இந்தியா

6 வயது சிறுமி மீது சூடான எண்ணெய் ஊற்றிய வளர்ப்பு கொடூர தாய் - நெஞ்சை பதற வைக்கும் பகீர் சம்பவம்!

6 வயது சிறுமியின் அந்தரங்க உறுப்பில், வளர்ப்பு தாய் சூடான எண்ணெயை ஊற்றியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

6 வயது சிறுமி மீது சூடான எண்ணெய் ஊற்றிய வளர்ப்பு கொடூர தாய் - நெஞ்சை பதற வைக்கும் பகீர் சம்பவம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

உத்தர பிரதேச மாநிலம் லக்னோவை சேர்ந்தவர் அஜய் குமார். இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த பூனம் என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. வாகனத்தில் உணவு விற்று வரும் அஜய்-க்கு குழந்தை இல்லை. எனவே தனது மனைவியிடம் ஒரு குழந்தையை தத்தெடுக்க விருப்பம் தெரிவித்துள்ளார்.

ஆனால் இதற்கு பூனம் மனம் ஒப்பு வரவில்லை. அவர் குழந்தை தத்தெடுப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளார். இருப்பினும் அவரது பேச்சை கேட்காமல் கடந்த சில நாட்களுக்கு முன்பு 6 வயதுடைய பெண் குழந்தையை தத்தெடுத்துள்ளார். இதனால் கணவர் மீது கடும் கோபத்தில் இருந்த பூனம், அதனை வளர்ப்பு குழந்தை மேல் காட்டிவந்துள்ளார்.

6 வயது சிறுமி மீது சூடான எண்ணெய் ஊற்றிய வளர்ப்பு கொடூர தாய் - நெஞ்சை பதற வைக்கும் பகீர் சம்பவம்!

இந்த நிலையில், நேற்று பூனம் சமையல் அறையில் சமைத்து கொண்டிருக்கும்போது, இந்த குழந்தை ஏதோ வந்து கேட்க, அதனால் எரிச்சலடைந்துள்ளார் பூனம். பிறகு கோபம் உச்சிக்கேறிய பூனம், சிறுமி என்றும் பாராமல் அவரது அந்தரங்க உறுப்பின் மீது சூடான எண்ணையை ஊற்றியுள்ளார். இதனால் துடிதுடித்த சிறுமி கத்தி அலறியுள்ளார்.

இதையடுத்து குழந்தை அலறல் சத்தம் கேட்ட கணவன், ஓடி வந்து பார்க்கையில் சிறுமி தரையில் துடி துடித்து கிடந்துள்ளார். பின்னர், சிறுமியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்து, தற்போது சிறுமிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

6 வயது சிறுமி மீது சூடான எண்ணெய் ஊற்றிய வளர்ப்பு கொடூர தாய் - நெஞ்சை பதற வைக்கும் பகீர் சம்பவம்!

இதனைத்தொடர்ந்து, தத்தெடுத்த குழந்தை மேல் சூடான எண்ணெய் ஊற்றியதாக பூனம் மீது கணவர் அஜய் குமார், காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

வளர்ப்பு குழந்தையின் மீது சூடான எண்ணெய் ஊற்றிய வளர்ப்பு தாயின் செயல் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories