உலகம்

9 ஆண்டுகளுக்கு பின்னர் வெளிவந்த பரம ரகசியம்.. இறுதியாக பகிரங்கமாக அறிவித்த தாலிபான் அரசு !

தாலிபான் அமைப்பின் நிறுவனரான முல்லா ஓமர் அடக்கம் செய்யப்பட்ட இடத்தை 9 ஆண்டுகளுக்கு பின்னர் தாலிபான் அரசு அறிவித்துள்ளது.

9 ஆண்டுகளுக்கு பின்னர் வெளிவந்த பரம ரகசியம்.. இறுதியாக பகிரங்கமாக அறிவித்த தாலிபான் அரசு !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

ஆப்கானிஸ்தானில் முல்லா ஓமர் என்பவரால் பாகிஸ்தானின் ஆதரவோடு உருவாக்கப்பட்ட அமைப்புதான் தாலிபான். இந்த இயக்கம் கடந்த 1991-ம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் நடந்துவந்த அரசை வீழ்த்தி தலைநகர் காபூலை கைப்பற்றி அங்கு ஆட்சியில் அமர்ந்தது.

அதன்பின்னர் அமெரிக்க இரட்டை கோபுர தாக்குதலின்போது ஒசாமா பின் லேடனுக்கு ஆதரவு கொடுத்ததாக அமெரிக்க மற்றும் அதன் ஆதரவு படைகள் ஆப்கானிஸ்தான் மீது தாக்குதல் நடத்தி தாலிபான் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்தனர். அதன்பின்னர் அமெரிக்க ஆதரவு அரசு ஆப்கானிஸ்தானில் அமைந்தது.

mullah omar
mullah omar

எனினும் அங்கு தொடர்ந்து தாலிபான் அச்சுறுத்தல் இருந்ததால் அமெரிக்க படைகள் அங்கு நிலைகொண்டன. இந்த சூழலில் கடந்த ஆண்டு அமெரிக்கப் படைகள் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறின. அதன்பின்னர் மீண்டெழுந்த தாலிபான்கள் அங்கிருந்த அரசை வீழ்த்திவிட்டு மீண்டும் ஆப்கானிஸ்தானின் ஆட்சியை கைப்பற்றினர்.

இதனிடையே தாலிபான் தலைவராக இருந்த முல்லா ஓமர் கடந்த 2013-ம் ஆண்டு தலைமறைவாக இருக்கும்போது மரணமடைந்தார். அவரின் இறப்பு குறித்த தகவலை பல ஆண்டுகளாக தாலிபான்கள் வெளியிடாமல் இருந்த நிலையில், சில ஆண்டுகளுக்கு முன்னர் அதை பகிரங்கமாக அறிவித்தனர்.

9 ஆண்டுகளுக்கு பின்னர் வெளிவந்த பரம ரகசியம்.. இறுதியாக பகிரங்கமாக அறிவித்த தாலிபான் அரசு !

இந்த நிலையில், தற்போது ஆட்சிக்கு வந்த நிலையில், முல்லா ஓமர் புதைக்கப்பட்ட இடத்தை தலிபான்கள் வெளியிட்டுள்ளனர். ஜாபூல் மாகாணத்தில் சூரி மாவட்டத்தில் ஒமார்சா என்னும் இடத்தில் முல்லா ஒமரின் உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக தலிபான்கள் அறிவித்துள்ளனர்.

முன்னர் தங்களுக்கு ஏராளமான எதிரிகள் இருந்ததால் முல்லா ஓமர் புதைக்கப்பட்ட இடம் தெரிந்தால் எதிரிகளால் அவரின் நினைவிடம் சிதைக்கப்படும் என்கிற அச்சத்தால் அவர் புதைக்கப்பட்ட இடத்தை இதுவரை ரகசியமாக வைத்திருந்ததாக தாலிபான் செய்தித்தொடர்பாளர் அறிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories