உலகம்

முன்னாள் டென்னிஸ் வீரருக்கு 2 ஆண்டு சிறை.. இங்கிலாந்து நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!

போரிஸ் பெக்கருக்கு இரண்டரை ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

முன்னாள் டென்னிஸ் வீரருக்கு 2 ஆண்டு சிறை.. இங்கிலாந்து நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பாகிஸ்தானில் 18 மணி நேரம் மின் தடை!

பாகிஸ்தானில் கடுமையான எரிசக்தி நெருக்கடி, நாட்டில் நீடித்த மின் தடையை மோசமாக்கியுள்ளது. இதனால், பாகிஸ்தானின் பல பகுதிகள் நீண்ட நேர மின்வெட்டு பிரச்சனையை சந்திது வருகிறது. நகர்ப்புற மையங்கள் 6 முதல் 10 மணிநேரம் வரையிலும், கிராமப்புறங்களில் ஒரு சில பகுதிகள் ஒரு நாளைக்கு சுமார் 18 மணிநேரம் நீடித்த மின்வெட்டுக்கு உள்ளாகிறது என்று உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. எரிபொருள் மற்றும் எரிவாயு பற்றாக்குறை, மற்றும் தேவை மற்றும் விநியோகத்தில் மாறுபாடு நிலவுவதன் காரணமாக மின் உற்பத்தி ஆலைகளில் போதுமான மின்சாரத்தை உற்பத்தி செய்யமுடியவில்லை. இதனால், சுமார் 6,000 முதல் 7,000 மெகாவாட் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரபல புனித தலத்தில் தீ விபத்து!

ஈரான் நாட்டில் வடக்கிழக்கில் மசாத் நகரத்தின் அமைந்துள்ள புனித தலமான இமாம் ரிசா ஆலயத்தில் சுற்றுப்புற சுவர்களின் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைத்தனர். இதில் யாருக்கும் காயமில்லை என கூறப்படுகிறது. சுத்தம் செய்வதற்காக வைக்கப்பட்டிருந்த இயந்திரம் ஒன்றில் ஏற்பட்ட பாதிப்பின் காரணமாக தீப்பற்றி அது ஆலயத்திலும் பரவியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அந்நாட்டை சேர்ந்த காவல்துறையினர் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

முன்னாள் டென்னிஸ் வீரருக்கு 2 ஆண்டு சிறை.. இங்கிலாந்து நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!

பிரேசிலில் 141 அடி உயர இயேசு சிலை அமைப்பு

தென்அமெரிக்க நாடான பிரேசிலின் ரியோ டிஜெனிரோ நகரில் 125 அடி உயர இயேசு சிலை அங்குள்ள கொர்கொவாடோ மலை மீது அமைக்கப்பட்டுள்ளது. இச்சிலை ரியோ நகரம் மற்றும் பிரேசில் நாட்டு சின்னமாக கருதப்படுகிறது. கிறிஸ்ட் தி ப்ரொடெக்டர் (கிறிஸ்து பாதுகாவலர்) என்று பெயரிடப்பட்டுள்ள இந்த இயேசு சிலையின் உயரம் 141 அடியாகும். அங்குள்ள மலை மீது அமைந்துள்ள சிலை உலோக கட்டமைப்பின் மீது கான்கிரீட் மூலம் கட்டப்பட்டுள்ளது. சிலையின் நெஞ்சு பகுதியில் இதய வடிவ ஜன்னல் அமைக்கப்பட்டு இருக்கிறது. அதிலிருந்து நகரை பார்க்க முடியும்.

முன்னாள் டென்னிஸ் வீரருக்கு 2 ஆண்டு சிறை.. இங்கிலாந்து நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!

போரிஸ் பெக்கருக்கு இரண்டரை ஆண்டு சிறை!

போரிஸ் பெக்கருக்கு இரண்டரை ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. ஜெர்மனி முன்னாள் டென்னிஸ் வீரர் போரிஸ் பெக்கர், 54 முன்னாள் நம்பர் -1 வீரர், கிராண்டஸ்லாம், அரங்கில் 6 கோப்பை வென்றவர் 2002-ல் வரி ஏய்ப்பு புகாரில் சிக்கிய இருக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. பிறகு இது நிறுத்தி வைக்கப்பட்டது. இவர் தனது சொத்துக்களை மறைத்து ஏமாற்றுவதாக 20 பிரிவுகளில் வழக்குப்பதியப்பட்டது. இது தொடர்பான வழக்கு இங்கிலாந்தின் சவுத் வார்க் கிரவுன் கோர்ட்டில் நடந்தது. நான்கு பிரிவுகளில் குற்றம் நிரூபிக்கப்பட்ட பெக்கருக்கு இரண்டரை ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

நிலச்சரிவு 12 பெண்கள் பலி

இந்தோனேஷியாவில் உள்ள தங்கச் சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி, 12 பெண்கள் உயிர்இழந்தனர். ஆசிய நாடான இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவில் சட்டவிரோதமாக தங்கச்சுரங்கங்கள் இயங்குகின்றன. இங்கு, மாண்டலிங் நடால் மாவட்டத்தின் உள்ள ஒரு குக்கிராமத்தில் சட்ட விரோத சுரங்கத்தில் தங்கம் வெட்டி எடுக்கப்பட்டு வந்தது. அங்கு, 14 பெண்கள் மண் தோண்டும் வேலை செய்து கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக நிலச் சரிவு ஏற்பட்டு 14 பெண்களும் மண்ணுக்குள் புதைந்தனர். தகவல் அறிந்து வந்த போலீசார் இரண்டு மணி நேரத்துக்கும் மேல் போராடி, 12 பெண்களின் உடல்களை மீட்டனர். இரண்டு பேர் காயங்களுடன் தப்பினர்.

banner

Related Stories

Related Stories