உலகம்

“ராஜபக்சே தந்தை சிலை தகர்ப்பு.. குடும்பத்தோடு தப்பிக்க திட்டம்?” : பதிலடி கொடுக்கும் இலங்கை மக்கள்!

பிரதமர் பதவியில் இருந்து விலகிய பின்னர் ராஜபக்சே மற்றும் அவரது குடும்பத்தினர் ஹெலிகாப்டர் மூலம் திம்பிரிகஸ்யாக போலிஸ் மைதானத்தில் இருந்து திருகோணமலைக்கு தப்பி ஓடிய காட்சிகள் வெளியாகியுள்ளது.

“ராஜபக்சே தந்தை சிலை தகர்ப்பு.. குடும்பத்தோடு தப்பிக்க திட்டம்?” : பதிலடி கொடுக்கும் இலங்கை மக்கள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

இலங்கையில் கடந்த சில மாதங்களாக கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் அனைவரும் பெரும் இன்னல்களுக்கு ஆளாகி உள்ளனர். தங்களின் வாழ்வாதாரமே கேள்விக்குறியான நிலையில், அத்தியாவசியத் தேவைகளுக்காக மக்கள் போராடி வருகின்றனர்.

இந்த பொருளாதார நெருக்கடிக்கடிக்கு ராஜபக்சே குடும்பத்தினர் எடுத்த தவறான பொருளாதார முடிவுகள் தான் காரணம் என பொதுமக்களும், எதிர்க்கட்சிகளும் தொடர்ந்து குற்றம் சாட்டி, போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஜனாதிபதி கோத்தபய ராஜபக்சேவும், பிரதமர் மகிந்த ராஜபக்சேவும் பதவி விலக வேண்டுமென பொதுமக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தனர். இதன் விளைவாக, ஏற்கனவே ஜனாதிபதி கோத்தபய ராஜபக்சே பதவி விலகிய நிலையில், நேற்று மகிந்த ராஜபக்சேவும் தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார்.

“ராஜபக்சே தந்தை சிலை தகர்ப்பு.. குடும்பத்தோடு தப்பிக்க திட்டம்?” : பதிலடி கொடுக்கும் இலங்கை மக்கள்!

இந்தநிலையில், ராஜபக்சே பதவி விலகியதைத் தொடர்ந்து அவரின் ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்கள் இடையே வன்முறை மூண்டுள்ளது. மேலும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலிஸார் தாக்குதல் நடத்தியதால் பதற்றமான சூழல் நிலவியது. அதுமட்டுமின்றி கொழும்பு அலரி மாளிகைக்கு அருகே அமைக்கப்பட்டிருந்த போராட்டக்காரர்களின் கூடாரங்களைக் கிழித்தெறிந்து தாக்குதல் நடத்தியதால் ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள் பதில் தாக்குதல் நடத்தினர்.

இதனிடையே கொழும்புவின் புறநகர் பகுதியில் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரல தனது காரில் சென்றுக் கொண்டிருந்த போது மர்ம கும்பல் துப்பாக்கி சூடு நடத்தியதில் இருவர் படுகாயமடைந்தனர். மேலும் அமரகீர்த்தி உயிரிழந்து சடலமாக மீட்கப்பட்டார். மேலும் மகிந்த ராஜபக்சேவின் வீட்டை தீ வைத்துக் கொளுத்தியதால் இலைங்கையில் பெரிய அளவில் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது. இலங்கையின் தலைநகரான கொழும்பில் போராட்டம் தீவிரமடைந்ததையொட்டி, அதிக அளவில் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் நாடு முழுதும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

மேலும் அரசுக்கு எதிராக அமைதியான முறையில் நடந்த போராட்டத்தில் ராஜபக்சே ஆதரசாளர்கள் வன்முறையை தூண்டியதாகவும், எனவே அவரை கைது செய்ய வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இந்தநிலையில் பிரதமர் பதவியில் இருந்து விலகிய பின்னர் ராஜபக்சே மற்றும் அவரது குடும்பத்தினர் தலைமறைவாக இருந்தனர்.

இதனிடையே அவரது மகள் யோசிதா வெளிநாட்டிற்கு தப்பியோடிய நிலையில், ராஜபக்சேவின் மனைவியும் ஹெலிகாப்டர் மூலம் திம்பிரிகஸ்யாக போலிஸ் மைதானத்தில் இருந்து திருகோணமலைக்கு தப்பி ஓடிய காட்சிகள் வெளியாகியுள்ளது. அவர்கள் அனைவரும் திருமலையில் உள்ள படை முகாமில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும், ராஜபக்சே குடும்ப உறுப்பினர்கள் மருத்துவ சிகிச்சை என்ற பெயரில் வெளிநாட்டிற்கு தப்பிச் செல்ல இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே பொதுமக்கள் ராஜபக்சே சகோதரர்களின் தந்தை டி.ஏ. ராஜபக்சேவின் சிலையை தகர்த்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories