உலகம்

சடலத்தின் உடலில் உயிரோடு சுற்றித்திரிந்த விஷப்பாம்பு.. பிரேத பரிசோதனை செய்தபோது அலறிய பெண் !

பிரேத பரிசோதனை செய்தபோது சடலத்தின் உடலில் விஷப்பாம்பு உயிரோடு சுற்றித்திரிந்த நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சடலத்தின் உடலில் உயிரோடு சுற்றித்திரிந்த விஷப்பாம்பு.. பிரேத பரிசோதனை செய்தபோது அலறிய பெண் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

அமெரிக்காவின் மேரிலாந்தில் உள்ள பிரேத பரிசோதனை நிலையத்தில் தொழில்நுட்ப வல்லுநராக பணிபுரிந்துவருபவர் ஜெசிகா லோகன் (வயது 31). இவர் தனது பணிகாலத்தில் தான் சந்திக்க விபரீத அனுபவங்கள் குறித்து பேசியுள்ளது இணையத்தில் வைரலாகியுள்ளது.

அவரின் பணிக்காலத்தில் ஒரு சடலத்தை பிரேத பரிசோதனைக்காக அனுமதித்துள்ளனர். அதனை அவர் சோதனை செய்துகொண்டிருந்தபோது அவரின் தொடை பகுதியில் ஏதோ ஒன்று ஊர்ந்து சென்றுள்ளது. பின்னர் அது என்ன என்று பார்த்தபோது அது உயிருள்ள கொடிய விஷம் கொண்ட பாம்பு என்பதை அறிந்து அதிர்ச்சியடைந்துள்ளார்.

சடலத்தின் உடலில் உயிரோடு சுற்றித்திரிந்த விஷப்பாம்பு.. பிரேத பரிசோதனை செய்தபோது அலறிய பெண் !

இந்த அனுபவத்துக்கு பின்னர் பயத்தில் உடனடியாக அந்த அறையில் இருந்து வெளியேறிய அவர், அங்குள்ள பாதுகாப்பு காவலர்களுக்கு இது தொடர்பாக கூறியுள்ளார். பின்னர் அந்த பாம்பு அங்கிருந்து அகற்றப்பட பின்னரே மீண்டும் அந்த அறைக்கு திரும்பியுள்ளார்.

அந்த நபரின் உடல் ஒரு ஓடையில் இருந்து கண்டெடுக்கப்பட்டதாகவும், பிரேத பரிசோதனைக்கு கொண்டுவரும் போதே சிதைந்த நிலையில், அது இருந்தாதவனும் ஜெசிகா கூறியுள்ளார். அந்த சிதைந்த உடல்பாகத்தில் இருந்த ஓட்டை மூலம் அந்த பாம்பு சடலத்தின் உள்ளே சென்றிருக்கும் எனவும் தெளிவுபடுத்தியுள்ளார்.

சடலத்தின் உடலில் உயிரோடு சுற்றித்திரிந்த விஷப்பாம்பு.. பிரேத பரிசோதனை செய்தபோது அலறிய பெண் !

இது தவிர பணிக்காலத்தில் தான் எதிர்கொண்ட கடினமான சூழ்நிலைகளையும் பகிர்ந்துள்ளார். ஆனால் பாம்பு குறித்து இவர் கூறியது இணையத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் பலரும் இது குறித்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories