இந்தியா

திருமணத்தில் குடித்து விட்டு நடனமாடிய மாப்பிள்ளை.. கடைசி நேரத்தில் மணமகள் செய்த காரியம்: உறவினர்கள் ஷாக்!

திருமணத்தின்போது குடித்து விட்டு மணமகன் நடனமாடியதால், வேறு ஒருவரை மணமகள் திருமணம் செய்த சம்பவம் ராஜஸ்தானில் நடந்துள்ளது.

திருமணத்தில் குடித்து விட்டு நடனமாடிய மாப்பிள்ளை.. கடைசி நேரத்தில் மணமகள் செய்த காரியம்: உறவினர்கள் ஷாக்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ராஜஸ்தான் சுரு மாவட்டத்தைச் சேர்ந்தவர் சுனில். 27 வயது இளைஞரான இவருக்குச் செலானா கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவருக்குத் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்காக மணமகன் வீட்டில், மணமகளின் கிராமத்திற்குச் சென்றுள்ளார். அப்போது மணமகனை வரவேற்பதற்காக இசை வாத்தியங்களுடன் DJ இசையும் வைக்கப்பட்டிருந்துள்ளது.

அந்நேரம் மணமகனும் அவரது நண்பர்களும் குடித்திருந்ததால் வரவேற்பு ஊர்வலத்தைத் தொடங்க விடாமல் தொடர்ந்து உற்சாகமாக நடனமாடிக் கொண்டிருந்துள்ளனர். இதனால் திருமணம் குறித்த நேரத்திற்கு இவர்களால் வந்து சேர முடியவில்லை. இதனால் மணமகளின் குடும்பத்தினர் கடுப்பாகியுள்ளனர். மேலும் மணமகளும் குடித்து விட்டு நடனமாடியதால் சுனிலை திருமணம் செய்து கொள்ள முடியாது என கூறியுள்ளார்.

இதையடுத்து, திருமணத்திற்காகக் குறித்த நேரத்திலேயே தனது மகளுக்கு வேறு ஒருவருக்குத் திருமணம் செய்து வைத்துள்ளனர். இதனை அறிந்து மணமகன் குடும்பத்தினர் தகராறு செய்துள்ளனர். பின்னர், இது குறித்து மணமகனின் குடும்பத்தினர் காவல்நிலையத்தில் புகார் அளிக்கச் சென்றனர். அப்போது மணமகளின் குடும்பத்தை அழைத்து போலிஸார் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

மணமகனின் குடும்பத்தினர் திருமணத்தின் போது கவனக்குறைவாக இருந்தனர். எதிர்காலத்திலும் இந்த அணுகுமுறை தொடரும் என்பதால் வேறு ஒருவருக்குத் திருமணம் செய்து கொடுத்தோம் என தெரிவித்துள்ளனர். பின்னர் போலிஸார் இருவரையும் சமாதானப்படுத்தி அனுப்பிவைத்தனர்.

banner

Related Stories

Related Stories