உலகம்

“100 ஆண்டு பழமை.. 3800 டன் எடை.. அலேக்காக நகர்த்தப்பட்ட பிரம்மாண்ட கட்டடம்” : சாத்தியமானது எப்படி?

சீனாவில் 3,800 டன் எடை கொண்ட பழமையான கட்டடத்தை இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

“100 ஆண்டு பழமை.. 3800 டன் எடை.. அலேக்காக நகர்த்தப்பட்ட பிரம்மாண்ட கட்டடம்” : சாத்தியமானது எப்படி?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

கிழக்கு சீனாவில் இருக்கும் ஷாங்காய் நகரம் அந்நாட்டில் பொருளாதார தலைநகரமாக திகழ்ந்து வருகிறது. இந்த நகரத்தில் 100 ஆண்டுகள் பழமையான கட்டடம் ஒன்று உள்ளது. 3,800 டன் எடை கொண்ட இந்த கட்டடத்தை இடமாற்றம் செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இதற்காக பல்வேறு ஏற்பாடுகளை செய்த நிர்வாகம், இதற்காக நகர்த்தும் (நடக்கும்) இயந்திரம் ஒன்றை கொண்டுவந்தது. பின்னர் துல்லிய அளவீடுகள் மூலம் கட்டடம் அளவிடப்பட்டு, கட்டடத்தைத் தள்ளுவதற்காக கட்டடத்தின் அடியில் நெகிழ்வான பெரும் தண்டவாளங்கள் அமைக்கப்பட்டன.

“100 ஆண்டு பழமை.. 3800 டன் எடை.. அலேக்காக நகர்த்தப்பட்ட பிரம்மாண்ட கட்டடம்” : சாத்தியமானது எப்படி?

பின்னர் நகர்த்தும் இயந்திரத்தை அதன் கீழே பொருத்தப்பட்டது. இந்த இயந்திரத்தில் மனிதனை போன்ற கால்கள் அமைப்பு இடம்பெற்றுள்ளது. மேலும். இரண்டு பிரிவுகளாக பிரிந்து தூக்கவும், கீழிறக்கவும் செய்யும். இந்த இயந்திரம் மூலம் 3,800 டன் எடை கொண்ட இந்த கட்டடம் இடமாற்றப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் இதேபோன்று கட்டடங்களை நகர்த்தும் தொழில்நுட்பம் இருந்தாலும் சீனாவின் இந்த சாதனை உலக அளவில் பெரும் பாராட்டை பெற்றுள்ளது. 3,800 டன் எடை கொண்ட கட்டடத்தை எந்த பாதிப்பும் இல்லாமல் நகர்த்திய பொறியியலார்களுக்கு அந்நகர மேயர் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது.

கடந்த 2020 ஆம் ஆண்டு ஷாங்காய் நகரின் கிழக்கு ஹுவாங்பு மாவட்டத்தில் 85 ஆண்டுகள் பழமையான ஐந்து மாடி பள்ளி கட்டிடம் இதே தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இடமாற்றம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories