அரசியல்

Rafale Watch : “பில் இருக்கிறதா? இல்லையா?..” - அண்ணாமலையை துளைத்தெடுக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜி !

Rafale Watch : “பில் இருக்கிறதா? இல்லையா?..” - அண்ணாமலையை துளைத்தெடுக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கையில் கட்டியிருக்கும் வாட்ச்சின் விலை 5 லட்சம் என்றும், அதனைதான் அண்ணாமலை தொடர்ந்து பயன்படுத்தி வருவதாகவும் சமூக வலைதளங்களில் புகைப்படத்துடன் கூடிய பதிவுகள் வெளியானது.

இது குறித்து கடந்த 4 நாட்களுக்கு முன்பு கோவையில் செய்தியாளர் சந்திப்பில் அண்ணாமலையிடம் கேட்கப்பட்டது. அப்போது, தான் கட்டியிருக்கும் வாட்சை 'ரபேல் வாட்ச்' என்றும், தான் ஒரு தேச பக்தன், தன்னால் ரபேல் விமானத்தைதான் ஓட்ட முடியாது, எனவே அதன் உதிரி பாகங்களை வைத்து உருவாக்கப்பட்ட வாட்சை அணிந்திருக்கிறேன் என்றார்.

Rafale Watch : “பில் இருக்கிறதா? இல்லையா?..” - அண்ணாமலையை துளைத்தெடுக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜி !

இதனால், அண்ணாமலை கட்டியிருக்கும் வாட்ச் குறித்து பல்வேறு விமர்சனங்கள் சமூக வலைதளங்களில் முன் வைக்கப்பட்டது. அந்த வகையில் அமைச்சர் செந்தில் பாலாஜி தனது ட்விட்டர் பக்கத்தில், ''4 ஆட்டுக்குட்டிகள் மட்டுமே தன்னிடம் இருக்கும் சொத்து என்று கூறும் அண்ணாமலைக்கு 5 லட்ச ரூபாய் மதிப்பிலான வாட்ச் வாங்கும் அளவுக்கு உயர்ந்தது எப்படி? என்று கேள்வியெழுப்பினார்.

மேலும் "ஆடு வளர்த்து சேர்த்து 5 லட்ச ரூபாய் வாட்ச் கட்டும் அளவுக்கு உயர்ந்தது எப்படி? வார்ரூம் வழியாக தொழிலதிபர்களை மிரட்டினால் இப்படியெல்லாம் பணம் கிடைக்குமா? கடிகாரம் வாங்கிய ரசீதை ஒரு மணி நேரத்திற்குள் வெளியிட முடியுமா?" என்றும் சவால் விட்டார்.

இதற்கு பதிலளிக்கும் நோக்கில் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில், "நான் பாஜக தலைவராக பொறுப்பேற்றதுக்கு முன்பு, மே மாதம் 2021ல் வாங்கிய எனது ரஃபேல் கடிகாரத்தின் விவரங்கள், அதன் ரசீது மற்றும் எனது வாழ்நாள் வருமான வரி அறிக்கைகள், 10 ஆண்டுகால எனது வங்கிக் கணக்குகளின் பரிவர்த்தனைகள் (எனது ஒவ்வொரு வருமானமும் காட்டப்படும்), ஆகஸ்ட் 2011 முதல் ஐபிஎஸ் அதிகாரியாக நான் பொறுப்பேற்றது முதல் ராஜினாமா செய்யும் வரை ஈட்டிய வருமானம், எனக்குச் சொந்தமான அசையும் அசையா சொத்துகளின் விவரங்கள், என்னிடம் உள்ள ஆடு மற்றும் மாடுகளின் எண்ணிக்கை என அனைத்தையுமே விரைவில் நம் தமிழக மக்களைச் சந்திப்பதற்காக மாநிலம் முழுவதும் நான் மேற்கொள்ளவிருக்கும் பாதயாத்திரையின் முதல் நாளில் வெளியிடுவேன்" என்று குறிப்பிட்டார்.

அண்ணாமலையின் பதிவுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக செந்தில் பாலாஜி, "சம்பளக் கணக்கை வெளியிடுகிறேன், சாம்பார் கணக்கை வெளியிடுகிறேன் என கம்பி கட்டும் கதைகளை மக்களிடம் சொல்ல வேண்டாம். இவை அனைத்து ‘பல்பு’ வாங்கிய அரவக்குறிச்சி தேர்தல் மனுவிலேயே இருக்கிறது. இவர் என்ன வெளியிடுவது? யார் வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ள முடியும்.

பல லட்சம் மதிப்பு கொண்ட வெளிநாட்டு கடிகாரம் கட்டுவதுதான் தேசபக்தியா? இதுதான் நீங்கள் அளந்துவிடும் Made in India வா? தேர்தலுக்குப் பிறகு வாங்கியதாகச் சொல்லிவிட்டால் ‘வேட்பு மனுவில் ஏன் கணக்கு காட்டவில்லை’ என்ற கேள்வியை தவிர்த்துவிடலாம் என ‘புத்திசாலித்தனமாக’ மே 2021 இல் வாங்கியதாகச் சொல்லும் அந்த 5 லட்ச ரூபாய் கடிகாரத்திற்கான பில் இருக்கிறதா அல்லது இனிமேல்தான் தயார் செய்ய வேண்டுமா?" என்று மீண்டும் கேள்வியெழுப்பினார்

Rafale Watch : “பில் இருக்கிறதா? இல்லையா?..” - அண்ணாமலையை துளைத்தெடுக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜி !

இந்த நிலையில் நேற்று செய்தியாளர்கள் சந்திப்பில் அண்ணாமலை வாட்ச் விவகாரம் குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் கேள்வியெழுப்பட்டது. அப்போது பேசிய அவர், "தமிழக அரசு சிறப்பாகவும் பல்வேறு துறைகளும் வெளிப்படையாக செயல்பட்டு வரும் நிலையில், தேவையில்லாமல் குற்றச்சாட்டுகளை ஆதாரம் இல்லாமல் பா.ஜ.க தலைவர் பேசிவருகிறார். அவரிடம் நான் கேட்ட கேள்வி வாங்கிய கடிகாரத்திற்கு பில் உள்ளதா என்று தான். தேர்தலுக்கு முன் வாங்கினாரா இல்லை பின்னரா என்றால் பில்லை காட்ட சொல்லுங்கள்.

பாஜகவினர் வார் ரூம் போட்டு தொழிலதிபர்களை மிரட்டி வருகிறார்கள். பாஜக தலைவர் அண்ணாமலை முடிந்தால் இன்று (நேற்று) மாலைக்குள் அந்த கடிகாரத்திற்கான ரசீதை வெளியிட வேண்டும். எந்த கடையில் எந்த விலைக்கு வாங்கினார். ஆதாரத்தை வெளியிட வேண்டும். மேலும் அந்த கடிகாரம் யாரிடமோ வெகுமதி வாங்கியது என்றும் அதற்கான பில்லை இன்று மாலை வெளியிட வேண்டும்” என சவால் விடுத்தார்.

Rafale Watch : “பில் இருக்கிறதா? இல்லையா?..” - அண்ணாமலையை துளைத்தெடுக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜி !

அதோடு தனது ட்விட்டர் பக்கத்திலும், "பில் இருக்கிறதா? இல்லையா என்று ஒரே ஒரு கேள்விதான் கேட்கிறோம். ஆம்/இல்லை என்பதுதானே பதிலாக இருக்க முடியும்? ஏப்ரலில் பட்டியல் வரும்…மே மாதம் வெய்யில் அடிக்கும் என்று எல்லாம் அளப்பதைப் பார்த்தால் ‘அன்னைக்கு காலையில் 6 மணி இருக்கும்…கோழி கொக்கரக்கோன்னு…’ என்பது போலவே இருக்கிறது" என்று அண்ணாமலையை கேள்விகளால் துளைத்தெடுத்து வருகிறார்.

banner

Related Stories

Related Stories