தமிழ்நாடு

ரஃபேல் வாட்ச் விவகாரம் : ஒரு பொய்யை மறைக்க பல உண்மையை உளறி மாட்டிக்கொண்ட அண்ணாமலை!

சம்பளக் கணக்கை வெளியிடுகிறேன், சாம்பார் கணக்கை வெளியிடுகிறேன் என கம்பிகட்டும் கதைகளை மக்களிடம் சொல்ல வேண்டாம். இவை அனைத்தும் 'பல்பு' வாங்கிய அரவக்குறிச்சி தேர்தல் மனுவிலேயே இருக்கின்றன!

ரஃபேல் வாட்ச் விவகாரம் : ஒரு பொய்யை மறைக்க பல உண்மையை உளறி மாட்டிக்கொண்ட அண்ணாமலை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

பா.ஜ.க தலைவராக இருக்கும் அண்ணாமலை பொறுப்பிற்கு வந்ததில் இருந்து, தற்போது வரை தன்னை ஒரு விவசாயி, எளிய வீட்டுப்பிள்ளை என்றால்லாம் கதை விட்டு வந்தார். அரசியல் கட்சித் தலைவர்களை விமரசனம் என்ற பெயரில் அவர்களின் ஆடைகளின் விலையைப் பற்றி விமர்சிர்த்ததே பா.ஜ.கவினர்தான். ஆனால் அப்போதெல்லாம் பொங்காத அண்ணாமலை, இன்று அவருக்கு அதேவிமர்சனம் என்றதும் அலறுகிறார்.

சமீபத்தில் ராகுல் காந்தி ஆடையில் விலையை பா.ஜ.கவினர் கேள்வி எழுப்பினர். அப்போது சமூக வலைதளங்களில் மோடி அணியும் ஆடைகள் பற்றிய விலையும் வெளியிட்டு சமூக வலைதளங்களில் பதிலடி கொடுத்தனர்.

ரஃபேல் வாட்ச் விவகாரம் : ஒரு பொய்யை மறைக்க பல உண்மையை உளறி மாட்டிக்கொண்ட அண்ணாமலை!

இந்நிலையில், தற்போது அண்ணாமலை கையில் அணிந்திருந்த வாட்ச்சின் விலை 5 லட்சம் ரூபாய் என தெரியவந்ததையடுத்து பலரும் அண்ணாமலைக்கு இவ்வளவு மதிப்புள்ள வாட்ச் வாங்க பணம் எங்கிருந்து வந்தது என பல்வேறு கேள்விகளை எழுப்பினர்.

அப்போது அதற்கு பதில் அளித்து பேசிய அண்ணாமலை, நான் தேசியவாதி. ரஃபேல் விமான பாகத்தில் இருந்து தயாரிக்கப்பட்ட வாட்ச்சை கட்டியிருக்கின்றேன். உலகத்துலேயே 500 வாட்ச்கள் தான் இருக்கு, என்னோடது 149 வாட்ச் என்றார்.

பின்னர் இதுகுறித்து விமர்சித்த அமைச்சர் செந்தில்பாலாஜி, “பிரான்ஸ் நிறுவனத்திற்காக, உலகில் வெறும் 500 கை கடிகாரங்கள் மட்டுமே தயாரிக்கப்பட்டு, 5 லட்சம் ரூபாய்க்கும் மேல் விலையுள்ள Rafale watch-ஐ, வெறும் 4 ஆட்டுக்குட்டிகள் மட்டுமே சொத்தென சொல்லும் ஆட்டுப்புளுகர் கட்டியிருக்கிறார்.

ரஃபேல் வாட்ச் விவகாரம் : ஒரு பொய்யை மறைக்க பல உண்மையை உளறி மாட்டிக்கொண்ட அண்ணாமலை!

அவர் வாங்கின ரசீதை ஒரு மணி நேரத்திற்குள் வெளியிட்டால், வெளிநாட்டு வாட்ச்சை கட்டியிருக்கும் தேசியவியாதி, மன்னிக்க தேசியவாதி. ஆடு வளர்த்து சேர்த்து 5 லட்சம் ரூபாய் வாட்ச் கட்டும் அளவுக்கு உயர்ந்தது எப்படி? வார்ரூம் வழியாக தொழிலதிபர்களை மிரட்டினால் இப்படியெல்லாம் பணம் கிடைக்குமா? கடிகாரம் வாங்கிய ரசீதை ஒரு மணி நேரத்திற்குள் வெளியிட முடியுமா? இல்லை வழக்கம்போல excel sheet ஏமாத்து வேலைதான் வருமா?” எனக் கேள்வி எழுப்பினர்.

மேலும் மற்றொரு பதிவில், “தேர்தலுக்குப் பிறகு வாங்கியதாகச் சொல்லிவிட்டால் 'வேட்புமனுவில் ஏன் கணக்கு காட்டவில்லை' என்ற கேள்வியைத் தவிர்த்துவிடலாம் என 'புத்திசாலித்தனமாக' மே 2021-ல் வாங்கியதாகச் சொல்லும் அந்த ஐந்து லட்ச ரூபாய் கடிகாரத்துக்கான பில் இருக்கிறதா அல்லது இனிமேல்தான் தயார் செய்ய வேண்டுமா... வேலியில் போகிற ஓணானை வேட்டிக்குள் விட்டுக்கொண்டதுபோல ரஃபேல் ஊழலை மீண்டும் மக்களிடம் நினைவூட்டிக் கதறும் முட்டாள்களிடம் கேட்பது எளிய கேள்விதான்.

ரஃபேல் வாட்ச் விவகாரம் : ஒரு பொய்யை மறைக்க பல உண்மையை உளறி மாட்டிக்கொண்ட அண்ணாமலை!

பல லட்சம் மதிப்புகொண்ட வெளிநாட்டு கடிகாரம் கட்டுவதுதான் தேசபக்தியா... இதுதான் நீங்கள் அளந்துவிடும் (Made in India) 'மேட் இன் இந்தியா'-வா... சம்பளக் கணக்கை வெளியிடுகிறேன், சாம்பார் கணக்கை வெளியிடுகிறேன் என கம்பிகட்டும் கதைகளை மக்களிடம் சொல்ல வேண்டாம். இவை அனைத்தும் 'பல்பு' வாங்கிய அரவக்குறிச்சி தேர்தல் மனுவிலேயே இருக்கின்றன. இவர் என்ன வெளியிடுவது... யார் வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ள முடியும்” எனத் தெரிவித்திருந்தார்.

இதனிடையே திமுக மாணவர் அணித் தலைவர் இராஜீவ் காந்தி கூறுகையில், “ராகுல் காந்தியின் சட்டையை வைத்து பா.ஜ.க அரசியல் செய்தது போல் நாங்கள் செய்யவில்லை. அண்ணாமலை வாட்ச் விவாதப் பொருளாக மாறியதற்கு காரணம் அண்ணாமலைதான். அவர்தான் மேடைக்கு மேடை நான் எளிய விவசாயக் குடும்பத்தில் பிறந்தவன்.

ரஃபேல் வாட்ச் விவகாரம் : ஒரு பொய்யை மறைக்க பல உண்மையை உளறி மாட்டிக்கொண்ட அண்ணாமலை!

என்னுடைய செருப்பு, பேனா எவ்வளவு என பேசி தன்னை தானே புனிதப்படுத்திக் காட்டினார். இப்படி பேசிவிட்டு லட்சக்கணக்கான ரூபாயில் வாட்ச் கட்டுவதெல்லாம் விமர்சனம் எழுகிறது. தனக்கு தானே புனிதத்தை கற்பித்து இதுதான் தேசபக்தி என நாடம் நடத்தும் கோமாளித்தனத்தை மக்கள் ஏற்கமாட்டார்கள்.

அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி எழுப்பிய பின்னரே 2021ல் வாங்கியதாக அண்ணாமலை பொய் சொல்கிறார். ஆனால் இந்த வாட்ச் 2016லில் வாங்கிதாக தகவல் உள்ளது. பெங்களூரில் போலிஸ் கமிஷனராக இருந்தபோது, பெங்களூர் சிட்டியில் போலீஸ் உதவி கமிஷனராக இருந்தபோது, அங்கு ஒரு காபி நிறுவனத்துக்குப் பஞ்சாயத்து தீர்த்துவைத்ததற்குப் பரிசாகக் கொடுத்திருப்பதாகச் சொல்கிறார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

ஒரு பொய்யை மறைக்க அது இன்னொரு உண்மை வெளியே கொண்டுவரும் என்ற கருத்து அண்ணாமலை வாட்ச் விவாரங்களில் நிரூபணமாகியுள்ளது. அண்ணாமலை தற்போது மற்றொரு பொய்யை அவிழ்த்து விட்டுள்ளார். அதாவது சமீபத்தில் பேசிய அண்ணாமலை, எனது மனைவி என்னை விட 7 மடங்கு அதிகம் சம்பாதிக்கிறார் எனத் தெரிவிக்கிறார்.

ரஃபேல் வாட்ச் விவகாரம் : ஒரு பொய்யை மறைக்க பல உண்மையை உளறி மாட்டிக்கொண்ட அண்ணாமலை!

இதன்மூலம் அண்ணாமலை சொல்லும் மற்றொரு பொய் அல்லது மற்றொரு உண்மை வெளியே வந்துள்ளது. அதாவது கடந்த 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அண்ணாமலை தாக்கல் செய்த அறிக்கையில், 2020-21 ஆண்டில் அவரது வருமானம் ரூ.7,67,020 எனவும் அவருடைய மனைவி வருமானம் ரூ.15,09,430 எனவும் குறிப்பிட்டிருந்தார்.

அண்ணாமலை சொல்வது போல் அவரது மனைவி அவரைவிட 7 மடங்கு அதிகமாக சம்பாதித்திருந்தால், அவருடைய ஆண்டு வருமானம் ரூ. 53,69,140 ஆக இருந்திருக்க வேண்டும். ஆக அண்ணாமலை சொல்வதை எடுத்துக்கொண்டால் இரண்டு சாத்தியங்கள் தெரியவரும்.

ஒன்று அண்ணாமலை தேர்தலில் தாக்கல் செய்த வருமான அறிக்கையில் தன்னுடைய வருமானத்தையும், அவரது மனைவி வருமானத்தையும் குறைத்து காட்டியிருக்க வேண்டும். அடுத்தது வருமான வரித்துறையிடம் குறைத்து காட்டியிருக்க வேண்டும். இதில் இரண்டில் எது உண்மை என்பதை அண்ணாமலை பதில் சொல்லவேண்டும். இப்போது இந்த கேள்விகள் சமூக வலைதளங்களில் பூதாகரமான நிலையில் இதற்கு என்ன பொய் சொல்ல அண்ணாமலை காத்திருக்கிறார் என தெரியவில்லை என பலரும் விமர்சித்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories