் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக செய்துவரும் நிலையில், இங்கு பாடகி ஒருவர் வேண்டுமென்றே தனக்கு கோவிட் தொற்று வரவழைத்துள்ளார். அதுவும் சீன நாட்டிலே இப்படி செய்துள்ளார். இவரது நடவடிக்கை தற்போது உலகம் முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

‘வேண்டுமென்றே கொரோனாவை பெற்ற சீன பாடகி..’ - அவர் அளித்த விளக்கத்தை கேட்டு ஆடிபோன ரசிகர்கள் !

சீனாவைச் சேர்ந்தவர் இளம் பாடகி ஜேன் ஜாங் -வயது 38 (Jane Zhang). இவர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நண்பர் ஒருவருடன் இருந்து தானும் அந்தத் தொற்றால் வேண்டுமென்றே பாதிக்கப்பட்டுள்ளதாக தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். பதிவு செய்ததோடு தான் ஏன் அவ்வாறு செய்தேன் என்று விளக்கமும் அளித்துள்ளார்.

அவர் அளித்த விளக்கத்தில், "இந்த மாத இறுதியில் (NEW YEAR) பாட்டுக் கச்சேரியில் நான் பங்கேற்க வேண்டும். அந்த சமயத்தில் நான் கொரோனாவால் பாதிக்கப்பட்டால் கச்சேரியில் பங்கு பெற முடியாது. அதனால்தான் இப்போதே வேண்டுமென்றே கொரோனாவால் பாதிக்க வேண்டும் என்று முயற்சித்தேன்.

‘வேண்டுமென்றே கொரோனாவை பெற்ற சீன பாடகி..’ - அவர் அளித்த விளக்கத்தை கேட்டு ஆடிபோன ரசிகர்கள் !

காய்ச்சல், தொண்டை கமறல், உடல் வலி போன்ற அறிகுறிகள் இருந்தன. எனினும், இந்த அறிகுறிகள் எனக்கு ஒரே ஒரு நாள்தான் இருந்தது. அதன் பிறகு ஓவர் நைட்டில் மறைந்துவிட்டது. எனவே அதிக தண்ணீரையும், வைட்டமின் சி மாத்திரையையும் எடுத்துக் கொண்டேன்" என்று குறிப்பிட்டுள்ளார். இவரது இந்த பதிவு தற்போது வைரலாகி உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

‘வேண்டுமென்றே கொரோனாவை பெற்ற சீன பாடகி..’ - அவர் அளித்த விளக்கத்தை கேட்டு ஆடிபோன ரசிகர்கள் !

இந்த புதுவகை தொற்று குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறுகையில், "தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பரவாமல் இருக்கத் தேவையான அனைத்து தடுப்பு நடவடிக்கைகளையும் தமிழ்நாடு அரசு எடுத்து வருகிறது. மேலும் தமிழ்நாடு முழுவதும் ஆக்ஸிஜன் உள்ளிட்டவைகள் கையிருப்பு வைத்துக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சென்னை, கோவை , மதுரை, திருச்சி உள்ளிட்ட பன்னாட்டு விமான நிலையங்களுக்கு வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு ரேண்டம் கொரோனா பரிசோதனை எடுக்கப்பட்டு வருகிறது. முகக்கவசம் அணிவது, தனிமனித இடைவெளியை கடைப்பிடிப்பது உள்ளிட்ட கொரோனா விதிமுறைகள் எதுவும் விளக்கிக் கொள்ளப்படவில்லை. எனவே மக்கள் அவரவர் நலன் கருதி முகக்கவசம் அணிந்து பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

‘வேண்டுமென்றே கொரோனாவை பெற்ற சீன பாடகி..’ - அவர் அளித்த விளக்கத்தை கேட்டு ஆடிபோன ரசிகர்கள் !

கடந்த 15 நாட்களாகத் தமிழ்நாட்டில் நாள்தோறும் 4000 முதல் 5000 RT-PCR பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இதில் 10க்கும் குறைவாக ஒற்றை இலக்க எண்களில் தான் கொரோனா பாதிப்பு பதிவாகியுள்ளது. தமிழ்நாட்டில் முதல் தவணையில் 96% தடுப்பூசியும், இரண்டாம் தவணையில் 92% பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

இதனால் தமிழ்நாட்டில் 90% பேருக்கு நோய் எதிர்ப்புச் சக்தி உருவாகி இருக்கிறது. இதன் காரணமாக கடந்த ஆறு மாத காலமாக கொரோனாவால் இறப்புகள் நிகழவில்லை. இருப்பினும் பொதுமக்கள் முகக்கவசம் அணிந்து பாதுகாப்பாக இருக்க வேண்டும்" என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories