உலகம்

தலைமுடியை போல் புருவத்தில் வேகமாக வளரும் முடி.. அறுவை சிகிச்சையால் நேர்ந்த அவலம் - பரிதவிக்கும் இளம்பெண்!

புருவத்தை அழகாக மாற்ற வேண்டும் என்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட இளம்பெண், தற்போது புருவம் வேகமாக வளர்கிறது என்று குமுறியுள்ளார்.

தலைமுடியை போல் புருவத்தில் வேகமாக வளரும் முடி.. அறுவை சிகிச்சையால் நேர்ந்த அவலம் - பரிதவிக்கும் இளம்பெண்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

பொதுவாக மனிதர்களுக்கு தங்களது முகத்தில் உள்ள புருவங்களில் முடிகள் இருக்கும். சிலருக்கு அடர்த்தியாகவும், சிலருக்கு கம்மியாகவும் இருக்கும். அதில் கம்மியாக இருக்கும் பெண்கள், தங்களது புருவங்களில் மை இட்டு கொள்வார்கள். மேலும் அடர்த்தியாக இருப்பவர்கள், அதை ட்ரிம் செய்து கொள்வார்கள். இதற்கு த்ரெட்டிங் என்ற பெயரும் உள்ளது.

பெண்கள் தங்கள் புருவங்களை மிக அழகில் முக்கியத்துவம் பெற்ற ஒரு அங்கமாக பார்ப்பதால், அதனை மாதந்தோறும் ட்ரிம் செய்து,கொள்கிறார்கள். குறிப்பாக வெளிநாடுகளில் வசிக்கும் பெண்கள் வாரத்திற்கு ஒருமுறை இதை செய்வதாக ஒரு ஆதாரம் கூறுகிறது.

தலைமுடியை போல் புருவத்தில் வேகமாக வளரும் முடி.. அறுவை சிகிச்சையால் நேர்ந்த அவலம் - பரிதவிக்கும் இளம்பெண்!

இவ்வாறு இருக்க, இங்கிலாந்தில் வசிக்கும் இசபெல் குட்சி என்ற இளம்பெண் ஒருவர், தனது புருவங்களை அழகாக்க விரும்பியுள்ளார். 6 வயதாகும் இவர், அடிக்கடி புருவத்தை ட்ரிம் செய்வதால் புருவத்தில் உள்ள அடர்த்தி கம்மியாக தொடங்கியுள்ளது. எனவே அதற்கு நிறைய மெடிக்கல் ரெமிடிஸை எடுத்துக்கொண்டார், இருப்பினும் எதுவும் பலனளிக்காததால், வேறு என்ன செய்யலாம் என்று யோசித்து கொண்டிருந்திருக்கிற.

இந்த நிலையில், ஒரு நாள் அமெரிக்காவில் புருவத்தை மாற்றும் அறுவை சிகிச்சை குறித்த விளம்பரத்தை பார்த்துள்ளார். எனவே அங்கு சென்று தனது புருவத்தை அழகாய் மாற்ற வேண்டும் என்று, கிட்டத்தட்ட இந்திய மதிப்பில் ரூபாய் 1.4 லட்சம் அளவிற்கு செலவு செய்து அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளார்.

தலைமுடியை போல் புருவத்தில் வேகமாக வளரும் முடி.. அறுவை சிகிச்சையால் நேர்ந்த அவலம் - பரிதவிக்கும் இளம்பெண்!

இந்த சிகிச்சையானது, இசபெல்லின் தலையின் பின்பகுதியில் இருந்து தனித்தனியான மயிர்க்கால்களை (முடிகளை) எடுத்து, மூன்று மணி நேரத்தில் மருத்துவர்கள் கையால், புருவத்தில் தேவையான இடங்களில் அதனை அட்டாச் செய்யப்படும் முறையாகும். இதனை 'ட்ரான்ஸ்ப்ளான்ட்' சிகிச்சை என்றும் அழைப்பர்.

இந்த சிகிச்சை முடிந்த பின்னர், சுமார் இரண்டு வாரங்களுக்கு புருவத்தை தொடவோ, கழுவவோ கூடாது. மேலும் ஐந்து மாதங்களுக்கு பிறகு தான் புருவத்தில் முடி வளரத் தொடங்கும், அதன் பிறகு எட்டு மாதங்களில் இதனை வளர்ச்சி முழுமையடையும்.

தலைமுடியை போல் புருவத்தில் வேகமாக வளரும் முடி.. அறுவை சிகிச்சையால் நேர்ந்த அவலம் - பரிதவிக்கும் இளம்பெண்!

இசபெல் மேற்கொண்ட இந்த சிகிச்சை வெற்றியடைந்த பின்னர், மிகவும் மகிழ்ச்சியான இசபெல், தனது புருவங்கள் இனி அடர்த்தியாக வளரும் என்று பூரிப்படைந்தார். ஆனால் தற்போது, தனது தலைமுடியை போல் புருவத்தில் முடி வேகமாக வளர்ந்து வருவதால், மிகவும் அவதிப்பட்டு வருகிறார்.

இது குறித்து அவர், "அறுவை சிகிச்சைக்கு பிறகு எனது முடி அழகாக வளர்வதாக இருந்தாலும் வேகமாக வளர்கிறது. இதனால் இதனை வெட்ட மிகவும் சிரமமாக உள்ளது. இந்த கஷ்டத்தை நான் மாதா மாதம் அனுபவித்து வருகிறேன்" என்று வருத்தத்துடன் கூறினார்.

banner

Related Stories

Related Stories