உலகம்

நூலகத்திலிருந்து தாத்தா எடுத்த புத்தகம்.. 84 ஆண்டுகளுக்கு பிறகு அபாரதத்துடன் திருப்பி கொடுத்த பேரன் !

84 ஆண்டுகளுக்கு முன்பு நூலகத்தில் இருந்து தனது தாத்தா எடுத்த புத்தகத்தை பேரன், அபாரதத்துடன் ஒப்படைத்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நூலகத்திலிருந்து தாத்தா எடுத்த புத்தகம்.. 84 ஆண்டுகளுக்கு பிறகு அபாரதத்துடன் திருப்பி கொடுத்த பேரன் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

1938-ம் ஆண்டு அக்டோபர் மாதம், கேப்டன் வில்லியம் ஹாரிசன் என்பவர் ஆங்கில எழுத்தாளர் ரிச்சர்ட் ஜெஃபரீஸ் என்பவர் எழுதிய ரெட் டீர் (Red Deer)" என்ற புத்தகத்தை படிப்பதற்காக அப்பகுதியிலுள்ள நூலகத்திலிருந்து எடுத்துள்ளார்.

ஆனால் அதனை அவர் திரும்பி கொடுக்கவில்லை. அது அவரிடமே பத்திரமாக இருந்து வந்த நிலையில், 1957-ம் ஆண்டு அவர் மரணமடைந்துள்ளார். தனது தாத்தாவின் மரணத்திற்கு பிறகு அவருடைய பொருட்களை எல்லாம் எடுத்து பார்க்கையில், அதில் இந்த புத்தகம் இருந்துள்ளது. இந்த புத்தகத்தை கண்டவுடன் பேரன் ஆச்சர்யமானார். மேலும் தனது தாத்தா இதை கொடுக்கவில்லை என்றபோதும், தான் அந்த புத்தகத்தை திருப்பி கொடுக்க வேண்டும் என்று எண்ணியுள்ளார்.

நூலகத்திலிருந்து தாத்தா எடுத்த புத்தகம்.. 84 ஆண்டுகளுக்கு பிறகு அபாரதத்துடன் திருப்பி கொடுத்த பேரன் !

அதன்படி அந்த நூலகத்திற்கு சென்ற பேரன், தனது தாத்தா எடுத்த புத்தகத்தை திருப்பி கொடுத்துள்ளார். மேலும் 84 ஆண்டுகளுக்கு பிறகு கொடுத்ததால், அதற்கான அபராத தொகையையும் அவர் செலுத்தியுள்ளார். இது தொடர்பான செய்தியை சம்மந்தப்பட்ட நூலகமான 'யேர்ல்ஸ் டான்கார்னி கீ' என்ற நூலகம், தனது அதிகாரபூர்வ சமூக வலைதள பக்கத்தில் பதிவேற்றியுள்ளனர்.

மேலும் இது குறித்து அதில், "இதுபோன்று சம்பவங்களை தினந்தோறும் நீங்கள் பார்க்க முடியாது. ரிச்சர்ட் ஜெஃபரீஸால் எழுதப்பட்ட "ரெட் டீர்" என்ற புத்தகம் 84 ஆண்டுகள் மற்றும் இரண்டு வாரங்கள் கழித்து திருப்பிக் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த புத்தகத்தை படிப்பதற்காக எடுத்துச் சென்றவரின் பேரன் பேடி ரியோர்டன், 84 ஆண்டுகள் கழித்து தன் தாத்தாவினால் கடன் வாங்கப்பட்ட இந்த புத்தகத்தை நூலகத்திற்கு, அதற்கு உண்டான அபராத தொகையையும் செலுத்தி திருப்பி கொடுத்துள்ளார்.

நூலகத்திலிருந்து தாத்தா எடுத்த புத்தகம்.. 84 ஆண்டுகளுக்கு பிறகு அபாரதத்துடன் திருப்பி கொடுத்த பேரன் !

வாரத்திற்கு ஒரு பென்னி என்ற வீதத்தில், மொத்தம் 18 புள்ளி 27 பவுண்டுகளை அவர் அபராதமாக செலுத்தியுள்ளார்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பொதுவாக நூலகத்தில் இருந்து எடுக்கப்படும் புத்தகத்தை படித்து முடித்தவுடனே, அல்லது குறிப்பிட்ட தினங்களிலோ கொடுக்க வேண்டும். அப்படி கொடுக்கவில்லை என்றால், அபராத தொகையும் செலுத்தவேண்டும்.

அதன்படி தனது தாத்தா எடுத்த புத்தகத்தை 84 ஆண்டுகளுக்கு பிறகு அபாரத்துடன் செலுத்திய பேரனின் செயல் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories