உலகம்

பாலியல் குற்றவாளிகளுக்கு ஆண்மை நீக்கம்.. அதிரடி சட்டத்தை நிறைவேற்றிய தாய்லாந்து அரசு! காரணம் என்ன?

தொடர் பாலியல் குற்றவாளிகளுக்கு இனி இரசாயன முறையில் ஆண்மை நீக்கம் செய்யப்படும் என தாய்லாந்து அரசு சட்டம் நிறைவேற்றியுள்ளது.

பாலியல் குற்றவாளிகளுக்கு ஆண்மை நீக்கம்.. அதிரடி சட்டத்தை நிறைவேற்றிய தாய்லாந்து அரசு! காரணம் என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

சமீப காலமாக பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகிறது என்று ஒரு சாராரும், இல்லை இப்போதுதான் பாலியல் குற்றங்களில் பாதிக்கப்படும் பொதுமக்கள் அதிக அளவில் புகார் தெரிவிக்கின்றனர் என்று ஒரு சாராரும் கூறி வருகின்றனர். ஆனால், பதியப்படும் பாலியல் குற்றங்களின் எண்னிக்கை அதிகரித்து வருகிறது என்பது மட்டும் அனைவரும் ஒப்புக்கொள்ளக்கூடிய ஒன்றாக இருக்கிறது.

இதன் காரணமாக பாலியல் குற்றங்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கவேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த நிலையில் தொடர் பாலியல் குற்றவாளிகளுக்கு இனி இரசாயன முறையில் ஆண்மை நீக்கம் செய்யப்படும் என தாய்லாந்து அரசு சட்டம் நிறைவேற்றியுள்ளது.

பாலியல் குற்றவாளிகளுக்கு ஆண்மை நீக்கம்.. அதிரடி சட்டத்தை நிறைவேற்றிய தாய்லாந்து அரசு! காரணம் என்ன?

தாய்லாந்தில் பாலியல் குற்றங்கள் பெருகி வரும் நிலையில் அங்கு பாலியல் வழக்கில் கைது செய்யப்படும் குற்றவாளிகள் சிறையில் இருந்து வெளிவந்த பின்னர் மீண்டும் பாலியல் சம்பவங்களில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பல்வேறு பரிசீலனைகளுக்கு பிறகு, இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அந்நாட்டு அரசு கூறியுள்ளது.

இந்த நடைமுறைக்கு இரண்டு மருத்துவர்களின் ஒப்புதல் பெறப்படும் என்றும், தொடர்புடைய குற்றவாளி 10 ஆண்டுகள் கண்காணிக்கப்படுவார் என்றும் அரசு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் கீழ்சபையில் நிறைவேறிய இது குறித்த மசோதாவானது, திங்கள்கிழமை 145 செனட்டர்களால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

பாலியல் குற்றவாளிகளுக்கு ஆண்மை நீக்கம்.. அதிரடி சட்டத்தை நிறைவேற்றிய தாய்லாந்து அரசு! காரணம் என்ன?

இந்த மசோதா நாடாளுமன்றத்தின் ஒப்புதலுக்கு கொண்டுவரப்பட்டு, அதன் பின்னர் நாட்டின் அரச குடும்பத்து ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த சட்டம் நடைமுறைக்கு வந்தால் பாலியல் குற்றங்களுக்கு அதிக ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படுவது குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால், அதே நேரம் இது போன்ற தண்டனைகள் பாலியல் குற்றங்களை எந்த விதத்திலும் குறைக்காது என்றும், தெரியாமல் தவறு செய்தவர் வாழ்நாளில் மீண்டும் திருந்திவாழ எந்த வழியும் இருக்காது என்றும் இந்த சட்டத்துக்கு எதிர்ப்பும் எழுந்துள்ளது.

banner

Related Stories

Related Stories