உலகம்

வயிற்றில் 233 பொருட்கள்.. மினி குப்பை தொட்டியையே வைத்திருந்த நபரால் மருத்துவர்கள் அதிர்ச்சி!

துருக்கியை சேர்ந்த ஒருவரின் வயிற்றில் இருந்த 233 பொருட்களை அறுவை சிகிச்சை மூலம் மருத்துவர்கள் அகற்றியுள்ளனர்.

வயிற்றில் 233 பொருட்கள்.. மினி குப்பை தொட்டியையே வைத்திருந்த நபரால் மருத்துவர்கள் அதிர்ச்சி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

துருக்கியை சேர்ந்த ஒருவருக்கு வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவரது சகோதரர் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவருக்கு எண்டோஸ்கோபி, எக்ஸ்ரே எடுக்கசொல்லியுள்ளனர்.

மருத்துவர் பரிந்துரையின்படி அவரும் எண்டோஸ்கோபி, எக்ஸ்ரே எடுத்து அவற்றை மருத்துவரிடம் காட்டியுள்ளார். இதை பார்த்த மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஏனெனில் அவரது வயிற்றில், பேட்டரிகள், காந்தம், நகங்கள், கண்ணாடி துண்டுகள், ஸ்க்ரூஸ், கற்கள் என 233 பொருட்கள் இருந்துள்ளன.

வயிற்றில் 233 பொருட்கள்.. மினி குப்பை தொட்டியையே வைத்திருந்த நபரால் மருத்துவர்கள் அதிர்ச்சி!

இது குறித்து மருத்துவர்கள் அவரிடம் கேட்டதற்கு, சரியாக பதில் கூற மறுத்துள்ளார். பின்னர் அவருக்கு அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள் அவரது வயிற்றில் இருந்த பொருள்களை அகற்றியுள்ளனர். இந்த அறுவை சிகிக்சை வெற்றிகரமாக நடத்தப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

பின்னர் இது தொடர்பாக கூறிய மருத்துவர்கள், "சிகிச்சையின்போது ஒன்றிரண்டு பொருள்கள் வயிற்றுச் சுவரில் துளைத்திருந்தது அதை அகற்றினோம். அதேபோல பெருங்குடல் பகுதியில் இரண்டு உலோகத் துண்டுகள் இரண்டு கற்கள் இருந்தது. அதையும் அகற்றினோம் " என கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories