உலகம்

திடீரென ஏற்பட்ட காட்டுத்தீ.. சட்டையை கழட்டிவிட்டு ஓடிய தீயணைப்பு வீரர்.. வைரலாகும் வீடியோ!

ஸ்பெயினில் காட்டுத்தீயில் இருந்து தீயணைப்பு வீரர் தப்பிக்கும் வீடியோ வெளியாகி காண்போருக்கு பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது.

திடீரென ஏற்பட்ட காட்டுத்தீ.. சட்டையை கழட்டிவிட்டு ஓடிய தீயணைப்பு வீரர்.. வைரலாகும் வீடியோ!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

சமீப காலமாக பருவநிலை மாற்றம் உலக அளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக குளிர் பிரதேசங்களாக அறியப்படும் ஐரோப்பிய நாடுகளில் தற்போது கடும் வெப்ப அலை வீசி வருகிறது. அதன்படி இங்கிலாந்து, ஸ்பெயின் ஆகிய நாடுகளில் 40 முதல் 45 டிகிரி வரை வெப்பம் பதிவாவதால் அங்குள்ள மக்கள் கடும் துன்பத்தை அனுபவித்து வருகின்றனர்.

இங்கிலாந்தில் நிலவும் கடும் வெப்பத்தால், அங்கு 'ரெட் அலர்ட்' விடுக்கப்பட்டு, அவசர நிலையும் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் அங்குள்ள பொதுமக்களை வெளியே வர வேண்டாம் என்று எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

திடீரென ஏற்பட்ட காட்டுத்தீ.. சட்டையை கழட்டிவிட்டு ஓடிய தீயணைப்பு வீரர்.. வைரலாகும் வீடியோ!

இங்கிலாந்தில் இப்படி இருக்க, ஸ்பெயின், போர்த்துகல் நாட்டிலும் கடும் வெப்பம் நிலவி, பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக ஸ்பெயினில் இதுவரை இல்லாத அளவு வெப்பம் அதிகரித்துள்ளதால் அங்கு அடிக்கடி காட்டுத்தீ ஏற்பட்டு வருகிறது.

அந்த வகையில் அங்கு 20-க்கும் மேற்பட்ட இடங்களில் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ள நிலையில், இவற்றில் பல இடங்களில் காட்டூத்தீயை கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை என அதிகாரிகள் கூறியுள்ளனர்.

திடீரென ஏற்பட்ட காட்டுத்தீ.. சட்டையை கழட்டிவிட்டு ஓடிய தீயணைப்பு வீரர்.. வைரலாகும் வீடியோ!

இந்த நிலையில், இந்த காட்டுத்தீ ஏஞ்சல் மார்ட்டின் அர்ஜோனா என்னும் பகுதியிலிருந்து வடமேற்கு நகரமான தபராவை நோக்கி வேகமாகப் பரவி வந்தது. அந்த காட்டுத்தீயைக் கட்டுக்குள் கொண்டுவர சில தீயணைப்பு வீரர்கள் ஒரு வயல் பகுதியில் பள்ளம் தோண்டிக்கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாகக் காற்று வீச, பரவி வந்த தீ அங்கிருந்த பள்ளம் முழுவதும் பரவியது.

திடீரென ஏற்பட்ட காட்டுத்தீ.. சட்டையை கழட்டிவிட்டு ஓடிய தீயணைப்பு வீரர்.. வைரலாகும் வீடியோ!

அந்த சமயத்தில் பணியில் இருந்த தீயணைப்பு வீரர்கள், இந்த தீயில் இருந்து தப்பிக்க முயன்றுள்ளனர். அப்போது ஓடி வரும்போது அதில் ஒரு வீரர் தடுமாறி கீழே விழ, அவரது உடையில் தீப்பற்றிக்கொண்டது. இருப்பினும் 'முதல்வன்' படத்தில் வரும் அர்ஜுன் போல், தனது உயிரை காப்பாற்ற, தீப்பற்றிய ஆடைகளை கழட்டி எரிந்துவிட்டு அங்கிருந்து தப்பித்தார்.

எப்படியோ உயிர்பிழைத்த அந்த வீரர், ஹெலிக்காப்டர் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவரது உடல்களில் மட்டும் தீக்காயம் ஏற்பட்டுள்ளதாகவும், உயிருக்கு எந்த ஒரு ஆபத்தில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

காற்றுடன் சேர்ந்து வீசிய காட்டுத்தீயில் இருந்து வீரர் தப்பிக்கும் வீடியோ வெளியாகி பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது. ஸ்பெயினின் வடமேற்கு முதல் தென்மேற்கு பகுதிகள் வரை சுமார் 4,5400 ஹெக்டேர் நிலங்கள் காட்டுத்தீயால் பாதிக்கப்பட்டுள்ளது. வெப்ப அலை காரணமாக இதுவரை அங்கு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 368 ஆக உயர்ந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியள்ளது.

banner

Related Stories

Related Stories