உலகம்

ட்விட்டரை அடுத்து COCA COLA-வை டார்கெட் செய்யும் எலான் மஸ்க் - கதிகலங்கும் கார்ப்பரேட் உலகம்!

கோகோ கோலா நிறுவனத்தை வாங்க போவதாக உலகின் நம்பர் ஒன் பணக்காரன் எலான் மஸ்க் ட்வீட் செய்துள்ளார்.

ட்விட்டரை அடுத்து COCA COLA-வை  டார்கெட் செய்யும் எலான் மஸ்க் - கதிகலங்கும் கார்ப்பரேட் உலகம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ட்விட்டரை அடுத்து கோகோ கோலாவை வாங்கும் எலான் மஸ்க்!

ட்விட்டர் நிறுவனத்தின் உரிமையாளராக எலான் மாஸ்க் டுவிட்டரில் பல்வேறு பதிவுகளை வெளியிட்டு வருகிறார். முதலில் கருத்து சுதந்திரம் குறித்து பேசிய அவர், ட்விட்டர் சமூக வலைதளத்தை மகிழ்ச்சியாகவே அதிகம் பயன்படுத்துவோம் எனவும் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். மேலும், கொகைனை அடைத்து வைப்பதற்காக கோகோ கோலா, மெக் டொனால்ட்ஸ் ஆகிய நிறுவனங்களை வாங்க போகிறேன் என்று கிண்டலாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள எலான் மஸ்க், என்னால் அற்புதங்களை நிகழ்த்த முடியாது என்பதையும் புரிந்து கொள்ளுங்கள் என்று குறிப்பிட்டிருந்தார்.

உக்ரைன் அதிபர் - ஐ.நா. பொதுச்செயலர் இன்று சந்திப்பு!

ரஷ்யா, உக்ரைன் இடையே சமரசம் வேண்டி ஐ.நா. பொதுச்செயலர் அன்டோனியோ குட்டரெஸ் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நேற்று முன்தினம் ரஷ்யா சென்று, அதிபர் விளாடிமிர் புடினையும், வெளியுறவு அமைச்சர் செர்ஜி லவ்ரோவையும் அவர் சந்தித்து பேசினார். இதன் தொடர்ச்சியாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்தும் பேச திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சந்திப்பின் போது உக்ரைன் விவகாரம் குறித்து ஆலோசிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜெர்மனியில் புதிதாக 98,562 பேருக்கு கொரோனா பாதிப்பு!

ஜெர்மனியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 98,562 கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஜெர்மனியில் கொரோனா வைரஸ் மற்றும் ஓமைக்ரான் பரவலால், நாடு முழுவதும் பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. கொரோனா தொற்றுக்கு ஒரேநாளில் மேலும் 205 பேர் உயிரிழந்ததால், அங்கு பலியானோர் எண்ணிக்கை 1 லட்சத்து 35 ஆயிரத்து 329 ஆக உயர்ந்துள்ளது. ஜெர்மனியில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து 2,16,65,200 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது 26,61,412 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

ட்விட்டரை அடுத்து COCA COLA-வை  டார்கெட் செய்யும் எலான் மஸ்க் - கதிகலங்கும் கார்ப்பரேட் உலகம்!

ரஷ்யாவில் மழலையர் பள்ளிக்கூடத்துக்குள் புகுந்து துப்பாக்கிச்சூடு: 4 பேர் பலி!

ரஷ்யாவில் மழலையர் பள்ளிக்கூடத்துக்குள் புகுந்து நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில், 2 குழந்தைகள் உள்பட 4 பேர் பலியாகினர். ரஷ்யாவின் மத்திய பகுதியில் அமைந்துள்ள மழலையர் பள்ளிக்கூடத்தில் வழக்கம் போல் வகுப்புகள் நடந்து கொண்டிருந்தன. அப்போது திடீரென பள்ளிக்கூடத்துக்குள் ஒரு மர்ம நபர் நுழைந்தார். அந்த மர்ம நபர் சற்றும் ஈவு இரக்கமின்றி தொடர்ந்து கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டார். இதில் 6 வயதுக்குட்பட்ட 2 குழந்தைகளும், ஆசிரியர் ஒருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதையடுத்து தாக்குதலில் ஈடுபட்ட அந்த மர்ம நபர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த துப்பாக்கிச்சூட்டுக்கான காரணம் என்ன? துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் யார்? என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

குவாட் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடியுடன் பைடன் சந்திப்பு!

ஜப்பானில் அடுத்த மாதம் நடைபெறும் குவாட் உச்சி மாநாட்டில் இந்திய பிரதமர் மோடியை சந்தித்து பைடன் பேசுவார் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. வருகிற மே 20 முதல் 24 வரை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தென்கொரியா மற்றும் ஜப்பானுக்கு பயணம் மேற்கொள்கிறார். இதனை முன்னிட்டு வெள்ளை மாளிகையின் ஊடக செயலாளர் ஜென் சாகி வெளியிட்டுள்ள செய்தியில், அடுத்த மாதம் ஜப்பானில் நடைபெறும் குவாட் உச்சி மாநாட்டில் பைடன் கலந்து கொள்வார். இதில், இந்திய பிரதமர் மோடியை சந்தித்து பேசுவார். இந்தோ-பசிபிப் பகுதியில் ஒரு வெளிப்படையான மற்றும் திறந்த நிலையிலான பைடன்-ஹாரிஸ் அரசின் உறுதியான ஈடுபாட்டை முன்னேற்றம் அடைய செய்யும் வகையில் இந்த சுற்றுப்பயணம் அமையும் என்று தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories