இந்தியா

ஒன்றல்ல.. இரண்டல்ல.. 22 ஆண்டுகளாக உடன் பயணித்த ஊழியர் : கப்பல் போன்ற காரை பரிசளித்த கேரள தொழிலதிபர்!

தனது தொழிலாளிக்கு பென்ஸ் காரை பரிசளித்து ஆச்சர்யத்தில் ஆழ்த்தியிருக்கிறார் கேரள தொழிலதிபர் ஷாஜி.

ஒன்றல்ல.. இரண்டல்ல.. 22 ஆண்டுகளாக உடன் பயணித்த ஊழியர் : கப்பல் போன்ற காரை பரிசளித்த கேரள தொழிலதிபர்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கேரளாவில் தனது MyG நிறுவனத்தின் மூலம் டிஜிட்டல் மார்க்கெட்டிங், சில்லறை வர்த்தக வியாபாரம் செய்து வருபவர் தொழிலதிபர் ஏ.கே.ஷாஜி.

ஷாஜியின் MyG நிறுவனம் தொடங்கப்பட்ட ஆண்டு முதல் 22 ஆண்டுகளாக அவருடன் தொடர்ந்து பணியாற்றி வருபவர் அனிஷ். MyG நிறுவனத்தில் மார்க்கெட்டிங், மேம்பாட்டு பிரிவு என அனைத்திலும் பணியாற்றியுள்ளார் அனிஷ்.

இந்த நிலையில், நிறுவனத்துக்கான அவரது பங்களிப்பை பாராட்டும் வகையில் நிறுவனர் ஷாஜி அனிஷுக்கு Mercedes-Benz GLA Class 220 d என்ற உயர் ரக காரை பரிசாக வழங்கியுள்ளார்.

இந்த விழாவின் போது அவரது நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் பலரும் பங்கேற்றிருந்தனர். அனிஷுக்கு கார் பரிசளித்தது தொடர்பான தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள ஷாஜி, “22 ஆண்டுகளாக வலுவான தூணாக என்னுடன் பயணித்திருக்கிறீர்கள். இனி கப்பல் போன்ற ஒரு பயணம் உங்களுக்கு கிட்டும் என நம்புகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதுபோக, ஊடகங்களுக்கு அளித்த பேட்டியின் போது, “அனிஷ் வெறும் ஊழியர் மட்டுமல்ல. நாங்கள் இருவரும் பிஸ்னஸ் பார்ட்னர்ஸ். எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது” எனக் கூறியுள்ளார்.

முன்னதாக, இதேப்போன்று தனது நிறுவனத்தில் பணியாற்றிய ஆறு ஊழியர்களுக்கு தலா ஒரு காரை பரிசாக கொடுத்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அனிஷுக்கு ஷாஜி பென்ஸ் கார் பரிசளித்த வீடியோவும், ஃபோட்டோவும் சமூக வலைதளங்களில் வைரலாகி பாராட்டையும் வரவேற்பையும் பெற்று வருகிறது.

banner

Related Stories

Related Stories