உலகம்

21 ஆண்டுக்குப் பிறகு தோண்டி எடுக்கப்பட்ட முல்லா உமர் கார்.. அருங்காட்சியகத்தில் வைக்க தாலிபான் திட்டம்!

தாலிபான் அமைப்பை உருவாக்கிய முல்லா உமர் காரை 21 ஆண்டுகளுக்கு பிறகு தாலிபான்கள் பூமியில் இருந்து தோண்டி எடுத்துள்ளனர்.

21 ஆண்டுக்குப் பிறகு தோண்டி எடுக்கப்பட்ட  முல்லா உமர் கார்..  அருங்காட்சியகத்தில் வைக்க தாலிபான் திட்டம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

அமெரிக்காவில் 2009ம் ஆண்டு இரட்டை கோபுரத்தின் மீது தாலிபான்கள் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து அமெரிக்க ராணுவப்படை ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்து தாலிபான்களை ஒடுக்கியது.

இதனால் அச்சமடைந்த தாலிபான் அமைப்பின் தலைவர் முல்லா ஒமர் தான் பயன்படுத்தி வந்த காரை எடுத்துக் கொண்டு அமெரிக்க ராணுவத்திடம் இருந்து தப்பிச் சென்றார். பின்னர் 2015ம் ஆண்டு இவர் உயிரிழந்ததாகத் தாலிபான் அமைப்பு அறிவித்தது.

இந்நிலையில் ஆப்கானிஸ்தானை மீண்டும் முழுமையாக கைப்பற்றிய தாலிபான்கள் தங்களது தலைவர் பயன்படுத்திய காரை தேடி வந்துள்ளனர். இதையடுத்து 21 ஆண்டுகளுக்கு பிறகு முல்லா உமர் காரை தாலிபான்கள் பூமியிலிருந்து தோண்டி எடுத்துள்ளனர்.

தற்போது இந்த கார் பயன்படுத்தக் கூடிய நிலையில் உள்ளதாகவும், காரின் முன்பக்க கண்ணாடி மட்டுமே உடைந்துள்ளதாகவும், இந்த காரை ஆப்கானிஸ்தான் தேசிய அருங்காட்சியகத்தில் வைக்கப்போவதாகவும் தாலிபான்கள் தெரிவித்துள்ளனர்.

21 ஆண்டுக்குப் பிறகு தோண்டி எடுக்கப்பட்ட  முல்லா உமர் கார்..  அருங்காட்சியகத்தில் வைக்க தாலிபான் திட்டம்!

1960ம் ஆண்டு ஆப்கானிஸ்தானின் காந்திஹாரில் முல்லா உமர் பிறந்தார். 1994ம் ஆண்டு தாலிபான்கள் அமைப்பை உருவாக்கினார் முல்லா உமர். இந்த அமைப்பைக் கொண்டு ஆப்கானிஸ்தானில் ஆட்சியைப் பிடித்தார். 2015ம் ஆண்டு முல்லா உமர் உடல்நலக்குறைவால் உயிரிழந்ததாகத் தாலிபான்கள் அறிவித்தனர்.

banner

Related Stories

Related Stories