உலகம்

"நா அழகா இருக்குறதாலா என்னய கைது பண்ணுறாங்க.." - சாப்பாடுக்கு பில் கட்டாத இளம்பெண் கதறல் !

ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டு பணம் கொடுக்காமல் சென்ற பெண்ணை அதிகாரிகள் கைது செய்தபோது, தான் அழகாய் இருப்பதால் தான் கைது செய்வதாக வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

"நா அழகா இருக்குறதாலா என்னய கைது பண்ணுறாங்க.." - சாப்பாடுக்கு பில் கட்டாத இளம்பெண் கதறல் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

கடந்த சில நாட்களுக்கு முன்பு அமெரிக்காவின் பிரபல ஹாரி ரீட் சர்வதேச விமான நிலையத்தில் உள்ள ஒரு உணவகத்தில் 28 வயதுடைய பெண் ஒருவர் உணவருந்த வந்துள்ளார். அவர் தனக்கு தேவையான உணவை சாப்பிட்டு விட்டு பணம் செலுத்தாமல் வெளியேறியதாக கூறப்படுகிறது.

இதனால் உணவக ஊழியர்கள் அங்கிருக்கும் காவல் அதிகாரிக்கு தகவல் கொடுத்தனர். இருப்பினும் அந்த பெண் சென்று விட்டதால் அவரின் அடையாளங்களை வைத்து தேடினர். அப்போது அவர் விமான நிலையத்தில் இருக்கும் ஒரு பகுதியில் தூங்கிக்கொண்டிருந்துள்ளார். அவர் தூங்குவதை கண்டதும் அதிகாரிகள் அவரை சுற்றி வளைத்து பிடித்தனர்.

"நா அழகா இருக்குறதாலா என்னய கைது பண்ணுறாங்க.." - சாப்பாடுக்கு பில் கட்டாத இளம்பெண் கதறல் !

இதனால் அதிகாரிகளும் அந்த பெண் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும் அவர்கள் மீது எச்சில் துப்பிவிடுவேன் என்று மிரட்டியும் உள்ளார். அதோடு என்னை போன்று வேறு அழகான பெண்ணை பார்க்காததால் அவர்கள் என்னை பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சிக்கின்றனர்' என்றும் கத்தி கூச்சலிட்டுள்ளார்.

"நா அழகா இருக்குறதாலா என்னய கைது பண்ணுறாங்க.." - சாப்பாடுக்கு பில் கட்டாத இளம்பெண் கதறல் !

இதையடுத்து அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது, விமான நிலைய நடத்தையை மீறியதற்காக 1,000 அமெரிக்க டாலர் பிணையில் கிளார்க் கவுண்டி தடுப்பு மையத்திற்கு அனுப்பப்பட்டார். அக்டோபர் 27 ஆம் தேதி மீண்டும் அவர் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

banner

Related Stories

Related Stories