உலகம்

30 ஆண்டுகளாக கழிவறையில் ‘சுடச்சுட’ தயாரான சமோசா.. ஹோட்டலின் கொடூர செயலால் உணவுப் பிரியர்கள் அதிர்ச்சி!

சவூதி அரேபியாவில் உள்ள பிரபலமான உணவகம் ஒன்றில் 30 ஆண்டாக கழிவறையில் சமோசா தயாரிக்கப்பட்ட சம்பவம் உணவு பிரியர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

30 ஆண்டுகளாக கழிவறையில் ‘சுடச்சுட’ தயாரான சமோசா..  ஹோட்டலின் கொடூர செயலால் உணவுப் பிரியர்கள் அதிர்ச்சி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சவூதி அரேபியா நாட்டில் உள்ள ஜெட்டா நகரில் பிரபலமான உணவகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த உணவகத்தின் மீது அண்மைக் காலமாகச் சுகாதாரம் மற்றும் உணவுத்துறை அதிகாரிகளுக்குத் தொடர் புகார்கள் வந்துள்ளன.

இதையடுத்து, உணவுத்துறை அதிகாரிகள் அதிரடியாக அந்த உணவகத்தில் ஆய்வு செய்தனர். அப்போது அந்த உணவகத்தின் கழிவறையில் 30 ஆண்டுகளாக சமோசா தயாரிக்கப்பட்டு வந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

மேலும் இரண்டு ஆண்டுகள் பழைய இறைச்சியை பதப்படுத்திப் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. மேலும் சமையல் அறையில் பூச்சிகள் மற்றும் எலிகள் காணப்பட்டுள்ளன. இதையடுத்து அதிகாரிகள் அந்த உணவகத்தைப் பூட்டி அதிரடியாக சீல் வைத்தனர். சவுதி அரேபியாவில் இப்படி உணவகம் சீல் வைப்பது இது முதல் முறையல்ல.

ஏற்கனவே இந்த ஜெட்டா நகரத்திலேயே செயல்பட்டு வந்த ஷவர்மா உணவகத்தில் எலிகள் காணப்பட்டதை அடுத்து உணவகம் மூடப்பட்டது. இந்த சம்பவத்தை அடுத்து சுகாதார அதிகாரிகள் அதிரடியாக ஆய்வு செய்து 26 உணவகங்களை மூடியுள்ளனர். தற்போது மீண்டும் சுகாதாரமற்ற முறையில் செயல்பட்டு வந்த உணவகத்திற்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories