உலகம்

“மோடியை போலவே ஜோ பைடனுக்கும் வந்த சோதனை..” : ‘ஈயடிச்சான் காப்பி’ என வறுத்தெடுத்த இணையவாசிகள் !

டெலிப்ராம்ப்டர் பயன்படுத்தி பேசும்போது அதில் தவறுதலாக ஒரு வார்த்தையை பேசிய ஜோ பைடனின் செயலை பலர் கிண்டல் செய்து வருகின்றனர்.

“மோடியை போலவே ஜோ பைடனுக்கும் வந்த சோதனை..” : ‘ஈயடிச்சான் காப்பி’ என வறுத்தெடுத்த இணையவாசிகள் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

உலகப் பொருளாதார மன்றத்தின் வருடாந்திர மாநாடு இணையவழியில் நடந்தது. அதில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி டெலிப்ராம்ப்டர் இயந்திரத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக சில நிமிடங்கள் தயங்கித் திணறினார். இந்த வீடியோ இணையத்தில் பெரும் கிண்டலாக மாறியது.

மோடியின் இந்த வீடியோவை பலர் இணையத்தில் கிண்டல் செய்தனர். இந்த நிலையில் இதே போன்ற ஓர் நிலை அமெரிக்க அதிபர் ஜோபைடனுக்கு நடந்துள்ளது. அமெரிக்காவில் கருக்கலைப்பு செய்வதற்கான அரசியலமைப்பு உரிமையை அந்நாட்டின் உச்சநீதிமன்றம் சமீபத்தில் ரத்து செய்தது தொடர்பாக ஜோபைடன் தொலைக்காட்சி மூலம் மக்களிடம் பேசினார்.

“மோடியை போலவே ஜோ பைடனுக்கும் வந்த சோதனை..” : ‘ஈயடிச்சான் காப்பி’ என வறுத்தெடுத்த இணையவாசிகள் !

இந்த உரையாடலின் போது அவர் டெலிப்ராம்ப்டர் பயன்படுத்தி மக்களிடம் பேசினார். அப்போது டெலிப்ராம்ப்டரில் காட்டிய 'Repeat the line' என்ற வார்த்தையை அவர் பேசினார். (சில வார்த்தைகளை இரண்டாவது முறையாக கூறுங்கள் என்பதை நினைவுப்படுத்தும் வகையில் 'Repeat the line' என டெலிப்ராம்டரில் எழுதப்பட்டு இருக்கும்) .

குறிப்புக்காக இருக்கும் இதுபோன்ற வார்த்தையை புரிந்துகொள்ளாமல், 'ஈ அடித்தான் காப்பி'போல அதை மீண்டும் படித்த ஜோபைடனின் வீடியோவை பகிர்ந்து பலர் கிண்டல் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், ஜோபைடனின் இந்த வீடீயோவை ஒருவர் டிவிட்டர் பக்கத்தில் பதிவு செய்திருந்தார். அதற்கு பதிலளித்துள்ள டெஸ்லா அதிபர் எலான் மஸ்க், 2004ல் வெளியான 'ஆங்கர்மேன்: தி லெஜண்ட் ஆப் ரான் பர்கண்டி' எனும் திரைப்படத்தின் ஒரு போட்டோவை அவர் பதிவிட்டுள்ளார். அதில், ''டெலிப்ராம்டரில் எதை எழுதி இருந்தாலும் நம் தலைவர் படித்துவிடுவார்'' என வேடிக்கையாக குறிப்பிடப்பட்டுள்ளது. எலான் மஸ்க்கின் இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

banner

Related Stories

Related Stories