உலகம்

அவரசத்தால் போரில் ரஷ்யாவுக்கு ஏற்பட்ட பின்னடைவு - முதன்முதலாக ஒப்புக்கொண்ட அதிபர் புதின் !

தாங்கள் இணைத்துக்கொண்ட உக்ரைன் பகுதிகளில் சில இடங்கள் இன்னும் உக்ரைன் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருப்பதால் அவற்றை இணைப்பதில் ரஷ்யாவுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

அவரசத்தால் போரில் ரஷ்யாவுக்கு ஏற்பட்ட பின்னடைவு - முதன்முதலாக ஒப்புக்கொண்ட அதிபர் புதின் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

ரஷ்யா - உக்ரைன் இடையேயான 7 மாத போர் தற்போது உக்கிரமான நடந்து வருகிறது. வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி என மும்முனை தாக்குதலை நடத்துவதால் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. உக்ரைன் நாட்டின் ஏராளமான இராணுவ இலக்குகளை ரஷ்யப் படைகள் தாக்கி அழித்துள்ளன.

அதேபோல் உக்ரைன் தங்களைத் தற்காத்துக்கொள்ள, ரஷ்யப் படைகளுக்குப் பதிலடி கொடுத்து வருகிறது. எனினும் உக்ரைனின் மேற்கு பகுதியில் பெரும்பாலான பகுதிகள் ரஷ்ய கட்டுப்பாட்டின் கீழ் வந்துள்ளன. போர் தொடங்கியதிலிருந்து அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவாக ஆயுதங்களை வழங்கி வருகின்றன.

அவரசத்தால் போரில் ரஷ்யாவுக்கு ஏற்பட்ட பின்னடைவு - முதன்முதலாக ஒப்புக்கொண்ட அதிபர் புதின் !

இதுதவிர உக்ரைனுக்கு ஆதரவாக ரஷ்யா மீது பொருளாதாரத் தடையும் விதித்துள்ளனர். இத்தனையும் மீறி ரஷ்யா தொடர்ந்து போரைத் தொடர்ந்து வருகிறது. அதேபோல உக்ரைனும் பின்வாங்காமல் தொடர்ந்து ரஷ்யாவை எதிர்த்துப் போரிட்டு வருகிறது.

இதனிடையே உக்ரைனில் தான் கைப்பட்டிருக்குள்ள லுஹான்ஸ்க், டொனட்ஸ்க் ஆகிய பகுதிகளை தனது நாட்டோடு இணைத்துக்கொள்வதாக ரஷ்யா அதிபர் அறிவித்தார். ரஷ்யாவின் இந்த அறிவிப்புக்கு மேற்கத்திய நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.எனினும் வழக்கம்போல ரஷ்யா அந்த எதிர்ப்புகளை பொருட்படுத்தவில்லை.

அவரசத்தால் போரில் ரஷ்யாவுக்கு ஏற்பட்ட பின்னடைவு - முதன்முதலாக ஒப்புக்கொண்ட அதிபர் புதின் !

இந்த நிலையில், தாங்கள் இணைத்துக்கொண்ட லுஹான்ஸ்க், டொனட்ஸ்க், கொசான், ஸஃபோரிஷியா ஆகிய பிரதேசங்களின் சில பகுதிகள் இன்னும் உக்ரைன் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருப்பதால் அவற்றை இணைப்பதில் ரஷ்யாவுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இது குறித்து ரஷ்யா அதிபர் புதின் முதல் முறையாக கருத்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பேசிய அவர், இணைத்துக்கொள்ளப்பட்ட பகுதிகளில் இன்னும் உக்ரைன் படையினா் வசம் இருக்கும் பகுதிகளை மீட்பதில் மிகுந்த சிக்கல் நிலவி வருவதாகவும், எனினும் விரைவில் அவை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்படும் என்றும் புதின் கூறியுள்ளார். இதனால் அந்த பகுதியில் போர் உக்கிரமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

banner

Related Stories

Related Stories