உலகம்

பழிக்குப்பழி.. ராணுவ மையத்தின் மீது தாக்குதல்.. பாகிஸ்தான் ராணுவீரர்களை படுகொலை செய்த தாலிபான் படையினர்!

பாகிஸ்தான் ராணுவத்துக்கு சொந்தமான பயங்கரவாத எதிர்ப்பு மையத்தின் மீது தாலிபன்கள் நடத்திய தாக்குதலில் அந்நாட்டு ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பழிக்குப்பழி.. ராணுவ மையத்தின் மீது தாக்குதல்.. பாகிஸ்தான் ராணுவீரர்களை படுகொலை செய்த தாலிபான் படையினர்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

ஆப்கானிஸ்தானில் நடைபெற்று வந்த அரசை வீழ்த்தி தற்போது அங்கு தாலிபான் ஆட்சி நடைபெற்று வருகிறது. தாலிபான் ஆட்சிக்கு வந்ததும் அங்குள்ள மக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. மேலும் பெண்களுக்கு உண்டான உரிமைகளும் பறிக்கப்பட்டு வருவதாக பல்வேறு குற்றச்சாட்டுக்கள் எழுந்து வருகிறது.

அதோடு அங்கு தாலிபனுக்கு எதிரான அமைப்புகள் தொடர்ந்து சண்டையில் ஈடுபட்டு வருவதால் அங்கு தொடர்ந்து பதற்ற நிலை இருந்து வருகிறது. இந்த நிலையில் பாகிஸ்தானுக்கும், ஆப்கானிஸ்தானுக்கு இடையே எல்லை பிரச்னைகள், பயங்கரவாதம் தொடர்பாக பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

பழிக்குப்பழி.. ராணுவ மையத்தின் மீது தாக்குதல்.. பாகிஸ்தான் ராணுவீரர்களை படுகொலை செய்த தாலிபான் படையினர்!

ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சிக்கு வர உதவினாலும் தற்போது எதிர்தரப்புக்கு பாகிஸ்தான் உதவுவதாக தாலிபான் தலைவர்கள் கருதி வருகின்றனர். ஆப்கானிஸ்தானில் நடக்கும் குண்டு வெடிப்புகளுக்கு பின்னர் பாகிஸ்தான் இருப்பதாக தாலிபான் தலைவர்கள் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில், பாகிஸ்தானின் வடமேற்கு கைபர் பக்துன்க்வாவில் உள்ள பன்னு கன்டோன்மென்ட்டில் அமைந்திருக்கும் பயங்கரவாத எதிர்ப்பு மையத்தின் மீது தாலிபன்கள் நடத்திய தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பழிக்குப்பழி.. ராணுவ மையத்தின் மீது தாக்குதல்.. பாகிஸ்தான் ராணுவீரர்களை படுகொலை செய்த தாலிபான் படையினர்!

பாகிஸ்தானின் செயல்பட்டு வரும் தாலிபான் அமைப்பின் துணை அமைப்பான 'தெஹ்ரீக்-இ-தாலிபன் பாகிஸ்தான்' எனும் அமைப்பினரை பாகிஸ்தான் ராணுவத்தை சேர்ந்த பயங்கரவாத எதிர்ப்பு படையினர் கைது செய்தனர். மேலும் அவ்ர்களிடமிருந்த ஆயுதத்தையும் பறிமுதல் செய்தனர்.

இதற்கு பழிவாங்கும் விதமாக பயங்கரவாத எதிர்ப்பு மையத்தின் மீது தாலிபான் அமைப்பினர் திடீர் தாக்குதல் நடத்தி அந்த மையத்தை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்தனர். இந்த தாக்குதலில் பொதுமக்களும், பாகிஸ்தான் ராணுவ வீரர்களும் உயிரிழந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories