வைரல்

பென்ஸ் கார் வாங்கிய ’மாஸ்டர் செஃப்’ புகழ் செஃப் சுரேஷ்.. கொண்டாடும் நெட்டிசன்கள்.. என்ன காரணம் தெரியுமா?

செஃப் சுரேஷ் பிள்ளை முதல் முறையாக ப்ரீமியம் ரக பென்ஸ் காரை வாங்கியிருக்கிறார். இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பென்ஸ் கார் வாங்கிய ’மாஸ்டர் செஃப்’ புகழ் செஃப் சுரேஷ்.. கொண்டாடும் நெட்டிசன்கள்.. என்ன காரணம் தெரியுமா?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கேரளாவைச் சேர்ந்த பிரபல செஃப் சுரேஷ் பிள்ளை முதல் முறையாக ப்ரீமியம் ரக பென்ஸ் காரை வாங்கியிருக்கிறார். இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கொல்லம் மாவட்டத்தைச் சேர்ந்த சுரேஷ் பிள்ளை, லண்டனில் நடந்த பிபிசி-ன் மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் உலகம் அறிந்த பிரபலமானார். சுமார் 15 ஆண்டுகளாக லண்டனில் தங்கி மூத்த சமையல் வல்லுநராக இருந்தும் தனக்கென சொந்தமாக ஒரு வாகனத்தை கூட வாங்காமலேயே சுரேஷ் பிள்ளை இருந்திருக்கிறார்.

தற்போது கொல்லம் பகுதியில் உள்ள பிரபல நட்சத்திர ஹோட்டலில் சமையல் கலை இயக்குநராக இருக்கிறார் சுரேஷ். இந்த நிலையில், தன்னுடைய 43 வயதில் செஃப் சுரேஷ் பிள்ளை தனக்கென S ரக பென்ஸ் காரை வாங்கியிருக்கிறார்.

இது தொடர்பான புகைப்படங்களை பகிர்ந்திருக்கும் செஃப் சுரேஷ் பிள்ளை, “கனவுகள் காண்பதற்காக மட்டுமல்லாமல், அதனை அள்ளிக்கொள்ளவும் தயாராகிவிட்டேன், அன்பானவர்கள் அனைவரும் விரும்பும் வகையில் ஒரு பென்ஸ் காரை இப்போதுதான் வாங்கியிருக்கிறேன்.

பொறுமையாக காத்திருந்து முயற்சித்தா முடியாது என எதுவும் இல்லை” எனவும் குறிப்பிட்டிருக்கிறார். அவரது பதிவுக்கு பலரும் நெகிழ்ச்சி ததும்ப வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்த பதிவுகளும், புகைப்படங்களும் தற்போது வைரலாகி வருகிறது.

இதே போன்று, குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பெரும் பிரபலமான செஃப் வெங்கடேஷ் பட் கடந்த ஆண்டு பி.எம்.டபிள்.யூ X7 ரக கார் வாங்கிய போது இணையவாசிகளிடையே பெரும் வரவேற்பையும், வாழ்த்துகளையும் பெற்றிருந்தது.

ஏனெனில், சமூக வலைதளங்களின் எழுச்சியின் மூலம் வெகு விரைவில் பிரபலமாகி அதனை தொடர்ந்து ஆடம்பர வாழ்வை நோக்கி நகர்வோருக்கு மத்தியில், பல ஆண்டுகளாக பிரபலமாகவே இருந்து வந்தாலும் சமூகத்தில் ஒரு கட்டத்திற்கு வந்த பிறகே இது போன்ற ஆடம்பர வாழ்வை நோக்கி நகரும் போது காண்போரை நெகிழ்ச்சியடைய வைக்கிறது என பதிவுகள் பதிவிடப்பட்டு வருகிறது.

banner

Related Stories

Related Stories