உலகம்

#5IN1_WORLD : பில் கேட்ஸை உருவக் கேலி செய்த எலான்.. ட்விட்டரில் வைரலாகும் மஸ்க்கின் பதிவு!

மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸை உலகின் நம்பர் 1 பணக்காரரான எலான் மஸ்க் உருவக் கேலி செய்துள்ளது அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

#5IN1_WORLD : பில் கேட்ஸை உருவக் கேலி செய்த எலான்.. ட்விட்டரில் வைரலாகும் மஸ்க்கின் பதிவு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

1) இடைக்கால அரசு அமைக்க இலங்கை பிரதமர் மறுப்பு!

மாறுபட்ட கொள்கைகளுடன் இருப்பவர்கள், நேருக்கு நேர் பார்க்கக் கூட விரும்பாதவர்கள் ஒன்றுசேர்ந்து இடைக்கால அரசு அமைத்தால் என்ன பலன் இருக்கும். அவர்களிடம் ஒருமித்த கருத்து ஏற்பட வாய்ப்பில்லை. ஒருவேளை இடைக்கால அரசு தேவையெனில் அது என் தலைமையில் தான் அமையும். மக்கள் பொருளாதார நெருக்கடியை சகித்துக் கொண்டு பொறுமை காக்க வேண்டும். அரசுடன் பேச்சு நடத்த விரும்பவில்லையெனில் தொடர்ந்து போராடட்டும். இவ்வாறு இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே கூறியுள்ளார்.

2) தேசிய கம்யூனிஸ்ட் பிரதிநிதியாக சீன அதிபர் ஜிங்பிங் தேர்வு

இந்தாண்டு இறுதியில் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 20வது தேசிய மாநாடு நடக்க உள்ளது. இம்மாநாட்டு பிரதிநிதி தேர்விற்கு ஜிங்பிங்கை சீன கம்யூனிஸ்ட் மத்திய குழு தேர்வு செய்துள்ளது. இதையடுத்து மாகாண வாரியாக பிரதிநிதி தேர்வு நடந்து பெரும்பான்மை ஆதரவை பெறுவோர் கட்சித் தலைவராகி பின், அதிபராக தேர்வு செய்யப்படுவார். இதன்படி குவாங்ஸி மாகாணத்தில் நடந்த பிராந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில், ஜிங்பிங் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

#5IN1_WORLD : பில் கேட்ஸை உருவக் கேலி செய்த எலான்.. ட்விட்டரில் வைரலாகும் மஸ்க்கின் பதிவு!

3) பாகிஸ்தான் வீரர்கள் மூவர் உயிரிழப்பு

நம் அண்டை நாடான பாகிஸ்தானின் வடக்கு வஜிரிஸ்தான் மாகாணத்தில் உள்ள தேவாககர் கிராமம் அருகே ஆப்கானிஸ்தான் எல்லை உள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்த பயங்கரவாதிகள் சிலர் எல்லையை தாண்டி வந்து பாகிஸ்தான் ராணுவ முகாம் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். பாகிஸ்தான் ராணுவமும் திருப்பித் தாக்கியது. இச்சண்டையில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் மூன்று பேர் உயிரிழந்தனர்.

4)பில் கேட்ஸை உருவக் கேலி செய்த எலான் மஸ்க்

மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸை உருவக் கேலி செய்துள்ளார் உலகின் நம்பர் 1 பணக்காரரான எலான் மஸ்க். கடந்த மார்ச் மாதம் ஆப்பிள் நிறுவனம் தனது போன்களின் இயங்குதளத்தை iOS 15.4-க்கு அப்டேட் செய்திருந்தது. அதில் 37 எமோஜிகள் புதிதாக சேர்க்கப்பட்டன. அதில் ஆண் ஒருவர் பலூன் போல உப்பிய வயிற்றை கொண்டிருக்கும் எமோஜியும் இடம்பெற்றிருந்தது. இந்நிலையில், அந்த உப்பிய வயிறு கொண்ட எமோஜியையும், பில் கேட்ஸ் புகைப்படத்தையும் இணைத்த படம் ஒன்றை ட்வீட்டில் பகிர்ந்துள்ளார் மஸ்க்.

5)ஈரான் - சவுதி இடையே நடந்த 5வது சுற்று பேச்சுவார்த்தை

ஈரானும் சவூதி அரேபியாவும் ஐந்தாவது சுற்று நேரடிப் பேச்சுவார்த்தையை பாக்தாத்தில் நடத்தியதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதனை ஈரான் பாதுகாப்புத் துறை உறுதிப்படுத்தியுள்ளது. பேச்சுவார்த்தையில் ஈரானின் சுப்ரீம் நேஷனல் செக்யூரிட்டி கவுன்சில் பிரதிநிதிகள் மற்றும் சவுதி அரேபியாவின் உளவுத்துறை தலைவர் காலித் பின் அலி அல் ஹுமைதான் ஆகியோர் கலந்துகொன்டனர். இதில் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மீண்டும் நிலைநிறுத்துவதற்கான முக்கிய சவால்கள், எதிர்காலத்திற்கு தேவையான நேர்மறையான சூழல்களை உருவாக்குவது குறித்து விவாதிக்கப்பட்டது' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

banner

Related Stories

Related Stories