உலகம்

ட்விட்டரில் 20% போலி கணக்கு.. தீடிரென தனது முடிவில் ஜகா வாங்கும் எலான் மஸ்க்: முற்றும் மோதல்!

மேற்கத்திய நாட்டின் பின்னணியில் உருவான ராணுவ புரட்சியை, வெற்றிகரமாக முறியடித்துள்ளதாக, மாலி அரசு அறிவித்துள்ளது.

ட்விட்டரில் 20% போலி கணக்கு.. தீடிரென தனது முடிவில் ஜகா வாங்கும் எலான் மஸ்க்: முற்றும் மோதல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பின்லாந்து, ஸ்வீடன் நாடுகளை எப்படி நம்புவது? துருக்கி கேள்வி!

நோட்டோ ராணுவ கூட்டமைப்பில் இணைய விரும்பும் பின்லாந்து மற்றும் ஸ்வீடனின் நாடுகளுக்கு துருக்கி எப்போதும் ஒப்புதல் தராது என அந்த நாட்டு ஜனாதிபதி ரெசெப் தையிப் எர்டோகன் தெரிவித்துள்ளார். இந்த இருநாடுகளுக்கும் பயங்கரவாத அமைப்பு குறித்து தெளிவான மற்றும் வெளிப்படையான அணுகுமுறை இல்லாத போது எவ்வாறு அவர்களை நம்புவது? ஸ்வீடனை ஹேச்சரி என்ற பயங்கரவாத அமைப்பு. அவர்களது நாடாளுமன்றத்தில் பயங்கரவாதிகள் இருக்கின்றனர் என்று துருக்கி அதிபர் தெரிவித்துள்ளார்.

6 மாதங்களுக்குள் அனைவருக்கும் 'கிரீன் கார்டு'!

'அமெரிக்காவில் நிரந்தரமாக வசிப்பதற்கான, 'கிரீன் கார்டு' கோரி தாக்கல் செய்யப்படும் விண்ணப்பங்கள் மீது, ஆறு மாதங்களுக்குள் முடிவு எடுக்க வேண்டும்' என, அமெரிக்க அதிபருக்கான ஆலோசனை குழு பரிந்துரை செய்துள்ளது. இது, அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிபர் ஒப்புதல் அளித்ததும், இந்த பரிந்துரை நடைமுறைக்கு வரும்.

ட்விட்டரில் 20% போலி கணக்கு.. தீடிரென தனது முடிவில் ஜகா வாங்கும் எலான் மஸ்க்: முற்றும் மோதல்!

ராணுவ புரட்சி முறியடிப்பு; மாலி அரசு அறிவிப்பு!

மேற்கத்திய நாட்டின் பின்னணியில் உருவான ராணுவ புரட்சியை, வெற்றிகரமாக முறியடித்துள்ளதாக, மாலி அரசு அறிவித்துள்ளது. 18 மாதங்களில் தேர்தல் நடத்துவதாக, அசிமி கோய்டா அறிவித்தார். ஆனால், கடந்த பிப்ரவரியில், 'கெடு' காலம் முடிந்த பின்னரும், தேர்தல் நடக்கவில்லை. இதையடுத்து, மாலியில் ஒன்பது ஆண்டுகளாக இருந்த தன் ராணுவத்தை, பிரான்ஸ் திரும்பப் பெற நடவடிக்கை எடுத்தது. இந்நிலையில், மாலிக்கு எதிராக பொய் செய்திகள் வெளியிடுவதாக கூறி, பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த இரு ஊடகங்களுக்கு, மாலி அரசு தடை விதித்தது.

ட்விட்டரில் 20 சதவீத போலி கணக்குகள்: எலான் மஸ்க் காட்டம்

ட்விட்டரில் போலி கணக்குகள் எத்தனை உள்ளது என்பதை ஆதாரத்துடன் நிரூபிக்காத வரை டுவிட்டரை வாங்கும் ஒப்பந்தம் முன் நகராது என எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். ட்விட்டரில் 20 - 50 சதவீதம் போலி கணக்குகள் இருப்பதாகவும், அதை கணக்குகளை முடக்க உள்ளதாகவும் எலான் மஸ்க் தெரிவித்திருந்தார். இதற்கு விளக்கம் அளித்த விட்டர் சி.இ.ஓ பராக் அகர்வால், மொத்த ட்விட்டர் பயன்பாட்டாளர்களில் 5 சதவீதத்திற்கும் குறைவாகவே போலி கணக்குகள் உள்ளதாக தெரிவித்திருந்தார். இதனால் கடுப்பான எலான் மஸ்க், அவரை அவமானம் செய்யும் வகையில் ‘மலம்’ எமோஜியை ட்விட்டரில் பதிவு செய்தார்.

ட்விட்டரில் 20% போலி கணக்கு.. தீடிரென தனது முடிவில் ஜகா வாங்கும் எலான் மஸ்க்: முற்றும் மோதல்!

கோதுமை தடையை - இந்தியா மறுபரிசீலனை செய்ய அமெரிக்கா கோரிக்கை!

கோதுமை ஏற்றுமதி மீது பிறப்பித்துள்ள தடையை இந்தியா மறுபரிசீலனை செய்ய வேண்டும் என அமெரிக்கா விருப்பம் தெரிவித்துள்ளது. இதுபற்றி உலகளாவிய உணவு பாதுகாப்பு பற்றி ஐ.நா.வுக்கான அமெரிக்க பிரதிநிதி லிண்டா தாமஸ் கிரீன்பீல்டு நியூயார்க்கில் நிருபர்களிடம் கூறியதாவது:-

உக்ரைன் மீதான ரஷிய போரால் உணவு பாதுகாப்பின்மை பிரச்சினை அதிகரித்துள்ளது. ரஷியாவின் போரினால் விவசாய உற்பத்தி பொருட்களை முன்னோக்கி செல்லாமல் தடுத்துள்ளது. இது உணவுப்பற்றாக்குறையை அதிகரிக்கும் என்பதால் கோதுமை ஏற்றுமதியைக் கட்டுப்படுத்த வேண்டாம் என்று நாடுகளை அமெரிக்கா ஊக்குவித்து வருகிறது.

banner

Related Stories

Related Stories