உலகம்

“எனக்கு எந்த சிம்டம்ஸும் தெரியவில்லை” : கழிவறையில் குழந்தையை பெற்றெடுத்த மாணவி - உறைந்துபோன டாக்டர்கள்!

20 வயது கல்லூரி மாணவி ஒருவர், கழிவறையில் குழந்தைப் பெற்றெடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 “எனக்கு எந்த சிம்டம்ஸும் தெரியவில்லை” : கழிவறையில் குழந்தையை பெற்றெடுத்த மாணவி - உறைந்துபோன டாக்டர்கள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

இங்கிலாந்து நாட்டிலுள்ள சவுத்தாம்ப்டன் பல்கலைக்கழகத்தில், வரலாறு மற்றும் அரசியல் பாடப்பிரிவில் 20 வயதுடைய ஜெஸ் டேவிஸ் என்ற மாணவி ஒருவர் படித்து வருகிறார். பொதுவாக வெளிநாடுகளில் திருமணம் செய்துகொள்ளாமல் உறவு வைத்துக்கொள்ளும் பழக்கம் இயல்பானது. அப்படி இவருக்கும் இவரது ஆண் நண்பருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், கடந்த ஜூன் 11-ம் தேதி வீட்டில் தனியாக இருந்த ஜெஸ் டேவிஸுக்கு வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனை டேவிஸ் வழக்கமாக வரும் வயிற்று வலி என்று கண்டுகொள்ளாமல் விட்டுள்ளார். இருப்பினும் அவரால் மற்ற வேலைகளை சரிவர செய்ய முடியவில்லை.

இதையடுத்து மறுநாள் ஜூன் 12 ஆம் தேதி தனக்கு பிறந்தநாள் என்பதால், இரவு வெளியே டின்னருக்கு செல்வதற்காக குளித்து விட்டு தயாராகியுள்ளார். அப்போது திடீரென்று வயிறு வலி மோசமாக உடனே கழிவறைக்கு சென்றுள்ளார். அங்கே அவருக்கு எதிர்பாராத விதமாக ஒரு குழந்தை பிறந்தது.

 “எனக்கு எந்த சிம்டம்ஸும் தெரியவில்லை” : கழிவறையில் குழந்தையை பெற்றெடுத்த மாணவி - உறைந்துபோன டாக்டர்கள்!

இதையடுத்து, தனது நெருங்கிய நண்பரான லீவ் கிங்கை தொடர்பு கொண்ட ஜெஸ் டேவிஸ், தனக்கு நிகழ்ந்த சம்பவத்தை கூறியுள்ளார். இருப்பினும் பிறந்தநாள் விருந்துக்கு வராமல் இருப்பதற்கு டேவிஸ் இப்படி கூறுவதாக நினைத்த லிவ் கிங், முதலில் அவர் கூறியதை நம்பவில்லை. பின்னர் பிறந்த குழந்தையின் புகைப்படத்தை வாட்சப்-ல் அனுப்பியதை பார்த்தவுடன் தான் அதிர்ச்சியடைந்து உடனே ஜெஸ் டேவிஸ் வீட்டிற்கு புறப்பட்டார்.

மேலும் தொடர்ந்து தொலைபேசியில் பேசிக்கொண்டே சென்ற அவர், உடனடியாக ஆம்புலன்ஸை அழைக்குமாறு டேவிஸிடம் அறிவுறுத்தியுள்ளார். அதன்பிறகு ஆம்புலன்ஸை வரவழைத்த டேவிஸ், அதன் மூலம் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டார். 3 கிலோ எடையுடன் பிறந்த அந்த ஆண் குழந்தை இன்குபேட்டரில் வைக்கப்பட்டது.

 “எனக்கு எந்த சிம்டம்ஸும் தெரியவில்லை” : கழிவறையில் குழந்தையை பெற்றெடுத்த மாணவி - உறைந்துபோன டாக்டர்கள்!

இது குறித்து மருத்துவர்கள் கூறுகையில், "35 வாரங்களில் ஜெஸ் டேவிஸ் குழந்தை பெற்றுள்ளார். தற்போது அவர்கள் இருவரும் நலமுடன் இருக்கின்றனர்" என்றனர். மேலும் இது தொடர்பாக ஜெஸ் டேவிஸ் பேசுகையில், "எந்த நேரத்திலும் நான் குழந்தை பெற்றெடுப்பேன் என நினைக்கவில்லை.

குழந்தை வெளியே வந்ததும் அது என்னவென்று அறிவதற்கும், குழந்தை அழுவதற்கும் நேரம் சரியாக இருந்தது. குழந்தை பிறந்தது நிஜமான சம்பவம் என்று உணரவே நிறைய நேரம் ஆனது. எல்லாவற்றிற்கும் மேலாக, நான் கர்ப்பமாக இருப்பதாக ஒரு முறை கூட உணரவில்லை. ஒரு கர்ப்பிணி பெண்ணுக்கு வரும் எந்த ஒரு அறிகுறியும் எனக்கு தெரியவில்லை" என்று ஆனந்த கண்ணீருடன் தெரிவித்தார்.

கல்லூரி படிக்கும் மாணவி ஒருவர் கழிவறையில் குழந்தையை பெற்றெடுத்துள்ள சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories