உலகம்

இசை மூலம் உருவான காதல்.. 55 வயது ஆணை கரம்பிடித்த 18 வயது இளம்பெண் :பாகிஸ்தானில் நடந்த வித்தியாச திருமணம்!

18 வயது இளம்பெண் ஒருவர் 55 வயது நபரை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ள சம்பவம் அனைவர் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இசை மூலம் உருவான காதல்.. 55 வயது ஆணை கரம்பிடித்த 18 வயது இளம்பெண் :பாகிஸ்தானில் நடந்த வித்தியாச திருமணம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பாகிஸ்தானை சேர்ந்தவர் 18 வயது இளம்பெண் முஸ்கான். இவர் தனது குரலில் பாடல்கள் பாடி அதனை இணையத்தில் வீடியோவாக வெளியிட்டு வருகிறார். இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் பரூக் என்ற 55 வயதுடைய நபர், இவரது வலைதளபக்கத்தையும் பின்தொடர்ந்துள்ளார்.

இசை மூலம் உருவான காதல்.. 55 வயது ஆணை கரம்பிடித்த 18 வயது இளம்பெண் :பாகிஸ்தானில் நடந்த வித்தியாச திருமணம்!

முஸ்கானின் குரல் பரூக்கிற்கு பிடிக்கவே, அவரிடம் பேசி வந்துள்ளார். இதனால் இருவருக்குள்ளும் பழக்கம் ஏற்பட்டு நட்பாக மாறியுள்ளது. இவரும் முஸ்கானின் வீட்டிற்கு அடிக்கடி சென்று விட்டு குடும்பத்திடம் நெருங்கி பழகி வந்துள்ளார். மேலும் இவர் முஸ்கானை ஊக்குவிக்கவும் செய்துள்ளார்.

இதனால் முஸ்கானுக்கு பாரூக்கை பிடித்துப்போக, வயதை பொருட்படுத்தாமல் தனது காதலை வெளிப்படுத்தியுள்ளார். முஸ்கானுக்கு மறுப்பு தெரிவிக்க மனமில்லாத பரூக்கும் அவரது காதலை ஏற்றுக்கொண்டார்.

இசை மூலம் உருவான காதல்.. 55 வயது ஆணை கரம்பிடித்த 18 வயது இளம்பெண் :பாகிஸ்தானில் நடந்த வித்தியாச திருமணம்!

இதையடுத்து இவர்கள் காதல் விவகாரம் குறித்து குடும்பத்தாரிடம் தெரிவிக்க, அதிர்ந்து போன அவர்கள் திருமணத்திற்கு சம்மதிக்கவில்லை. இருப்பினும் தனது காதல் மீது நம்பிக்கை கொண்டிருந்த அந்த பெண், குடும்பத்தாரை எதிர்த்து இருவரும் திருமணம் செய்துகொண்டனர்.

55 வயது நபரை 18 வயது இளம்பெண் காதலித்து திருமணம் செய்துகொள்ள ஒரு இசை காரணமாக இருந்தது அனைவர் மத்தியிலும் ஆச்சர்யத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories