உலகம்

கடற்கரையில் மிதந்த பெண்ணின் சடலம்.. பீதியடைந்த பொதுமக்கள்.. போலிஸாருக்கு காத்திருந்த அதிர்ச்சி !

கடற்கரையில் மிதந்த பெண்ணின் சடலத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

கடற்கரையில் மிதந்த பெண்ணின் சடலம்.. பீதியடைந்த பொதுமக்கள்.. போலிஸாருக்கு காத்திருந்த அதிர்ச்சி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

தாய்லாந்து நாட்டின் பாங்க் சென் மாவட்டத்தில் அமைந்துள்ள கடற்கரை உலகின் பிரபலமான கடற்கரைகளில் ஒன்று. இந்த கடற்கரையில் ஏராளமான சுற்றுலாப்பயணிகள் ஒன்று கூடுவர்.

இந்த கடற்கரையில் கடந்த 18ஆம் தேதி சுற்றுலாப்பயணிகள் இருக்கும்போது சடலம் ஒன்று கரையொதுங்கியுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த சுற்றுலாப்பயணிகள் இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

கடற்கரையில் மிதந்த பெண்ணின் சடலம்.. பீதியடைந்த பொதுமக்கள்.. போலிஸாருக்கு காத்திருந்த அதிர்ச்சி !

தகவலின்பேரில் அங்கு விரைந்துவந்த போலிஸார் சடலத்தை பார்த்தபோது அது தலையில்லாமல் இருந்துள்ளது. மேலும் அது பெண் சடலம் போல இருந்ததால் போலிஸார் அதன் அருகில் சென்று சோதனை நடத்தியபோது அது பொம்மை என்பது தெரியவந்துள்ளது.

பின்னர் போலிஸார் விசாரணையில் அது ஜப்பான் ரக செக்ஸ் டாய் என்பதும் கடலில் பயணம் செய்த யாரோ அதை கடலில் வீசி இருக்கலாம் என்பதும் தெரியவந்தது. இந்த பொம்மை சுமார் 500 அமெரிக்க டாலர் வரை விலை மதிப்பு கொண்டது என்றும் போலிஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories