உலகம்

ட்விட்டரில் கட்டணம் வசூல்.. திட்டத்தை வெளிபடுத்திய எலான் மஸ்க்: பயனர்கள் அதிர்ச்சி!

உலகின் உயரமான பெண் ருமேசா கெல்கி மேலும் 3 கின்னஸ் சாதனைகளை படைத்து அசத்தியுள்ளார்.

ட்விட்டரில் கட்டணம் வசூல்.. திட்டத்தை வெளிபடுத்திய எலான் மஸ்க்: பயனர்கள் அதிர்ச்சி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

‘நான் ஒன்றும் இயந்திர மனிதன் இல்லை’ - கலங்கிய எலான் மஸ்க்!

பொதுவாக உற்சாகமான மனிதராக காணப்படும் எலான் மஸ்க் பிறர் விமர்சனங்களை கண்டுக்கொள்வது கிடையாது. தனக்கு பிடித்ததை மட்டும் தான் செய்வார் என்று கூறப்பட்டு வந்தது. இதுகுறித்து அவர் : “சில சமயம் என் மீது வைக்கப்படும் விமர்சனங்கள் என்னை பாதிக்கும். நான் ஒன்றும் எதை பற்றியும் கவலைப்படாமல் இருப்பதற்கு நான் ஆண்ட்ராய்டு இயந்திரம் கிடையாது. எனக்கும் உணர்ச்சி இருக்கிறது. ஆனால் நான் அவற்றை பெரிதாக கண்டுகொள்ளாமல் கடக்க பார்க்கிறேன். சாதாரண பயனர்கள் டுவிட்டரை இலவசமாக பயன்படுத்தலாம். ஆனால் வணிக நோக்கத்துடன் உள்ள பயனர்களுக்கும், அரசாங்க பயனர்களுக்கும் ட்விட்டரில் கட்டணம் வசூலிக்கப்படும்.” என்று தெரிவித்துள்ளார்.

பூமியில் விழும் ராக்கெட்டை ஹெலிகாப்டர் மூலம் மீட்கும் சோதனை வெற்றி!

அமெரிக்காவை சேர்ந்த ராக்கெட் லேப் என்கிற தனியார் விண்வெளி நிறுவனம் பூமியை நோக்கி விழும் ராக்கெட்டை நடுவானில் ஹெலிகாப்டர் மூலம் மீட்கும் சோதனையை வெற்றிகரமாக நடத்தி சாதனை படைத்துள்ளது. நியூசிலாந்தில் உள்ள மஹியா தீபகற்பத்தில் இருந்து ராக்கெட் லேப் நிறுவனத்தின் எலக்ட்ரான் ராக்கெட் 34 செயற்கைக்கோள்களுடன் விண்ணுக்கு புறப்பட்டது. அதன் பின்னர் ராக்கெட்டின் ‘பூஸ்டர்’ பகுதி பூமியை நோக்கி வந்து கொண்டிருந்தது. அந்த ராக்கெட்டை பிடிக்க ஹெலிகாப்டர் அனுப்பப்பட்டது. அப்போது அந்த ராக்கெட்டின் பாராசூட் மீது ஹெலிகாப்டரில் இருந்து கயிறு மூலம் கொக்கி ஒன்று வீசப்பட்டு, பாராசூட் அப்படியே கப்பென்று பிடிக்கப்பட்டது. எனினும் பாதுகாப்பு கருதி ஹெலிகாப்டர் பிடியில் ராக்கெட் விடுவிக்கப்பட்டு, அது கடலில் விழுந்தது. இருப்பினும் ராக்கெட்டை ஹெலிகாப்டர் மூலம் பிடிக்கும் முதல் முயற்சி வெற்றிப்பெற்றதாக ராக்கெட் லேப் நிறுவனம் அறிவித்துள்ளது.

3 கின்னஸ் சாதனை.!

உலகின் உயரமான பெண் ருமேசா கெல்கி மேலும் 3 கின்னஸ் சாதனைகளை படைத்துள்ளார். உலகின் உயரமான பெண் என்ற கின்னஸ் சாதனையை ஏற்கனவே பெற்று இருப்பவர் துருக்கியைச் சேர்ந்த ருமேசா கெல்கி 7 அடி 7 அங்குலம் உயரம் உடையவர். இந்நிலையில் இவர் தற்போது மேலும் 3 கின்னஸ் சாதனைகளை படைத்துள்ளார். அதாவது உலகின் மிக நீளமான விரல் 11.2 செ.மீ கொண்ட பெண் என்ற சாதனையை இவர் படைத்துள்ளார். மேலும் உலகின் மிகப்பெரிய கைகள் உடைய பெண் என்ற சாதனையும் இவர் வசமாகியுள்ளது. அவரது வலது கை 24.93 செமீ 9.81 அங்குலம் மற்றும் இடது கை அளவு 24.26 செமீ 9.55 அங்குலம் கொண்டதாக உள்ளது. உலகின் நீண்ட முதுகு 59.90 செமீ 23.58 அங்குலம் உடைய பெண் என்பதற்காகவும் தற்போது இவருக்கு கின்னஸ் சாதனை வழங்கப்பட்டுள்ளது.

ட்விட்டரில் கட்டணம் வசூல்.. திட்டத்தை வெளிபடுத்திய எலான் மஸ்க்: பயனர்கள் அதிர்ச்சி!

கண்ணிவெடி தாக்குதலில் இருந்து மீண்ட உற்சாக தம்பதி!

உக்ரைனின் ஒக்ஸானா பலண்டினா - விக்டர் வாசிலிவ் தம்பதியினர் ரஷ்யப் படைகள் வைத்திருந்த கண்ணிவெடி தாக்குதலில் சிக்கியதில் பலாண்டினாவின் இரண்டு கால்களும் துண்டிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், தங்களது திருமண நாளை கொண்டாடும் விதமாக மருத்துவமனை படுக்கையில் ஓய்வில் இருந்த தனது மனைவியை அலேக்காக தூக்கி கட்டிப்பிடித்துக் கொண்டு விக்டர் வாசிலிவ் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். அவர்களின் அன்பை அங்கிருந்தவர்கள் பார்த்து நெகிழ்ந்து போயினர். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

பிரதமர் மோடியுடனான சந்திப்பு குறித்து ஐஸ்லாந்து பிரதமர் பேச்சு!

டென்மார்க்கில் இந்திய பிரதமர் மோடி ஐஸ்லாந்து பிரதமர் கத்தரீன் ஜக்கோப்ஸ்டோட்ரியை சந்தித்தார். இந்திய பிரதமர் மோடியுடனான சந்திப்பிற்கு பின் ஐஸ்லாந்து பிரதமர் கத்தரீன் ஜக்கோப்ஸ்டோட்ரி பேசுகையில், சுற்றுச்சூழல் ஒத்துழைப்பு, புவியின் உள்வெப்பத்தில் இருந்து மின்சாரம் தயாரித்தல், மீன்வளத்துறை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் இந்தியா - ஐஸ்லாந்து பல்வேறு வாய்ப்புகளை கொண்டுள்ளது. இந்திய பிரதமர் மோடியும் நானும் கலாச்சாரம், பாலின சமத்துவம் குறித்து ஆலோசித்தோம். இந்தியாவும் ஐஸ்லாந்தும் வெவ்வேறு நாடுகள். இந்தியாவே ஒரு துணைக்கண்டம். எங்கள் நாடு இயற்கையை பாதிக்காத வகையில் தனித்தன்மை பெற்றுள்ளது. பிரதமர் மோடியும் நானும் யோகா குறித்தும் பேசினோம். யோகா ஐஸ்லாந்தில் மிகவும் பிரபலம். நிறைய மக்கள் யோகா பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்’ என்றார்.

banner

Related Stories

Related Stories