தமிழ்நாடு

'பேக்குவரத்துறை' அமைச்சர் வாழ்க: புதுச்சேரி கூட்டணி அமைச்சரை ட்விட்டரில் கேவலப்படுத்திய பாஜக நிர்வாகி!

புதுச்சேரி கூட்டணி அமைச்சரை கேவலப்படுத்திய பாஜக நிர்வாகி பதிவிட்ட ட்விட்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது.

'பேக்குவரத்துறை' அமைச்சர் வாழ்க: புதுச்சேரி கூட்டணி அமைச்சரை ட்விட்டரில் கேவலப்படுத்திய பாஜக நிர்வாகி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் உடன் கூட்டணி வைத்து ஆட்சியில் பா.ஜ.க இடம் பிடித்துள்ளது. நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலிலிருந்து கூட்டணிக்குள் தொடர்ந்து குழப்பம் ஏற்பட்டு வருகிறது.

ஆனார், என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு பா.ஜ.க தலைமையிடம் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து கூட்டணியில் ஒட்டிக்கொண்டு வருகிறது. இதனால் கூட்டணி வைத்ததிலிருந்தே என்.ஆர்.காங்கிரஸ் தொண்டர்கள் பா.ஜ.க மீது கடும் கோவத்தில் உள்ளனர்.

'பேக்குவரத்துறை' அமைச்சர் வாழ்க: புதுச்சேரி கூட்டணி அமைச்சரை ட்விட்டரில் கேவலப்படுத்திய பாஜக நிர்வாகி!

இந்நிலையில் பா.ஜ.க நிர்வாகி ஒருவர் போக்குவரத்து அமைச்சரை கேவலப்படுத்தி பதிவிட்ட ட்விட்டர் என்.ஆர்.காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜூலை 11ம் தேதி புதுச்சேரி போக்குவரத்துறை அமைச்சருக்குப் பிறந்தநாள் வாழ்த்துக் கூறி பேனர் ஒன்று வைக்கப்பட்டுள்ளது. இதில் போக்குவரத்துறை என்பதற்குப் பதிலாக எழுத்துப்பிழையாக 'பேக்குவரத்துறை' என்று இருந்துள்ளது.

இது தமிழ்நாட்டில் நடந்தது என நினைத்துக் கொண்ட பா.ஜ.கவை சேர்ந்த சி.டி.ஆர்.நிர்மல்குமார் என்பவர் அவசர அவசரமாக தமிழ்நாட்டில் யார் போக்குவரத்துறை அமைச்சராக இருக்கிறார்? புதுச்சேரியில் யார் இருக்கிறார் என்பது கூட தெரியாமல் தி.மு.கவை விமர்சிப்பதாக நினைத்துக் கொண்டு கூட்டணி கட்சி அமைச்சரையே 'மக்கு' என விமர்சித்து என்.ஆர்.காங்கிரஸ் தொண்டர்களிடம் வசமாக சிக்கிக்கொண்டுள்ளார்.

இவரின் இந்த பதிவை அடுத்து 'நீங்க தான் ஜீ மக்கு, பேக்கு எல்லாமே . புதுச்சேரி பேனரை தூக்கியாந்து கம்பு சுத்துறீங்க' என நெட்டிசன்கள் சி.டி.ஆர்.நிர்மல்குமாரை வச்சு செய்கின்றனர்.

banner

Related Stories

Related Stories