உலகம்

விமானநிலையம் அருகே ஏரியில் பாய்ந்த விமானம்.. 43 பயணிகளின் நிலை என்ன ? தான்சானியாவில் அதிர்ச்சி !

தான்சானியா நாட்டின் விமானம் ஒன்று மோசமான வானிலை காரணமாக ஏரியில் பாய்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விமானநிலையம் அருகே ஏரியில் பாய்ந்த விமானம்.. 43 பயணிகளின் நிலை என்ன ? தான்சானியாவில் அதிர்ச்சி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

கிழக்கு ஆப்பிரிக்காவில் தான்சானியா நாடு அமைந்துள்ளது. இந்த நாட்டை சேர்ந்த தனியார் விமான நிறுவனமான ப்ரிசிஷன் ஏர் நிறுவனத்தின் விமானம் ஒன்று தான்சானியாவின் வடமேற்கு நகரமான புகோபாவுக்கு 39 பயணிகள், இரண்டு விமானிகள் மற்றும் இரண்டு கேபின் பணியாளர்கள் உட்பட 43 பேரோடு சென்றுள்ளது.

இந்த விமானம் புகோபா நகரத்துக்கு அருகே சென்றபோது அங்கு வானிலை மோசமாகியுள்ளது. இதன் காரணமாக அந்த விமானம் எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கி அங்குள்ள விக்டோரியா ஏரியில் விழுந்துள்ளது.

விமானநிலையம் அருகே ஏரியில் பாய்ந்த விமானம்.. 43 பயணிகளின் நிலை என்ன ? தான்சானியாவில் அதிர்ச்சி !

விமானம் விமான நிலையத்தில் தரையிறங்காத நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக மீட்புப்படையினருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். 43 பேர் அதில் பயணித்த நிலையில், அவர்களில் 26 பேர் உயிருடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

மீதம் இருக்கும் பயணிகள் நிலை என்ன என்றே தெரியாத நிலையில் அவர்களை தேடும் பணியில் மீட்புப்படையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். விமானம் விபத்துக்குள்ளான இடத்தில் இருந்து விமான நிலையம் 100 மீட்டர் தொலைவில்தான் இருந்ததாக போலிஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிரேன்களின் உதவியுடன் விமானத்தைத் தண்ணீரிலிருந்து வெளியே எடுக்கும் முயற்சிகள் நடந்து வருவதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இந்த நிலையில் இந்த விமானவிபத்து தொடர்பாக வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்தாண்டில் நடைபெற்ற மிகப்பெரிய விமான விபத்துகளில் ஒன்றாகவும் இந்த விபத்து பதிவாகியுள்ளது.

banner

Related Stories

Related Stories