உலகம்

வீட்டில் வீடியோ கேம் விளையாடிய வாலிபர் மீது மின்னல் தாக்குதல்.. எங்கு நடந்த சம்பவம் இது தெரியுமா?

இங்கிலாந்தில் வீட்டில் வீடியோ கேம் விளையாடிக் கொண்டிருந்தவர் மீது மின்னல் தாக்கிய சம்பவம் நடந்துள்ளது.

வீட்டில் வீடியோ கேம் விளையாடிய வாலிபர் மீது மின்னல் தாக்குதல்.. எங்கு நடந்த சம்பவம் இது தெரியுமா?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தவர் ஜடன் ரோவன். இவர் சில தினங்களுக்கு முன்பு வீட்டில் பளே ஸ்டேஷனில் வீடியோ கேம் விளையாடிக் கொண்டிருந்துள்ளார். அப்போது அப்பகுதியில் இடியுடன் கூடிய மழை பெய்துள்ளது.

அப்போது திடீரென அவரது உடலில் வலி ஏற்பட்டு அலறியுள்ளார். பின்னர் மயக்கமடைந்துள்ளார். இதைப்பார்த்த அவரது மனைவி அதிர்ச்சியடைந்து உடனே கணவரை மருத்துவமனைக்குக் கூட்டிச் சென்றுள்ளார்.

வீட்டில் வீடியோ கேம் விளையாடிய வாலிபர் மீது மின்னல் தாக்குதல்.. எங்கு நடந்த சம்பவம் இது தெரியுமா?

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவரது உடலில் மின்னல் தாக்கியதற்காக அறிகுறிகள் இருப்பதாகத் தெரிவித்துள்ளார். இதையடுத்து அவருக்கு 8 மணிநேர சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. பின்னர் அவர் கண்விழித்துள்ளார்.

பின்னர் நடந்த சம்பவத்தை கூறிய 'ஜடன் ரோவன், நான் சோபாவில் அமர்ந்து வீடியோ கேம் விளையாடிக் கொண்டிருந்தேன். அப்போது இடி இடித்துக் கொண்டிருந்தது. பிறகு திடீரென எனது உடலில் ஏதோ வெடித்தது போன்று இருந்தது. மேலும் வலது கை எரிவது போலவும் இருந்தது. பிறகு நான் மயங்கிவிட்டேன்' என தெரிவித்துள்ளார்.

மேலும் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் புகைப்படத்தைத் தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். இவரின் இந்த புகைப்படத்தைப் பார்த்து பலரும் பலவிதமாகக் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories