உலகம்

கால்வாயில் கவிழ்ந்த ரிக்சா.. 8 குழந்தைகள் பரிதாப பலி: எகிப்தில் நடந்த துயர சம்பவம்! #5IN1_WORLD

எகிப்தில் நீர்ப்பாசன கால்வாயில் ரிக்சா வண்டி கவிழ்ந்ததில் 8 குழந்தைகள் உயிரிழந்த சோகம் ஏற்பட்டுள்ளது.

கால்வாயில் கவிழ்ந்த ரிக்சா..  
8 குழந்தைகள் பரிதாப பலி:  எகிப்தில் நடந்த துயர சம்பவம்! #5IN1_WORLD
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

1) இஸ்லாமாபாத் நோக்கி பேரணியை தொடங்குங்கள் - இம்ரான்கான் அழைப்பு!

பாகிஸ்தான் பிரதமரான ஷபாஸ் ஷெரீப்பிற்கு எதிராக பேரணியை தொடங்கும்படி ஆதரவாளர்களுக்கு இம்ரான்கான் அழைப்பு விடுத்துள்ளார். ஷபாஸ் ஷெரீப் புதிய பிரதமராக பொறுப்பேற்றதையும் இம்ரான்கான் ஏற்க மறுத்துவருகிறார். இந்நிலையில், தனது பாகிஸ்தான் தெக்ரிக் - ஐ - இன்சஃப் கட்சி ஆதரவாளர்கள் தலைநகர் இஸ்லாமாபாத் நோக்கி பேரணியாக சென்று போராட்டம் நடத்த வேண்டும் என இம்ரான்கான் அழைப்பு விடுத்துள்ளார். மே இறுதி வாரத்தில் ஆதரவாளர்கள் தங்கள் பேரணியை தொடங்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

கால்வாயில் கவிழ்ந்த ரிக்சா..  
8 குழந்தைகள் பரிதாப பலி:  எகிப்தில் நடந்த துயர சம்பவம்! #5IN1_WORLD

2) சோமாலியாவில் கண்ணிவெடி தாக்குதல்; 10 வீரர்கள் உயிரிழப்பு!

சோமாலியாவில் நடந்த கண்ணிவெடி தாக்குதலில் சிக்கி 10 வீரர்கள் உயிரிழந்து உள்ளனர். சோமாலியாவின் தெற்கே ஷாபெல் பகுதியில் ஜவுகர் மாவட்டத்தில் இருந்து பலாட் மாவட்டத்திற்கு ராணுவ வாகனம் ஒன்று சென்று கொண்டிருந்தபோது, கண்ணிவெடி ஒன்று வெடிக்க செய்யப்பட்டு உள்ளது. இந்த தாக்குதலில், வாகனத்தில் இருந்த 10 வீரர்கள் கொல்லப்பட்டனர். அல்-ஷபாப் என்ற, ரஷியாவில் தடை செய்யப்பட்ட அல்-கொய்தா பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்புடைய இயக்கம் இந்த தாக்குதலை நடத்தி உள்ளது.

3) ஸ்வீடனை மிரட்டும் ரஷியா- வான்வெளியில் அத்துமீறி பறந்த போர் விமானம்!

ரஷிய போர் விமானம் அத்துமீறி தங்கள் வான்வெளியில் நுழைந்ததாக ஸ்வீடன் தெரிவித்துள்ளது. போர்ன்ஹோல்ம் தீவு அருகே பால்டிக் கடலில் இந்த அத்துமீறல் நடைபெற்றது. ஸ்வீடன் வான்வெளிக்குள் ரஷிய போர் விமானம் நுழைந்தவுடன், ஸ்வீடன் விமானப்படை விமானங்கள் அதைத் துரத்தியதாகவும் ரஷிய விமானத்தை புகைப்படம் எடுத்துள்ளதாகவும் ஸ்வீடன் பாதுகாப்பு மந்திரி பீட்டர் ஹல்ட்க்விஸ்ட் தெரிவித்துள்ளார். இந்த அத்துமீறல் ஏற்றுக் கொள்ள முடியாது என்றும், தொழில்முறைக்கு புறம்பானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கால்வாயில் கவிழ்ந்த ரிக்சா..  
8 குழந்தைகள் பரிதாப பலி:  எகிப்தில் நடந்த துயர சம்பவம்! #5IN1_WORLD

4) எகிப்தில் கால்வாயில் ரிக்சா கவிழ்ந்ததில் 8 குழந்தைகள் உயிரிழந்த சோகம்

எகிப்தில் நீர்ப்பாசன கால்வாயில் ரிக்சா வண்டி கவிழ்ந்ததில் 8 குழந்தைகள் உயிரிழந்த சோகம் ஏற்பட்டுள்ளது. ரிக்சாவை ஓட்டி சென்ற 19 வயது ஓட்டுனர் மீது உரிமம் பெறாத, முறையாக பராமரிக்காத ரிக்சாவை ஓட்டியதற்காகவும், மனித படுகொலைக்கான குற்றச்சாட்டுகளின் பேரிலும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அந்த நபர் மனித கடத்தல் மற்றும் குழந்தை தொழிலாளர் முறையில் தொடர்புடையவர் என்றும் போலிஸார் சந்தேகிக்கின்றனர். இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

5) ஆப்கானிஸ்தானில் பொதுமக்கள் மீது தொடர் தாக்குதல்; ஐ.நா. கடும் கண்டனம்!

ஆப்கானிஸ்தானில் பொதுமக்கள் மீது தொடர் தாக்குதல் நடத்தியதற்கு ஐ.நா. அமைப்பு கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. குண்டூசில் மசூதி ஒன்றின் மீது ஏப்ரல் 22ந்தேதி நடந்த தாக்குதலில் 25 பேர் உயிரிழந்து உள்ளனர். 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். ஏப்ரல் 28ந்தேதி 2 சிற்றுந்துகளின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதனை ஐ.எஸ். அமைப்பு நடத்தி உள்ளது. இந்த பயங்கரவாத செயல்களுக்கு பொறுப்பு வகிக்கும் பயங்கரவாதிகள், அமைப்புகள், நிதி வழங்குவோர் மற்றும் ஆதரவு தெரிவிப்போர் என அனைவரையும் நீதியின் முன் கொண்டுவர வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது என்றும் ஐ.நா. பாதுகாப்பு அமைப்பு மேற்கொள் காட்டியுள்ளது.

banner

Related Stories

Related Stories