உலகம்

ஏரியில் கண்டெடுக்கப்படும் மனித உடல்கள்.. டிரம்ப் மீதான தடையை நீக்கிய எலான் மஸ்க்!

டொனால்ட் டிரம்ப் மீதான டுவிட்டர் தடையை திரும்பப் பெறப்போவதாக டெஸ்லா தலைவர் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

ஏரியில் கண்டெடுக்கப்படும் மனித உடல்கள்.. டிரம்ப் மீதான தடையை நீக்கிய எலான் மஸ்க்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சீனாவிடம் புதிய நீர்மூழ்கி கப்பல்!

சீனாவின் லியோனிங்க் மாகாணத்தில் உள்ள ஹூலுடாவ் துறைமுகத்தில், சமீபத்தில் ஒரு கப்பல் நிறுத்தப்பட்டிருந்தது. இது, நீர்மூழ்கி கப்பல் என்பது, 'சாட்டிலைட்' படங்களில் இருந்து தெரியவந்துள்ளது. கடலில் மிதக்கும் கப்பல்கள் மற்றும் நீருக்கு அடியில் இருக்கும் நீர்மூழ்கி கப்பல்களை தாக்கக்கூடிய, அதிக திறனுடைய 'ஹன்டர்' வகை நீர்மூழ்கி கப்பல்கள் சீனாவிடம் இல்லை. அடுத்த சில ஆண்டுகளில், இதுபோன்ற நீர்மூழ்கி கப்பலை தயாரிக்க சீனா திட்டமிட்டுள்ளதாக, கடந்தாண்டு நவம்பரில், அமெரிக்க ராணுவம் எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ஏரியில் கண்டெடுக்கப்படும் மனித உடல்கள்.. டிரம்ப் மீதான தடையை நீக்கிய எலான் மஸ்க்!

ஹைதி நாட்டில் 8 துருக்கியர்கள் கடத்தல்!

ஹைதியின் தலைநகர் போர்ட் அவ் பிரின்ஸ் நகரில், பஸ்சில் சென்று கொண்டிருந்த, மேற்காசிய நாடான துருக்கியை சேர்ந்த மூன்று பெண்கள் உட்பட எட்டு பேர் கடத்தப்பட்டனர். அவர்கள் நிலை பற்றி தகவல் இல்லை. கடந்த ஆண்டு அக்டோபரில், தலைநகரில் உள்ள தேவாலய ஊழியர்கள் குடும்பத்தினர் 17 பேர் கடத்தப்பட்டனர். கடத்தல் கும்பலை சேர்ந்தவர்கள் நாடு கடத்தப்பட்டதாக கடந்த வாரம், ஹைதி போலீஸ் அறிவித்திருந்த நிலையில் தற்போது எட்டு பேர் கடத்தப்பட்டு இருப்பது அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரிட்டன் பார்லிமென்ட் கூட்டம் உற்சாகத்துடன் துவக்கம்!

பிரிட்டன் பார்லிமென்டின் நடப்பு ஆண்டுக்கான முதல் கூட்டம், நேற்று வழக்கமான உற்சாகத்துடன் துவங்கியது. எனினும், உடல் நிலை பாதிப்பால், ராணி எலிசபெத் பார்லி.,க்கு வரவில்லை. அவரது உரையை இளவரசர் சார்லஸ் படித்தார். இந்த உரையில், கல்வி, விலங்குகள் நலத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் கொண்டு வரப்பட உள்ள சட்ட திருத்தங்கள் உட்பட, பல முக்கிய அம்சங்கள் இடம் பெற்றிருந்தன. பிரதமர் போரீஸ் ஜான்சனுக்கு, கடும் சவால்கள் காத்திருப்பதாக, பிரிட்டன் அரசியல் வல்லுனர்கள் தெரிவித்தனர்.

ஏரியில் கண்டெடுக்கப்படும் மனித உடல்கள்.. டிரம்ப் மீதான தடையை நீக்கிய எலான் மஸ்க்!

ஏரியில் கண்டெடுக்கப்படும் மனித உடல்கள்!

அமெரிக்காவின் மிகப்பெரிய நீர்தேக்கமான மீட் ஏரி காலநிலை மாற்றம் நிலைமையை தொடர்ந்து மோசமாகி முற்றிலுமாக வறண்டு போகும் நிலைக்கு வந்துள்ளது. இந்த நிலையில் வேகமாக சுருங்கி வரும் மீட் ஏரியில் அடுத்தடுத்து மனித உடல்கள் கண்டெடுக்கப்படும் சம்பவம் அங்கு அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. கடந்த 1-ந்தேதி முதன்முறையாக ஏரியின் கரையோரத்தில் சேற்றில் சிக்கிய பீப்பாய் ஒன்றில் ஒரு உடல் கண்டெடுக்கப்பட்டது. இந்த உடல் 1970 அல்லது 80-களில் சுட்டுக்கொல்லப்பட்ட ஒருவருடையது என்று விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த நிலையில் அந்த உடல் கண்டெடுக்கப்பட்ட ஒரு வாரத்துக்கு பின்பு மீட் ஏரியில் இருந்து மேலும் பல மனித உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

டொனால்ட் டிரம்ப் மீதான டுவிட்டர் தடை திரும்பப் பெறப்படும்

டொனால்ட் டிரம்ப் மீதான டுவிட்டர் தடையை திரும்பப் பெறப்போவதாக டெஸ்லா தலைவர் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் கடந்த ஆண்டு ஜனவரி 6ம் தேதி நடந்த வன்முறையைத் தொடர்ந்து, முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் டுவிட்டர் கணக்கு முடக்கப்பட்டது. மேலும், அவருடைய டுவிட்டர் உள்பட தவறான தகவல்களைப் பகிர்ந்ததற்காக, 70,000க்கும் மேற்பட்ட டுவிட்டர் கணக்குகளுக்கு தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories