இந்தியா

“சொகுசு விடுதியில் பெண்ணின் சடலம்.. குற்றவாளியைக் காட்டிக் கொடுத்த Google Pay”: துப்பு துலங்கியது எப்படி

கோவாவில் சொகுசு விடுதியில், பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட நிலையில் அவரது ஆண் நண்பரை போலிஸார் கைது செய்துள்ளனர்.

“சொகுசு விடுதியில் பெண்ணின் சடலம்..  குற்றவாளியைக் காட்டிக் கொடுத்த Google Pay”: துப்பு துலங்கியது எப்படி
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மகாராஷ்டிராவைச் சேர்ந்தவர் கணேஷ் விர்னோத்கர். இவர் மே மாதம் 9ம் தேதி ஸ்ரேயா என்பவருடன் சேர்ந்து கோவாவிற்குச் சென்றுள்ளார். அங்கு இருவரும் சொகுசு விடுதி ஒன்றில் அறை எடுத்துத் தங்கியுள்ளனர். பின்னர், மே 13ம் தேதி அறையிலிருந்து வெளியே சென்ற கணேஷ் மீண்டும் விடுதிக்குத் திரும்பி வரவில்லை. மேலும் அவர் தங்கியிருந்த அறையின் கதவும் முன்பக்கமாகப் பூட்டப்பட்டிருந்தது.

இதனால் சந்தேகம் அடைந்த விடுதி ஊழியர்கள் இது குறித்து போலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். பிறகு அங்கு வந்த போலிஸார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, அழுகிய நிலையில் பெண்ணன் சடலம் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் கணேஷ் விர்னோத்கர் குறித்த எந்த விவரங்களும் விடுதி ஊழியர்களிடம் இல்லாததால் அவரை கண்டு பிடிப்பதில் போலிஸாருக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து விடுதியில் அறைக்கு கூகுள்பே மூலம் கணேஷ் பணம் செலுத்தியது போலிஸாருக்கு தெரியவந்தது. பின்னர் போலிஸார் அந்த கூகுள் பே எண்ணைக் கொண்டு விசாரணை செய்தபோது, கணேஷ் விர்னோத் மகாராஷ்டிராவில் இருப்பது தெரியவந்தது.

உடனே போலிஸார் மகாராஷ்டிரா சென்று அவரை கைது செய்து கோவா அழைத்து வந்து விசாரணை செய்தனர். இதில் மே 10ம் தேதி ஸ்ரேயாவிற்கு வயிற்று வலி ஏற்பட்டது. பிறகு அடுத்த நாள் நான் அறையைப் பூட்டிவிட்டு சென்றுவிட்டேன். அவர் உயிரிழந்தது குறித்து எனக்கு எதுவும் தெரியாது என கூறியுள்ளார்.

இதனால், ஸ்ரேயா எப்படி இறந்தார் என்பது குறித்த மர்மம் தொடர்ந்து நீட்டித்து வருகிறது. இருப்பினும் அவரை உள்ளே வைத்து அறையை பூட்டிச் சென்றார் என்ற காரணத்தை கணேஷ் கூறாததால் அவரிடம் போலிஸார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories