உலகம்

“பாலியல் உறவில் Yes என்றால் மட்டுமே சம்மதம்; NO என்றால் இல்லை என்றே அர்த்தம்”: ஸ்பெயினில் புதிய சட்டம்!

“பாலியல் உறவில் YES என்ற பதில் மட்டுமே சம்மதமாகும்” என கருதும் வகையில், “Only yes means yes” என்ற புதிய மசோதாவுக்கு ஒப்புதல் அளித்துள்ளது ஸ்பெயின் நாடாளுமன்றம்!

“பாலியல் உறவில் Yes என்றால்  மட்டுமே சம்மதம்; NO என்றால் இல்லை என்றே அர்த்தம்”: ஸ்பெயினில் புதிய சட்டம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

ஸ்பெயின் நாட்டின் நவாரே பகுதியில் உள்ள பாம்ப்லோனா நகரத்தில் கடந்த 2016ம் ஆண்டு, சான் ஃபெர்மின் எருது ஓட்டத் திருவிழாவிழா நடைபெற்றது. அவ்விழாவில் கலந்துக்கொள்ள வந்த பெண் ஒருவரை அவர் சுய நினைவில் இல்லாமலிருந்த நிலையில், ஐந்து பேர் கொண்ட கும்பல் அவரை பாலியல் வன்கொடுமை செய்தது.

இதுதொடர்பான வழக்கு, ஸ்பெயின் நீதிமன்றத்தில் நடைபெற்ற போது, “பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டவர்கள் குற்றவாளிகளே. ஆனால், இது பாலியல் வன்கொடுமையாக கருத முடியாது. ஏனெனில் சம்பவம் நடந்தபோது, பாதிக்கப்பட்ட பெண் 'No' மற்றும் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. எனவே இது பாலியல் வன்கொடுமை அல்ல” என நீதிமன்றம் தீர்ப்பு அளித்திருந்தது.

நீதிமன்றத்தின் இத்தகைய தீர்ப்பு அங்குள்ள ஜனநாயக மற்றும் பெண்கள் அமைப்பினரிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. மேலும் பல்வேறு இடங்களிலும் போராட்டங்க வெடித்தது.

இந்நிலையில், பாலியல் உறவில் YES என்ற பதில் மட்டுமே பாலியல் உறவுக்கு சம்மதமாகும் என கருதும், “ஒன்லி யெஸ் மீன்ஸ் யெஸ் - Only yes means yes” என்ற புதிய மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த நிலையில், அந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளித்துள்ளது ஸ்பெயின் நாடாளுமன்றம்.

ஒப்புதல் அளிக்கப்பட்ட மசோதாவின் படி, பாலியல் உறவில், ஒரு நபரின் சுய நினைவு மற்றும் வெளிப்படையான சம்மதம் மட்டும் ஒப்புதலாக கருத்தப்பட்டும். அதேவேளையில், விருப்பம் இல்லாமல், எதுவும் சொல்லாமல் மௌனமாக இருந்தாலும் அல்லது இல்லை 'NO' என்றாலும் இல்லை என்றே அர்த்தம்.

“பாலியல் உறவில் Yes என்றால்  மட்டுமே சம்மதம்; NO என்றால் இல்லை என்றே அர்த்தம்”: ஸ்பெயினில் புதிய சட்டம்!

எனவே அதனடிப்படையில், சம்மதமில்லாமல் உடலுறவு நடந்தால், அது அதுமீறலாக கருத்தப்படும். அந்த அத்துமீறல் தண்டனைக்கு 15 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இத்தகைய பாலியல் குற்றங்களில் ஈடுபடும், சிறார்களுக்கு பாலியல் கல்வி, பாலின சமத்துவம் உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்பட்டும். பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டுவோர் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் 24 மணி நேர உதவி மையங்களோடு இணைக்கப்பட்டு, உதவிகள் அளிக்கப்பட்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

ஸ்பெயின் நாடாளுமன்றத்தின் இத்தகைய தீர்ப்புக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுக்களையும் வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளனர். மேலும் அனைத்து நாடுகளிலும் இத்தகைய மசோதாவை கொண்டுவந்து சட்டமாக்கவேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories