உலகம்

30 ஆண்டுகளுக்கு பிறகு பிரான்ஸ் நாட்டில் பிரதமராகும் முதல் பெண்..சோமாலியாவுக்கு படைகளை அனுப்பும் அமெரிக்கா

பிரான்ஸ் நாட்டின் அதிபர் தேர்தலில் வெற்றிபெற்ற இம்மானுவேல் மேக்ரான் 2-வது முறையாக அதிபராக பொறுப்பேற்றுள்ளார்.

30 ஆண்டுகளுக்கு பிறகு பிரான்ஸ் நாட்டில் பிரதமராகும் முதல் பெண்..சோமாலியாவுக்கு படைகளை அனுப்பும் அமெரிக்கா
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

1) பிரான்ஸ் புதிய பிரதமராக எலிசபெத் போர்னி நியமனம்!

பிரான்ஸ் நாட்டின் அதிபர் தேர்தலில் வெற்றிபெற்ற இம்மானுவேல் மேக்ரான் 2-வது முறையாக அதிபராக பொறுப்பேற்றுள்ளார். பிரான்ஸ் பிரதமர் ஜீன் கெஸ்ட்க்ஸ் நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார். இம்மானுவேல் மேக்ரான் 2-வது முறையாக பொறுப்பேற்ற பின்னர் அமைச்சரவையில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில், பிரதமர் ஜீன் கெஸ்ட்க்ஸ் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனை தொடர்ந்து எலிசபெத் போர்னி புதிய பிரதமராக நியமனம் செய்யபட்டுள்ளார்.

30 ஆண்டுகளுக்கு பிறகு பிரான்ஸ் நாட்டில் பிரதமராகும் முதல் பெண்..சோமாலியாவுக்கு படைகளை அனுப்பும் அமெரிக்கா

2) இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் - பாலஸ்தீனர்கள் இடையே மோதல்

இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் - பாலஸ்தீனர்கள் இடையே நடந்த மோதலில் 70-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்த லாவிட் ஷெரீப் நேற்று உயிரிழந்தார். இதனையடுத்து, உயிரிழந்த ஷெரீப்பின் உடல் அல் அக்சா இஸ்லாமிய மத வழிபாட்டு தலத்தில் வைக்கப்பட்டு பின்னர் ஜெருசலேம் பழைய நகர் பகுதியில் அடக்கம் கொண்டு செல்லப்பட்டது. அப்போது, பாலஸ்தீனர்கள் சிலர் இஸ்ரேலிய படையினர் மீது கற்கலையும், எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களையும் வீசினர். இதனால், இரு தரப்பினருக்கும் இடையே மோதல் வெடித்தது. இந்த மோதலில் 77 பேர் காயமடைந்தனர்.

3) வடகொரியாவில் மருந்து வினியோகத்தில் ஈடுபட ராணுவத்துக்கு கிம் ஜாங் உத்தரவு

தனது கட்சியின் அரசியல் விவகாரகுழு கூட்டத்தில் அதிபர் கிம் ஜாங் கலந்துகொண்டார். அப்போது அவர், “அரசு கையிருப்பில் உள்ள மருந்துகளை மருந்தகங்களுக்கு உடனடியாக அனுப்புமாறும், மருந்தகங்கள் 24மணி நேரமும் செயல்படவேண்டும் என்றும் அரசியல் விவகாரகுழு ஏற்கனவே உத்தரவுபிறப்பித்து இருந்தது. ஆனால் அந்த உத்தரவை சுகாதார அதிகாரிகள் பின்பற்றவில்லை.அவர்கள் பொறுப்பற்ற முறையில் நடந்துகொண்டனர். கொரோனா ஒழிப்பு நடவடிக்கையில் திறம்பட ஈடுபடவில்லை. ஆகவே, எனது ராணுவத்தில் உள்ள மருந்துவ குழுக்கள், தலைநகர் பியாங்யாங்கில் மருந்துகள் வினியோகத்தை கவனித்துக்கொள்ள வேண்டும்.” என்று கூறினார்

30 ஆண்டுகளுக்கு பிறகு பிரான்ஸ் நாட்டில் பிரதமராகும் முதல் பெண்..சோமாலியாவுக்கு படைகளை அனுப்பும் அமெரிக்கா

4) சோமாலியாவுக்கு மீண்டும் படைகளை அனுப்ப ஜோ பைடன் உத்தரவு !

சோமாலியாவுக்கு மீண்டும் படைகளை அனுப்ப ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளார். கடந்த ஆண்டு ஜனவரி மாதம் அமெரிக்க அதிபராக இருந்த டொனால்டு டிராம்ப் சோமாலியாவில் இருந்து அமெரிக்க படைகள் முழுவதையும் திரும்பப்பெற உத்தரவிட்டார். இந்நிலையில், சோமாலியாவுக்கு மீண்டும் படைகளை அனுப்ப அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளார். முதற்கட்டமாக 500 வீரர்கள் சோமாலியாவுக்கு அனுப்பப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அல்-அஷபாப் பயங்கரவாதிகளுக்கு எதிராக சோமாலிய படைகள் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கு அமெரிக்க படைகள் உறுதியாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

5) ‘லாங் நைட்’ எனப்படும் நீண்ட இரவு காலத்திற்கு சென்றுவிட்டது அண்டார்டிகா!

அண்டார்டிகாவில் இன்னும் 4 மாதங்களுக்கு அங்கு சூரிய உதயம் இருக்காது என ஆராய்ச்சியாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். லாங் நைட் எனப்படும் நீண்ட இரவு காலத்திற்கு சென்று விட்டது அண்டார்டிகா. இன்னும் 4 மாதங்களுக்கு அங்கு சூரிய உதயம் இருக்காது என ஆராய்ச்சியாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். அங்கு கடைசி சூரியன் மறைவு மே 13ஆம் தேதி நிகழ்ந்தது. பூமியின் மற்ற பகுதியில் ஒரு நாள் என்பது இரவு பகல் சேர்ந்தது. ஆனால் அண்டார்டிகாவில் இரவு பகல் மாறுவதே சுமார் 6 மாதங்களுக்கு ஒரு முறை தான். இதற்கு காரணம் பூமி தன் அச்சில் 23.5 டிகிரி சாய்ந்து இருப்பதே காரணம் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories