உலகம்

பாலியல் தொல்லை கொடுத்த மர்ம உருவம்.. பேயென பயந்து போன பெண்ணுக்கு CCTV மூலம் காத்திருந்த அதிர்ச்சி !

திருமணமான இளம்பெண்ணுக்கு மர்ம உருவம் பாலியல் தொல்லை கொடுத்ததால், தனது அறையில் பொருத்திய சிசிடிவி மூலம் அது யார் என்று கண்டறிந்தார்.

கோப்பு படம்
கோப்பு படம்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

சிங்கப்பூரில் சிங்கப்பூரின் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டு வாரியத்தின் குடியிருப்பில் வாடகை வீட்டில் வசிக்கும் ஒருவர் கடந்த மே மாதம் திருமணம் முடிந்து தனது மனைவியை அங்கு கூட்டி வந்துள்ளார். எனவே அவர்களுக்கு வரவேற்பு விருந்து வைப்பதற்காக ஒரு பார்ட்டி ஏற்பாடு செய்திருந்தார் அந்த வீட்டின் உரிமையாளர்.

அதன்படி அவர்களும் பார்ட்டி கொண்டாட்டத்தில் அந்த பெண்ணும் அளவுக்கு அதிகமாக மது அருந்த, சோர்வில் தனது அறைக்கு சென்று உறங்கியுள்ளார். அப்போது அவரை ஒரு மர்ம உருவம் பாலியல் ரீதியாக சீண்டியுள்ளது. போதையில் இருந்த அவரோ, தனது கணவர் தான் தன்னை சீண்டுகிறார் என்று எண்ணிய நிலையில், நிழலை பார்த்து அது தனது கணவர் அல்ல என்பதை உணர்ந்தார்.

கோப்பு படம்
கோப்பு படம்

இதையடுத்து இது போன்று அடிக்கடி நிகழ்வதால், தன்னை ஏதோ ஒரு பேய் பாலியல் ரீதியாக தொல்லை கொடுப்பதாக நினைத்து பயந்துள்ளார். இதனால் அவர்களது அறையில் ஒரு சிசிடிவி கேமராவை பொறுத்தியுள்ளனர் அந்த தம்பதியினர்.

இந்த நிலையில், சில நாட்களுக்கு முன்பு அந்த வீட்டின் உரிமையாளர் மீண்டும் ஒரு பார்ட்டிக்கு ஏற்பாடு செய்திருந்தார். அப்போதும் அதில் மது அருந்திவிட்டு சோர்வில் தனது அறைக்கு ஓய்வெடுக்க சென்றுள்ளார் அந்த பெண். அந்த சமயத்தில் அந்த அறைக்கு வந்த அதே மர்ம உருவம் மீண்டும் அவரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டது.

கோப்பு படம்
கோப்பு படம்

இதையடுத்து அவர்களது அறையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சியை சோதனை செய்தபோது, அந்த மர்ம உருவம் அந்த வீட்டின் 38 வயதான உரிமையாளர் என்பது கண்டறியப்பட்டது. இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த தம்பதியினர், சிசிடிவி காட்சி உதவியுடன் காவல்நிலையத்தில் உரிமையாளர் மீது புகார் தெரிவித்தனர்.

இதையடுத்து வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள், வீட்டு உரிமையாளரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories