உலகம்

வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்த டிரம்பின் முதல் மனைவி.. - போலிஸார் விசாரணை !

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் முதல் மனைவியான இவானா டிரம்ப், காலமானார்.

வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்த டிரம்பின் முதல் மனைவி.. - போலிஸார் விசாரணை !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

அமெரிக்காவின் முன்னாள் அதிபரான டொனால்ட் டிரம்ப், 1977-ம் ஆண்டு இவானாவை திருமணம் செய்தார். இவர்களுக்கு 3 குழந்தைகள் இருக்கும் நிலையில், 80-ம் ஆண்டு காலகட்டங்களில் மிக சிறந்த பிரபலமான ஜோடிகளில் இவர்களும் ஒருவராக திகழ்ந்தவர்.

இப்படி மகிழ்ச்சியாக சென்ற இவர்களது உறவு, 1992-ம் ஆண்டு முடிவடைந்தது. இருவருக்குமிடையே கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று தனித்தனியே வாழ்ந்து வந்தனர்.

வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்த டிரம்பின் முதல் மனைவி.. - போலிஸார் விசாரணை !

இந்த நிலையில், தற்போது 73 வயதாகும் இவானா, நியூயார்க் நகரில் வசித்து வந்துள்ளார். அப்போது அவரது வீட்டில் இருந்து எந்த வித சத்தமும் இல்லாததால் சந்தேகத்திற்குரிய வகையில் இருப்பதாக, அக்கம்பக்கத்தினர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், வீட்டினுள் சென்று பார்க்கையில், இவானா சுயநினைவின்றி இருந்துள்ளார்.

வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்த டிரம்பின் முதல் மனைவி.. - போலிஸார் விசாரணை !

இதனையடுத்து அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். பின்னர், அவரது உடல் உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் இவரது மரணம் குறித்து சந்தேகத்திற்குரிய வகையில் எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை என்றும், உடற்கூறாய்வின் அறிக்கை வெளிவந்த பின்னரே அவரது இறப்பிற்கான காரணம் தெரியவரும் என்றும் காவல்துறை தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்த டிரம்பின் முதல் மனைவி.. - போலிஸார் விசாரணை !
Evan Agostini

இவரது மரணத்திற்கு அந்நாட்டு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், இவானாவின் முன்னாள் கணவரும், அமெரிக்கா முன்னாள் அதிபருமான டொனால்ட் டிரம்ப் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட பதிவில், "அவர் ஒரு அற்புதமான, அழகான மற்றும் அற்புதமான பெண், அவர் ஒரு சிறந்த மற்றும் உத்வேகமான வாழ்க்கையை நடத்தினார்..

அவளுடைய பெருமையும் மகிழ்ச்சியும் அவளது மூன்று குழந்தைகள், டொனால்ட் ஜூனியர், இவான்கா மற்றும் எரிக். நாங்கள் அனைவரும் அவளைப் பற்றி மிகவும் பெருமைப்படுவதைப் போல, அவள் அவர்களைப் பற்றி மிகவும் பெருமையாக இருந்தாள். இவானா நிம்மதியாக இரு!" என்று உருக்கமாக குறிப்பிட்டிருந்தார்.

வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்த டிரம்பின் முதல் மனைவி.. - போலிஸார் விசாரணை !

மேலும் இவானாவுக்கு அவரது 3 குழந்தைகளும் இரங்கல் பதிவு ஒன்றை வெளியிட்டனர். அதில், ""எங்கள் அம்மா ஒரு நம்பமுடியாத பெண் - வணிகத்தில் ஒரு சக்தி, ஒரு உலகத் தரம் வாய்ந்த தடகள வீராங்கனை, ஒரு பிரகாசமான அழகு மற்றும் அக்கறையுள்ள தாய் மற்றும் தோழி. இவானா டிரம்ப் உயிர் பிழைத்தவர். அவர் கம்யூனிசத்திலிருந்து தப்பி, இந்த நாட்டைத் தழுவினார்.

அவர் தனது குழந்தைகளுக்கு கிரிட் மற்றும் கடினத்தன்மை, இரக்கம் மற்றும் உறுதிப்பாடு. அவளது தாய், அவளுடைய மூன்று குழந்தைகள் மற்றும் பத்து பேரக்குழந்தைகள் அவளை மிகவும் நேசிக்கிறோம்" என்று குறிப்பிட்டிருந்தனர்.

banner

Related Stories

Related Stories