உலகம்

ஒரே விளம்பரம்.. உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் வாய்ப்பு கேட்ட உக்ரைன் அதிபர்.. FIFA-ன் பதில் என்ன ?

கால்பந்து உலகக்கோப்பை இறுதிப்போட்டியின்போது வீடியோவில் தோன்றி பேசுவதற்கு அனுமதி கோரிய உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியின் கோரிக்கையை FIFA அமைப்பு நிராகரித்துள்ளது..

ஒரே விளம்பரம்.. உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் வாய்ப்பு கேட்ட உக்ரைன் அதிபர்.. FIFA-ன் பதில் என்ன ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

ரஷ்யா - உக்ரைன் இடையேயான 7 மாத போர் தற்போது உக்கிரமான நடந்து வருகிறது. வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி என மும்முனை தாக்குதலை நடத்துவதால் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. உக்ரைன் நாட்டின் ஏராளமான இராணுவ இலக்குகளை ரஷ்யப் படைகள் தாக்கி அழித்துள்ளன.

அதேபோல் உக்ரைன் தங்களைத் தற்காத்துக்கொள்ள, ரஷ்யப் படைகளுக்குப் பதிலடி கொடுத்து வருகிறது. எனினும் உக்ரைனின் மேற்கு பகுதியில் பெரும்பாலான பகுதிகள் ரஷ்ய கட்டுப்பாட்டின் கீழ் வந்துள்ளன. போர் தொடங்கியதிலிருந்து அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவாக ஆயுதங்களை வழங்கி வருகின்றன.

ஒரே விளம்பரம்.. உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் வாய்ப்பு கேட்ட உக்ரைன் அதிபர்.. FIFA-ன் பதில் என்ன ?

இதுதவிர உக்ரைனுக்கு ஆதரவாக ரஷ்யா மீது பொருளாதாரத் தடையும் விதித்துள்ளனர். இத்தனையும் மீறி ரஷ்யா தொடர்ந்து போரைத் தொடர்ந்து வருகிறது. அதேபோல உக்ரைனும் பின்வாங்காமல் தொடர்ந்து ரஷ்யாவை எதிர்த்துப் போரிட்டு வருகிறது.

அதேநேரம், மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவை எதிர்க்கவேண்டும் என்பதற்காக உக்ரைனுக்கு வழங்கும் ஆயுதங்களை உக்ரைன் பொறுப்பற்ற விதத்தில் உக்ரைன் வீணடிப்பதாக கூறப்படுகிறது.அதிலும் அமெரிக்கா உக்ரைனுக்கு வழங்கிய 15.2 பில்லியன் டாலர் மதிப்பிலான ஆயுதங்களை உக்ரைன் வெறும் 14 நாட்களில் காலி செய்து புதிய ஆயுதங்கள் வேண்டும் என்று கேட்டதாக அமெரிக்க நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

ஒரே விளம்பரம்.. உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் வாய்ப்பு கேட்ட உக்ரைன் அதிபர்.. FIFA-ன் பதில் என்ன ?

மேலும், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி மேடைகளில் தோன்றி விளம்பரம் மட்டுமே செய்துவருகிறார், ஆக்கபூர்வமாக ஏதும் செய்யவில்லை என்றும் அவர்மேல் விமர்சனம் வைக்கப்படுகிறது. இந்த நிலையில், அர்ஜென்டினா -பிரான்ஸ் மோதும், கால்பந்து உலகக்கோப்பை இறுதிப்போட்டியின்போது வீடியோவில் தோன்றி பேசுவதற்கு ஃபிஃபாவிடம் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கோரிக்கை விடுத்திருந்தார்.

ஆனால், ஜெலன்ஸ்கியின் இந்த கோரிக்கையை FIFA அமைப்பு நிராகரித்துள்ளது. முன்னதாக ஐரோப்பிய நாடாளுமன்றங்களில் ஜெலன்ஸ்கி தோன்றி ஆவேசமாக உக்ரைன் -ரஷ்யா போர் குறித்து பேசிவந்தார் என்பது குறிப்பித்தக்கது. ஆனால், இடையில் அவர் தனது மனைவியோடு போட்டோஷூட் மேற்கொண்டதைத் தொடர்ந்து அவருக்கான ஆதரவு தொடர்ந்து சரிந்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories